மலிவான விலையில் ப்ளூடூத் காலிங் வசதியுடன் பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்.!

|

கடந்த சில வாரங்களில் பல முன்னணி நிறுவனங்கள் தங்களது நவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை அறிமுகம் செய்துவிட்டன. இந்நிலையில் பிரபலமான பிளே நிறுவனம் இந்தியாவில் புதிய பிளேஃபிட் டயல் 3 ஸ்மார்ட்வாட்ச்-ஐ அறிமுகம் செய்துள்ளது. அதுவும் பட்ஜெட் விலையில்.

பிளேஃபிட் டயல் 3 ஸ்மார்ட்வாட்ச்
முதலில் பிளேஃபிட் டயல் 3 ஸ்மார்ட்வாட்ச் மாடலின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது பிளேஃபிட் டயல் 3 ஸ்மார்ட்வாட்ச் ஆனது 1.8-இன்ச் சதுரங்க வடிவம் கொண்ட ஐபிஎஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது. பின்பு 500 நிட்ஸ் பிரைட்னஸ் மற்றும் கஸ்டமைஸ் செய்யக்கூடிய வாட்ச் ஃபேஸ்கள் கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ப்ளூடூத் காலிங் வசதியுடன் பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்.!

புதிய பிளேஃபிட் டயல் 3 ஸ்மார்ட்வாட்ச் மாடலில் இதய துடிப்பு சென்சார், ரத்த அழுத்தம், கலோரி, உறக்கம் மற்றும் ஏராளமான உடல்நல அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. எனவே பயனர்கள் இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலை நம்பி வாங்கலாம். அதேபோல் இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலில் 2 வாட் ஸ்பீக்கர், அதிகபட்சம் ஐந்து நாட்களுக்கான பிளேடைம், 15 நாட்களுக்கு ஸ்டாண்ட் பை உள்ளது.

ஏராளமான பயிற்சி மோட்கள்
குறிப்பாக பிளேஃபிட் டயல் 3 ஸ்மார்ட்வாட்ச் மாடலில் ஏராளமான பயிற்சி மோட்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை பயனர்களின் உடலை கட்டுக்கோப்பாக வைக்க உதவுகிறது. அதேபோல் அழைப்புகள் மற்றும் குறுந்தகவல் வரும் போது இந்த ஸ்மார்ட்வாட்ச் வைப்ரேட் ஆகும் வசதியைக் கொண்டுள்ளது என நிறுவனம் கூறியுள்ளது. கண்டிப்பாக இந்த வசதி மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.

மேலும் பிளேஃபிட் டயல் 3 ஸ்மார்ட்வாட்ச் மாடல் ஆனது வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதிஇ வாய்ஸ் அசிஸ்டண்ட் அம்சத்தை கொண்டு வெளிவந்துள்ளது. பின்பு ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் சாதனங்களுடன் இணைந்த இயங்கும் திறன் கொண்டது இந்த பிளேஃபிட் டயல் 3 ஸ்மார்ட்வாட்ச். புளூ, சில்வர் மற்றும் கிரே என மூன்று நிறங்களில் பிளேஃபிட் டயல் 3 ஸ்மார்ட்வாட்ச் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பிளேஃபிட் டயல் 3 ஸ்மார்ட்வாட்ச் விலை
பிளேஃபிட் டயல் 3 ஸ்மார்ட்வாட்ச் மாடலின் விலை ரூ.3,999-ஆக உள்ளது. ஆனால் அறிமுக சலுகையாக இந்த பிளேஃபிட் டயல் 3 ஸ்மார்ட்வாட்ச் மாடலை ரூ.2,999-விலையில் வாங்க முடியும். பின்பு பிளே அதிகாரப்பூர்வ வலைதளம், முன்னணி ஆன்லைன் தளங்களில் இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலை வாங்க முடியும்.

ஃபயர் போல்ட் ராக்கெட்

அதேபோல் சமீபத்தில் ஃபயர் போல்ட் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்துள்ளது. அதாவது ஃபயர் போல்ட் நிறுவனம் தற்போது ஃபயர் போல்ட் ராக்கெட் எனும் பெயரில் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஃபயர் போல்ட் ராக்கெட் ஆனது 1.3-இன்ச் எச்டி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் 240×240 பிக்சல்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்வாட்ச். அதேபோல் வலது புறம் பட்டன், IP67 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியுடன் இந்த புதிய ஃபயர் போல்ட் ராக்கெட் ஸ்மார்ட்வாட்ச் வெளிவந்துள்ளது.

ப்ளூடூத் காலிங் வசதியுடன் பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்.!

ஃபயர் போல்ட் ராக்கெட் ஸ்மார்ட்வாட்ச் மாடலில் ஏராளமான வாட்ச் ஃபேஸ்கள் உள்ளன. மேலும் ஸ்லீப் டிராக்கர், 100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்வாட்ச் வெளிவந்துள்ளது. அதேபோல் ஃபயர் போல்ட் ராக்கெட் ஸ்மார்ட்வாட்ச் மாடலில் ஸ்டெப், டிஸ்டன்ஸ், கலோரி என ஏராளமான அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

ஃபயர் போல்ட் ராக்கெட் ஸ்மார்ட்வாட்ச் விலை
பில்ட்-இன் ஸ்பீக்கர், மைக்ரோபோன் வசதியைக் கொண்டுள்ளது இந்த ஃபயர் போல்ட் ராக்கெட் ஸ்மார்ட்வாட்ச். எனவே இதன் மூலம் ப்ளூடூத் இணைப்பில் பயனர்கள் அழைப்புகளை மேற்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் சிரி போன்ற அம்சங்களைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்வாட்ச். இந்தியாவில் ஃபயர் போல்ட் ராக்கெட் ஸ்மார்ட்வாட்ச் மாடலின் விலை ரூ.2,499-ஆக உள்ளது. பின்பு இதன் விற்பனை ஃபயர் போல்ட் வலைத்தளத்தில் நடைபெறுகிறது.

Best Mobiles in India

English summary
Playfit Dial3 smartwatch with 1.8-inch Display Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X