எவன் டா இந்த வேலையை பார்த்தது? ஃபிரிட்ஜ் டோரில் 32-இன்ச் டிவி.. எந்த கம்பெனினு சொன்னா ஷாக் ஆகிடுவீங்க!

|

ஒரு ஃபிரிட்ஜின் டோரில் ஒரு டிஸ்பிளே இருப்பது - முற்றிலும் புதிய விஷயம் அல்ல. ஆனால் அந்த டிஸ்பிளேவின் அளவு 32-இன்ச் என்பது முற்றிலும் புதிய விஷயம் ஆகும்!

அதென்ன ஃபிரிட்ஜ்? அந்த ஃபிரிட்ஜில் இருப்பது வெறும் டிஸ்பிளே மட்டும்தானா? அல்லது ஒரு ஸ்மார்ட் டிவி-ஆ? இது எந்த நிறுவனத்தின் ஃபிரிட்ஜ்? இதன் விலை என்ன? இதில் வேறு அம்சங்கள் உள்ளன? இதோ விவரங்கள்:

சாதாரண டிஸ்பிளே இல்ல.. டச் ஸ்க்ரீன் டிஸ்பிளே!

சாதாரண டிஸ்பிளே இல்ல.. டச் ஸ்க்ரீன் டிஸ்பிளே!

இந்த ஃபிரிட்ஜை அறிமுகம் செய்துள்ளது - வேறு யாரும் இல்லை - நம்ம சாம்சங் (Samsung) நிறுவனம் தான் சாம்சங் நிறுவனம் இதை பிஸ்ஃபோக் ரெஃபிரிஜிரேட்டர் ஃபேமிலி ஹப் பிளஸ் (Bisfoque Refrigerator Family Hub Plus) என்று அழைக்கிறது.

இந்த ஃபிரிட்ஜின் முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால் - இந்த ஃபிரிட்ஜின் டோரில் ஒரு பெரிய டிஸ்பிளே உள்ளது. அதுவும் சாதாரண டிஸ்பிளே அல்ல - அது ஒரு டச் ஸ்க்ரீன் டிஸ்பிளே ஆகும் மற்றும் அதன் அளவு 32 -இன்ச் ஆகும்!

ஹலோ அம்பானி சார்.. BSNL-ஐ பார்த்து கத்துக்கோங்க! காசு இல்ல கஸ்டமர் தான் முக்கியம்னு நிரூபிக்கும் ஒரு ஆபர்!ஹலோ அம்பானி சார்.. BSNL-ஐ பார்த்து கத்துக்கோங்க! காசு இல்ல கஸ்டமர் தான் முக்கியம்னு நிரூபிக்கும் ஒரு ஆபர்!

இந்த டிஸ்பிளே.. வெறும் ஸ்க்ரீன்-ஆ அல்லது ஒரு ஸ்மார்ட் டிவி-ஆ?

இந்த டிஸ்பிளே.. வெறும் ஸ்க்ரீன்-ஆ அல்லது ஒரு ஸ்மார்ட் டிவி-ஆ?

இந்த ஃபிரிட்ஜின் டோரில் இருப்பது வெறும் டச் ஸ்க்ரீன் அல்ல, ஒரு டிவியும் கூட என்பதை சாம்சங் நிறுவனமே பூடகமாக கூறி உள்ளது. ஏனென்றால், இந்த ஃபிரிட்ஜில் உள்ள டிஸ்பிளேவானது சாம்சங் டிவி பிளஸ் (Samsung TV Plus) சேவைக்கான ஆதரவுடன் வருகிறது.

அதாவது இந்த சாம்சங் ஃபிரிட்ஜ் ஆனது நிறுவனத்தின் ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் (AI) மற்றும் இண்டர்நெட் ஆப் திங்ஸ் (IoT) தொழில்நுட்பத்தின் ஒரு கலவை ஆகும். அதாவது பொழுதுபோக்கு, பேமிலி கம்யூனிக்கேஷன், சமையல் மற்றும் ஸ்மார்ட் ஹோம் தொடர்பான சேவைகளை வழங்கும் ஒரு ஆல்-இன்-ஒன் ரெஃபிரிஜிரேட்டர் ஆகும்!

ஆக.. இந்த டிஸ்பிளே வழியாக படம் பார்க்கலாமா?

ஆக.. இந்த டிஸ்பிளே வழியாக படம் பார்க்கலாமா?

சாம்சங் நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த டிஸ்பிளேவில் உள்ள 32 இன்ச் டிஸ்பிளேவானது யூட்யூப் (YouTube) போன்ற முக்கிய சமூக ஊடக தளங்களால் வழங்கப்படும் Portrait-format image-களுக்கு உகந்ததாக இருக்கும் மற்றும் இந்த பேமிலி ஹப் ரெஃபிரிஜிரேட்டரில் உள்ள சாம்சங் டிவி பிளஸ் சேவை வழியாக உங்களால் பிஐபி (PIP - Picture in Picture) முறையில் வீடியோக்களை பார்க்க முடியும்.

அதாவது இந்த டிஸ்பிளேவை வைத்து - சமையல் குறிப்புகளை தேடலாம், செய்தி சேனல்களைப் பார்க்கலாம், மற்ற ஐஓடி வீட்டு உபயோக பொருட்களை கட்டுப்படுத்தலாம், இப்படி பல வகையான பல்பணிகளை செய்யலாம்!

ஆந்திராவை ஸ்பெஷலாக கவனித்த அம்பானி.. அடுத்தடுத்து செய்த தரமான செய்கை!ஆந்திராவை ஸ்பெஷலாக கவனித்த அம்பானி.. அடுத்தடுத்து செய்த தரமான செய்கை!

ஆறு முக்கியமான சேவைகள்!

ஆறு முக்கியமான சேவைகள்!

ஸ்மார்ட்டிங்ஸ் ஆப்ஸ் (SmartThings Apps) உடன் வழியாக, பல்வேறு வகையான டிவைஸ்களை கனெக்ட் செய்வது மட்டுமில்லாமல், ஸ்மார்ட் திங்ஸ் ஹோம் லைஃப்பின் (SmartThings Home Life) கீழ் அணுக கிடைக்கும் ஆறு முக்கியமான சேவைகளையும் நீங்கள் பெறலாம்: அது எனர்ஜி (energy), குக்கிங் கேர் (cooking, care), ஹோம் கேர் (home care), பெட் கேர் (pet care) மற்றும் க்ளோடிங் கேர் (Clodding care) ஆகும்.

மேலும் இந்த புதிய பெஸ்போக் ஃபிரிஜ் ஆனது OneDrive மற்றும் Google Photos-இன் கிளவுட் உடன் இணைக்கப்பட்டு, ஒரு விரிவாக்கப்பட்ட ஷேரிங் அனுபவத்தையும் உங்களுக்கு வழங்கும்.

அதாவது Google Photos யூசர்கள், கூகுள் போட்டோஸ் வழியாக ஃபேமிலி ஹப்பிற்கும் (Family Hub) அல்லது Family Hub-இல் உருவாக்கப்பட்ட கன்டென்ட்-ஐ Google Photos வழியாக எந்தவொரு டிவைஸிற்கும் எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் ஷேர் செய்யலாம்!

இந்த ஃபிரிட்ஜின் விலை என்ன?

இந்த ஃபிரிட்ஜின் விலை என்ன?

தற்போது வரையிலாக, சாம்சங்கின் இந்த புதிய ஃபிரிட்ஜ் ஆனது அறிமுகம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது, இன்னும் சொல்லப்போனால் ஒரு அறிக்கை வழியாக வெறுமனே அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இன்னும் விற்பனைக்கு வரவில்லை; அதே போல இந்த ஃபிரிட்ஜின் விலை நிர்ணயத்தையும் சாம்சங் பகிரவில்லை!

இதன் விலை நிர்ணயம், வருகிற ஜனவரி 5, 2023 முதல் லாஸ் வேகாஸில் நடக்கவுள்ள CES 2023 நிகழ்வின் போது அறிவிக்கப்படலாம். ஏனென்றால் குறிப்பிட்ட நிகழ்வில் பிஸ்ஃபோக் ரெஃபிரிஜிரேட்டர் ஃபேமிலி ஹப் பிளஸ் ஃபிரிட்ஜை சாம்சங் நிறுவனம் காட்சிப்டுத்த உள்ளது!

Photo Courtesy: Samsung

Best Mobiles in India

English summary
New Samsung Fridge Has 32 inch Display In The Door Is It A Smart TV Or Just A Touch Screen

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X