Home
News

Vi சிம் இருக்கா.. ரூ.696 எடுத்து வைங்க.. அமேசான் பிரைம் சந்தா.. 4 ப்ரீபெய்ட் ரீசார்ஜ்.. சலுகைகள் எப்படி?

வோடபோன் ஐடியா (Vodafone Idea) சிம் கார்டு வைத்து இருக்கும் கஸ்டமர்கள் அமேசான் பிரைம் சந்தாவை (Amazon Prime Subscription) பெற விரும்பினால், அவர்களுக்கு 4 பெஸ்ட் ஆப்ஷன்கள் இருக்கின்றன. 84 நாட்கள் முதல் 365 நாட்கள் வரையில் வேலிடிட்டியும் கிடைக்கிறது. வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ் சலுகைகளும் கிடைக்கின்றன.

விஐ ரூ.696 திட்டத்தில் 56 நாட்கள் சந்தாவுடன் அமேசான் பிரைம் லைட் (Amazon Prime Lite) சந்தா கிடைக்கிறது. விஐ ரூ.996 திட்டத்தில் 84 நாட்கள் சந்தாவுடன் அமேசான் பிரைம் லைட் (Amazon Prime Lite) சந்தா கிடைக்கிறது. விஐ ரூ.3799 திட்டம் மற்றும் விஐ ரூ.4999 திட்டங்களில் 1 வருடத்துக்கு அமேசான் பிரைம் லைட் சந்தா கொடுக்கப்படுகறது.

Vi சிம் இருக்கா.. ரூ.696 எடுத்து வைங்க.. அமேசான் பிரைம் சந்தா!

விஐ ரூ.696 திட்டம் (Vi Rs 696 Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 56 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால்கள், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். மேலும், நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கிடைக்கும்.

நள்ளிரவு 12 மணி முதல் மதியம் 12 மணி வரையில் இலவச அன்லிமிடெட் நைட் டேட்டா கிடைக்கும். வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் சலுகையும், 2 ஜிபிக்கான டேட்டா டிலைட்ஸ் சலுகையும் இந்த திட்டத்துக்கு கிடைக்கிறது. மேலும், 56 நாட்களுக்கு அமேசான் பிரைம் லைட் சந்தாவை கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம்.

விஐ ரூ.996 திட்டம் (Vi Rs 996 Plan): 84 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கும். நாளொன்றுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கிறது. நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா, 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கும். அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) கொடுக்கப்பட்டு உள்ளது.

இந்த அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை, 28 நாட்களுக்கு அதிகபட்சமாக 300 ஜிபி வரையில் பயன்படுத்தி கொள்ளலாம். நள்ளிரவு 12 மணி முதல் மதியம் 12 மணி வரையில் அன்லிமிடெட் நைட் டேட்டா, வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் மற்றும் டேட்டா டிலைட்ஸ் கிடைக்கிறது. 84 நாட்களுக்கு அமேசான் பிரைம் லைட் கிடைக்கிறது.

விஐ ரூ.3799 திட்டம் (Vi Rs 3799 Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 365 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்கள் முழுவதும் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகைகளை பயன்படுத்தலாம். மேலும், 12 மணி நேர இலவச டேட்டா மற்றும் வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் கிடைக்கிறது.

டேட்டா டிலைட்ஸ் சலுகையும் கொடுக்கப்பட்டு உள்ளது. வழக்கமாக கிடைக்கும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால்கள் வருடம் முழுவதும் கிடைக்கின்றன. நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் கொடுக்கப்பட்டு உள்ளது. அமேசான் பிரைம் லைட் சந்தாவை வருடம் முழுவதும் பயன்படுத்தி கொள்ளலாம்.

விஐ ரூ.4999 திட்டம் (Vi Rs 4999 Plan): இந்த திட்டத்துக்கும் 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்களில் முந்தைய திட்டத்தில் கிடைத்த ஒட்டுமொத்த சலுகைகளும் கிடைக்கிறது. அதாவது, நளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா, வாய்ஸ் கால்கள், 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கிறது. 12 மணி நேர இலவச டேட்டா, வீக்கெண்ட் டேட்டா உள்ளது.

டேட்டா டிலைட்ஸ் உள்ளது. அமேசான் பிரைம் லைட் சந்தாவானது வருடம் முழுவதும் கிடைக்கிறது. இந்த சலுகைகள் போக கூடுதலாக விஐ மூவிஸ் & டிவி (Vi Movies & TV) கிடைக்கிறது. இதில் ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), சோனிலிவ் (SonyLIV), ஜீ5 (ZEE5) உள்ளிட்ட கூடுதல் ஓடிடி ஆப்கள் கிடைக்கும். ஆகவே, கூடுதல் ஓடிடிக்கு இதை ரீசார்ஜ் செய்யலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vi Rs 696 Plan Rs Rs 3799 Plan Rs 4999 Plan Rs 996 Plan Offer Amazon Prime OTT Check Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X