3 புதிய Samsung Laptop-கள் அறிமுகம்.. ஆபர் விலையில் SALE.. 14-இன்ச், 16-இன்ச்.. 140W சார்ஜிங் 80.20Wh பேட்டரி!
சாம்சங் (Samsung) நிறுவனத்தின் லேட்டஸ்ட் லேப்டாப் மாடல்களுக்காக காத்திருந்த இந்தியர்களின் "காத்திருப்பு" ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. மற்ற சந்தைகளில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு மாதத்திற்கும் மேலான காலத்திற்கு பிறகு, சாம்சங் கேலக்ஸி புக் 6 சீரிஸ் (Samsung Galaxy Book 6 Series) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
இந்த சீரிஸின் கீழ் பிளாக்ஷிப் மாடலான கேலக்ஸி புக் 6 அல்ட்ரா (Galaxy Book 6 Ultra) உடன் சேர்த்து கேலக்ஸி புக் 6 ப்ரோ (Galaxy Book 6 Pro) மற்றும் ஸ்டாஅண்ர்ட் கேலக்ஸி புக் 6 (Galaxy Book 6) என மொத்தம் 3 மாடல்கள் வெவ்வேறு டிஸ்பிளே அளவுகளில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.

விலை மற்றும் விற்பனை விவரங்கள்: இன்டெல் கோர் அல்ட்ரா 7 சீரிஸ் 3 ப்ராசஸர் உடனான சாம்சங் கேலக்ஸி புக் 6 அல்ட்ராவின் விலை ரூ.2,42,990 முதல் தொடங்குகிறது. 14-இன்ச் கேலக்ஸி புக் 6 ப்ரோவின் விலை (இன்டெல் கோர் அல்ட்ரா 5 சீரிஸ் 3 ப்ராசஸர், 16ஜிபி ரேம், 512ஜிபி ஸ்டோரேஜ்) ரூ.1,78,990 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த லேப்டாப்கள் சிங்கிள் கிரே கலர் ஆப்ஷனில் மட்டுமே வாங்க கிடைக்கும்.
கடைசியாக 14-இன்ச் சாம்சங் கேலக்ஸி புக் 6 மாடலின் விலை (ப்ரோ மாடலில் உள்ள அதே பிராசஸர், ரேம் மற்றும் ஸ்டோரேஜ்) ரூ.1,27,990 முதல் தொடங்குகிறது. இந்த லேப்டாப் கிரே மற்றும் சில்வர் ஆகிய 2 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும்.
இருப்பினும் மேற்கண்ட விலைகள் எல்லாமே "நடைமுறை விலைகள்" ஆகும். அதாவது வங்கி தள்ளுபடிகள் சேர்க்கப்பட்டிருக்கலாம்; இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் - ஆபர் விலைகள் ஆகும். தகுதியான ஆபர்களை அணுக முடியாத வாடிக்கையாளர்கள் இன்னும் கொஞ்சம் அதிகம் செலவு செய்ய நேரிடலாம்.
மேலும், சாம்சங் நிறுவனம் 24 மாதங்கள் வரை நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பங்கள் அல்லது ரூ. 5,000 வரை கேஷ்பேக் சலுகையையும் வழங்குகிறது. மேலும் செல்லுபடியாகும் மாணவர் அடையாள அட்டையை கொண்டுள்ள வாடிக்கையாளர்கள் 10% சதவீதம் வரை கூடுதல் பலன்களையும் பெறலாம். இந்த மூன்று லேப்டாப்களும் சாம்சங் நிறுவனத்தின் ஆன்லைன் ஸ்டோர் மற்றும் சாம்சங்கால் அங்கீகரிக்கப்பட்ட ஆஃப்லைன் சில்லறை விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனைக்கு வரும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி புக் 6 அல்ட்ரா லேப்டாப்பின் முக்கிய அம்சங்கள்:
- 16-இன்ச் WQXGA+ AMOLED டச் ஸ்க்ரீன் டிஸ்பிளே
- இன்டெல் கோர் அல்ட்ரா X7 சீரிஸ் 3 ஈவோ எடிஷன் ப்ராசஸர்
- 32GB வரை LPDDR5x ரேம், 1TB PCle SSD இன்டர்னல் ஸ்டோரேஜ்
- 2-மெகாபிக்சல் 1080p ஃபுல்-HD வெப்கேம்
- 140W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கூடிய 80.20Wh பேட்டரி
சாம்சங் கேலக்ஸி புக் 6 ப்ரோ லேப்டாப்பின் முக்கிய அம்சங்கள்:
- 16 இன்ச் வரையிலான AMOLED டச் ஸ்க்ரீன் டிஸ்பிளே
- இன்டெல் கோர் அல்ட்ரா X7 சீரிஸ் 3 ஈவோ எடிஷன் ப்ராசஸர்
- கேலக்ஸி புக் 6 அல்ட்ராவில் உள்ள அதே ரேம், ஸ்டோரேஜ், வெப்கேம்
- 16-இன்ச் மாடல் 78.07Wh பேட்டரி
- 14-இன்ச் மாடல் 67.18Wh பேட்டரி
சாம்சங் கேலக்ஸி புக் 6 லேப்டாப்பின் முக்கிய அம்சங்கள்:
- 16-இன்ச் டச்ஸ்கிரீன் மாடல், 16-இன்ச் டச் இல்லாத மாடல் மற்றும் 14-இன்ச் டச் இல்லாத மாடல் என மூன்று வகை டிஸ்பிளேக்கள்
- 16-இன்ச் WUXGA IPS டச்ஸ்கிரீன்
- இன்டெல் கோர் அல்ட்ரா 7 சீரிஸ் 3 பிராசஸர்
- 45W USB-C பாஸ்ட் சார்ஜிங் உடனான 61.2 Whபேட்டரி
OPINION - சாம்சங் கேலக்ஸி புக்6 சீரிஸ் லேப்டாப்கள் யாருக்கானது? 2026 இல் ஒரு பிரீமியம் லேப்டாப்பை வாங்க விரும்பும் பெரும்பாலான வாடிக்கையாளர்களுக்கு - சாம்சங் கேலக்ஸி புக்6 சீரிஸில், அவர்களுக்கென ஒரு மாடல் (ஸ்டாண்டர்ட், ப்ரோ அல்லது அல்ட்ரா) உள்ளது.
அதிகப் பணம் செலவழிக்காமல் டாக்குமெண்ட்ஸ், வெப் ப்ரவுஸர் மற்றும் வீடியோ கால்களுக்கு நம்பகமான விண்டோஸ் லேப்டாப் தேவைப்படும் மாணவர்கள் மற்றும் டெய்லி யூஸர்களுக்கு ஸ்டாண்டர்ட் கேலக்ஸி புக் 6 மாடல் ஒரு நல்ல தேர்வாகு இருக்கும். அதிகம் பயணம் செய்யும் மற்றும் சிறந்த டிஸ்பிளே, நீண்ட பேட்டரி லைப் கொண்ட இலகுவான, பிரீமியம் லேப்டாப்பை விரும்பும் ஆபிஸ் ப்ரொபெஷனல்களுக்கு ப்ரோ மாடல் ஒரு நல்ல தேர்வாக இருக்கும்!
கடைசியாக உள்ள அல்ட்ரா மாடல் ஆனது - வீடியோ எடிட்டிங், ரெண்டரிங் அல்லது அதிக ஏஐ பணிகளை செய்யும் கிரியேட்டர்கள் மற்றும் பவர் யூசர்களுக்கான மாடல் ஆகும். இது லெனோவா யோகா ப்ரோ சீரிஸ், டெல் ப்ரோ சீரிஸ் அல்லது பிரபலமான 16-இன்ச் மேக்புக் ப்ரோ எம்5 ப்ரோ மாடல்கள் இருக்கும் 'அதே பிரிவில்" அமர்கிறது!


Click it and Unblock the Notifications








