வச்சான் பாரு வெடி.. சீன Smart TV-களின் ஆதிக்கத்தை ஒடுக்க.. இந்தியாவில் களமிறங்கிய 2 ஜப்பான் டிவிகள்!

|

இந்திய ஸ்மார்ட் டிவி சந்தையை "ஆட்சி செய்யும்" சீன கம்பெனிகளுக்கு போட்டியாக ஜப்பானை சேர்ந்த எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமொன்று, அதன் 2 புதிய ஸ்மார்ட் டிவிகளை (Smart TV) இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

அதென்ன டிவிகள்? சீன ஸ்மார்ட் டிவிகளுக்கு எதிராக இருக்கும் அளவிற்கு இந்த ஸ்மார்ட் டிவிகளில் என்னென்ன அம்சங்கள் உள்ளன? இவைகளின் விலை நிர்ணயம் என்ன? இதோ விவரங்கள்:

அதென்ன டிவிகள்?

அதென்ன டிவிகள்?

இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த இரண்டு புதிய ஸ்மார்ட் டிவிகளும் ஜப்பானிய எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான அய்வாவின் (Aiwa) டிவி மாடல்கள் ஆகும்.

இந்த இரண்டுமே அய்வா நிறுவனத்தின் மேக்னிஃபிக் (MAGNIFIQ) டிவி சீரிஸின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

கிட்டத்தட்ட ஒரே அம்சங்களை பேக் செய்யும் இந்த இரண்டு ஸ்மார்ட் டிவிகளும், ஒரே ஒரு விஷயத்தில் மட்டுமே வேறுபடுகின்றன - அது ஸ்க்ரீன் சைஸ் (Screen Size) ஆகும். அதாவது இந்த 2 டிவிகளும் இரண்டு வெவ்வேறு ஸ்க்ரீன் சைஸ்களில் வாங்க கிடைக்கும்.

வெறும் ரூ.9449 க்கு HD TV.. 32-இன்ச், 43-இன்ச், 50-இன்ச் Xiaomi டிவிகள் மீதும் ஆபர் மழை!வெறும் ரூ.9449 க்கு HD TV.. 32-இன்ச், 43-இன்ச், 50-இன்ச் Xiaomi டிவிகள் மீதும் ஆபர் மழை!

என்னென்ன அளவுகளில் வாங்க கிடைக்கும்?

என்னென்ன அளவுகளில் வாங்க கிடைக்கும்?

அய்வா அறிமுகம் செய்துள்ள புதிய ஸ்மார்ட் டிவிகள் - 43 இன்ச் மற்றும் 55 இன்ச் அளவுகளில் வாங்க கிடைக்கும்.

இந்த 2 டிவிகளுமே கிரிஸ்டா டெக் விஷன்(CRYSTA Tech Vision), ஆம்பிதியேட்டர் வியூ (, Amphitheater View), பிளாக் ரிஃப்ளெக்ட் ( Black Reflect), டால்பி (Dolby) மற்றும் எம்இஎம்சி (MEMC) உள்ளிட்ட பல்வேறு வகையான ஆடியோ-விஷுவல் அம்சங்களுடன் வருகிறது.

மேலும் இந்த டிவிகளில் அய்வா நிறுவனத்தின் சொந்த சவுண்ட் டெக்னாலஜியான அய்வா ஆத்தென்டிக் சிக்னேச்சர் சவுண்ட்டும் (Aiwa Authentic Signature Sound) உள்ளது.

பெஸல்லெஸ் டிசைன் கூடவே ப்ளூடூத் ரிமோட்!

பெஸல்லெஸ் டிசைன் கூடவே ப்ளூடூத் ரிமோட்!

வடிவமைப்பை பொறுத்தவரை, இந்த இரண்டு ஸ்மார்ட் டிவிகளுமே பெஸசல்-லெஸ் டிசைன் உடன் வருகிறது.

மேலும் இதன் டிஸ்ப்ளேக்கள் ஆண்டி-க்ளேர் தொழில்நுட்பத்துடன் வருகின்றன. அய்வா நிறுவனத்தின் கூற்றுப்படி, இது டிஸ்பிளேவில் ஏற்படும் பிரதிபலிப்புகளை குறைக்கும்.

இந்த 2 ஸ்மார்ட் டிவிகளுமே ப்ளூடூத் ரிமோட் (Bluetooth Remote) உடன் வருகின்றன. அவைகள் நெட்பிளிக்ஸ், ப்ரைம் வீடியோ, யூட்யூப் மற்றும் கூகுள் அசிஸ்ன்ட் போன்றவைகளுக்கான பிரத்யேக பட்டன்களை கொண்டுள்ளன.

சாதனை! நாசாவால் கூட கண்டுபிடிக்க முடியாத செவ்வாய் கிரக மர்மம்.. அசால்ட் ஆக கண்டுபிடித்த இந்திய விஞ்ஞானிகள்!சாதனை! நாசாவால் கூட கண்டுபிடிக்க முடியாத செவ்வாய் கிரக மர்மம்.. அசால்ட் ஆக கண்டுபிடித்த இந்திய விஞ்ஞானிகள்!

ஸ்டோரேஜ் மற்றும் கனெக்டிவிட்டி எல்லாம் எப்படி?

ஸ்டோரேஜ் மற்றும் கனெக்டிவிட்டி எல்லாம் எப்படி?

இந்த இரண்டு டிவி மாடல்களுமே 2ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜை கொண்ட குவாட் கோர் ப்ராசஸர் (Quad core processor) மூலம் இயக்கப்படுகின்றன.

கனெக்டிவிட்டி விருப்பங்களை பொறுத்தவரை, இந்த டிவிகளில் 2 யூஎஸ்பி போர்ட்கள் மற்றும் 3 எச்டிஎம்ஐ போர்ட்கள் உள்ளன. மேலும் இந்த டிவிகளில் ப்ளூடூத் 5.0 மற்றும் டூயல்-பேண்ட் வைஃபைக்கான ஆதரவும் உள்ளது.

என்ன விலை?

என்ன விலை?

அய்வா மேக்னிஃபிக் டிவி சீரீஸின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய 43-இன்ச் மாடல் ஆனது ரூ.57,990-க்கு வாங்க கிடைக்கும். மறுகையில் உள்ள 55-இன்ச் வேரியண்ட் ஆனது ரூ.87,990 க்கு வாங்க கிடைக்கும்.

இந்த டிவிகள் அய்வா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான அய்வா.காம் (aiwa.com) வழியாக விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த டிவிகளை க்ரோமா, ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் பிற தேர்ந்தெடுக்கப்பட்ட பார்ட்னர் ஸ்டோர்கள் வழியாகவும் வாங்கலாம்!

PhotoCourtesy: aiwa.com

Best Mobiles in India

English summary
Japan Company Aiwa Introduced 2 New Smart TV Models in India Against Chinese Companies

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X