இது பபுள்-கம் இல்லை டிஸ்பிளே தான்.! இழுக்க-இழுக்க விரியும் புது Samsung ஸ்கிரீன் அறிமுகம்.!

|

லாஸ் வேகாஸில், CES 2023 (நுகர்வோர் எலெக்ட்ரானிக்ஸ் ஷோ - Consumer Electronics Show) நிகழ்வு அதிகாரப்பூர்வமாக இன்று தொடங்கியது. இந்த ஆண்டு நிகழ்வில் பலவிதமான புதுமையான தொழில்நுட்பங்கள் மற்றும் தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. CES 2023 இல் என்ன புதிய மற்றும் அற்புதமான முன்னேற்றங்கள் வெளியிடப்படும் என்பதைப் பல தொழில் வல்லுநர்கள் மற்றும் நுகர்வோர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் சாம்சங் (Samsung) குஷி அடைய செய்துள்ளது.

கோலாகலமாக துவங்கியது CES 2023 நிகழ்வு

கோலாகலமாக துவங்கியது CES 2023 நிகழ்வு

தொழில்நுட்பத் துறையில் முதன்மையான நிகழ்வுகளில் ஒன்றாக, CES நிறுவனங்கள் தங்களின் மிகச் சிறந்தவற்றைக் காட்சிப்படுத்துவதற்கான ஒரு தளமாகத் திகழ்கிறது.

விசித்திரமான தொழில்நுட்ப யோசனைகள் மற்றும் தயாரிப்புகள் என்று பலவிதமான கண்டுபிடிப்புகள் இந்த நிகழ்வில் அறிமுகம் செய்யப்படுவது வழக்கம், இந்த ஆண்டின் CES 2023 நிகழ்வும் அப்படியான ஒன்று தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

வாவ்..! என்று அனைவரையும் வாய் பிளக்க வைத்த சாம்சங்.!

வாவ்..! என்று அனைவரையும் வாய் பிளக்க வைத்த சாம்சங்.!

CES 2023 ஆம் ஆண்டிற்கான நிகழ்வு இன்று துவங்கியது. இன்றைய தினத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த மிகவும் விசித்திரமான மற்றும் புதிய படைப்பாக சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்த ஃப்ளெக்சிபிள் ஹைப்ரிட் ஓஎல்இடி டிஸ்பிளே காட்சியளித்துள்ளது. இந்த டிஸ்பிளேவை நீங்கள் மடிக்கவும் செய்யலாம், உங்கள் விருப்பம் போல விரிவாக்கம் செய்யவும் அனுமதிக்கிறது.

வெயிட் பண்ணுன காலம் முடிந்துவிட்டது: OnePlus 11 நாளை அறிமுகம்.! லைவ் பார்ப்பது எப்படி?வெயிட் பண்ணுன காலம் முடிந்துவிட்டது: OnePlus 11 நாளை அறிமுகம்.! லைவ் பார்ப்பது எப்படி?

போல்டப்பில் மற்றும் ஸ்லைடு என இரண்டு வேலைகளையும் செய்யும் உலகின் முதல் டிஸ்பிளே.!

போல்டப்பில் மற்றும் ஸ்லைடு என இரண்டு வேலைகளையும் செய்யும் உலகின் முதல் டிஸ்பிளே.!

உண்மையைச் சொல்லப் போனால், எலாஸ்டிக் போல இழுக்க-இழுக்க இந்த டிஸ்பிளே ஒரு குறிப்பிட்ட அளவு வரை விரிவடைகிறது. சாம்சங் ஃப்ளெக்ஸ் ஹைப்ரிட் OLED பேனல் ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள் மற்றும் லேப்டாப்கள் போன்ற எதிர்கால சாதனங்களில் பயன்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இது போல்டப்பில் மற்றும் ஸ்லைடு ஆகிய இரண்டு திறனையும் கொண்டுள்ளதால், இது இன்னும் பெரியளவிலான பயனை வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

சிறிய டிஸ்பிளேவில் இருந்து பெரிய டிஸ்பிளேவிற்கு நொடியில் மாறலாம்.!

சிறிய டிஸ்பிளேவில் இருந்து பெரிய டிஸ்பிளேவிற்கு நொடியில் மாறலாம்.!

இந்த தொழில்நுட்பம் டிஸ்பிளேகளை காம்பெக்ட் ஆக பேக் செய்யக்கூடிய மேம்பட்ட சிறிய சாதனங்களை உருவாக்க அனுமதிக்கிறது. அதேநேரத்தில், பயனரின் விருப்பம் போல தேவைப்படும் போது பெரிய டிஸ்பிளேவிற்கு மாறவும் அனுமதிக்கிறது.

இந்த டிஸ்பிளே 10.5' இன்ச் ஃப்ளெக்ஸ் ஹைப்ரிட் OLED திரை 4:3 விகிதத்தைக் கொண்டுள்ளது. மேலும் இது 16:10 விகிதத்துடன் 12.4' இன்ச் திரையாகத் திறக்கப்பட அனுமதிக்கிறது.

செவ்வாயில் பனிப்பொழிவு - NASA.! பூமி போல உறைந்து நிறம் மாறுகிறதா ரெட் பிளானட்.!செவ்வாயில் பனிப்பொழிவு - NASA.! பூமி போல உறைந்து நிறம் மாறுகிறதா ரெட் பிளானட்.!

கேம்-சேஞ்சராக மாறிய சாம்சங்கின் ஃபிளேக்சிபில் டிஸ்பிளே.!

கேம்-சேஞ்சராக மாறிய சாம்சங்கின் ஃபிளேக்சிபில் டிஸ்பிளே.!

திரைப்படங்களைப் பார்ப்பது அல்லது அலுவலக டாக்குமென்டில் பணிபுரிவது போன்ற சில பணிகளுக்குப் பெரிய டிஸ்பிளே தேவைப்படும் சாதனங்களுக்கு இந்தத் தொழில்நுட்பம் கேம்-சேஞ்சராக இருக்கப் போகிறது.

OLED பேனலின் நெகிழ்வான தன்மை என்பது, பயன்பாட்டில் இல்லாத போது, ​​அதை எளிதாக மடித்துக் கொள்ளலாம், ஒட்டுமொத்தமாக இது மிகவும் கச்சிதமான பெரிய பயன் கொண்ட சிறிய சைஸ் சாதனத்தை அடைய அனுமதிக்கிறது.

சாம்சங் டிஸ்ப்ளே CES 2023 இல் ஃப்ளெக்ஸ் ஸ்லைடபிள் சோலோ மற்றும் ஃப்ளெக்ஸ் ஸ்லைடபிள் டூயட்

சாம்சங் டிஸ்ப்ளே CES 2023 இல் ஃப்ளெக்ஸ் ஸ்லைடபிள் சோலோ மற்றும் ஃப்ளெக்ஸ் ஸ்லைடபிள் டூயட்

ஃப்ளெக்ஸ் ஹைப்ரிட் OLEDக்கு கூடுதலாக, சாம்சங் டிஸ்ப்ளே CES 2023 இல் ஃப்ளெக்ஸ் ஸ்லைடபிள் சோலோ மற்றும் ஃப்ளெக்ஸ் ஸ்லைடபிள் டூயட் ஆகியவற்றைக் காண்பிக்கும்.

இந்த இரண்டு OLED பேனல்களையும் ஸ்லைடு செய்வதன் மூலம் டிஸ்பிளே அளவை நாம் நீட்டிக்க முடியும். ஃப்ளெக்ஸ் ஸ்லைடபிள் சோலோ 14 அங்குல திரையில் இருந்து 17.3' இன்ச் வரை விரிவடைகிறது.

ஃப்ளெக்ஸ் ஸ்லைடபிள் டூயட் 14' இன்ச் திரையில் இருந்து 17.3' இன்ச் திரை வரை இருபுறமும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

நியூ-இயர் கிஃப்ட் பார்சலில் 4 மனித மண்டை ஓடுகள்.! எங்கிருந்து யாருக்கு அனுப்பப்பட்டது தெரியுமா?நியூ-இயர் கிஃப்ட் பார்சலில் 4 மனித மண்டை ஓடுகள்.! எங்கிருந்து யாருக்கு அனுப்பப்பட்டது தெரியுமா?

எப்போது இந்த டிஸ்பிளே பயன்பாட்டிற்கு கிடைக்கும்?

எப்போது இந்த டிஸ்பிளே பயன்பாட்டிற்கு கிடைக்கும்?

இந்த தொழில்நுட்பம் குறிப்பாக லேப்டாப்கள் போன்ற சாதனங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும், தனி மானிட்டர் தேவையில்லாமல் பயனர்களுக்கு பெரிய டிஸ்பிளேவை அடைய இது பெரிதும் பயனளிக்கிறது.

சாம்சங் OLED சந்தையில் புதுமைக்கான நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. சாம்சங் அறிமுகம் செய்துள்ள இந்த புதிய டிஸ்பிளே எப்போது, எந்த சாதனத்தில் அறிமுகம் செய்யப்படும் என்ற தகவலை நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை.

Best Mobiles in India

English summary
Samsung Unveils Flexible Hybrid OLED Display That Can Fold and Slide At CES 2023

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X