இந்தியாவில் அறிமுகமானது கூகுள் மினி ஸ்பீக்கர்; அமேசானுக்கு ரெடிமேட் ஆப்பு.!

உலகின் மிகப்பெரிய தேடுபொறி மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், அதன் கூகிள் ஹோம் ஸ்பீக்கர்களை இந்தியாவில் இன்று அறிமுகம் செய்துள்ளது.

|

உலகின் மிகப்பெரிய தேடுபொறி மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், அதன் கூகிள் ஹோம் ஸ்பீக்கர்களை இந்தியாவில் இன்று அறிமுகம் செய்துள்ளது. கூகுளின் இந்த நுழைவினால், இந்தியாவின் ஸ்மார்ட் ஸ்பீக்கர் சந்தையில் ஒரு புதிய விளையாட்டே ஆரம்பித்துள்ளது மற்றும் அந்த விளையாட்டின் முதல் அவுட் - அமேசான் நிறுவனத்தின் ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் தான் (எக்கோ).!

இந்தியாவில் அறிமுகமானது கூகுள் மினி ஸ்பீக்கர்; அமேசானுக்கு ஆப்பு.!

ஏனெனில் அறிமுகமாகியுள்ள கூகுள் ஸ்மார்ட் ஹோம் ஸ்பீக்கர்கள் ஆனது, இதுநாள் வரை எந்த போட்டியையும் சந்திக்காமல் விற்பனையாகி வந்த அமேசான் எக்கோ ஸ்பீக்கர்களுடன் நேரடியாக போட்டியிடுகிறது. இதில் மற்றொரு சுவாரசியமான விஷயம் என்னவெனில் - கூகுள் ஹோம் ஸ்பீக்கர்களை விற்பனை செய்யும் உரிமத்தை ப்ளிப்கார்ட் பெற்றுள்ளது என்பது தான்.

இந்தியாவில் அறிமுகமானது கூகுள் மினி ஸ்பீக்கர்; அமேசானுக்கு ஆப்பு.!

ஏற்கனவே சியோமி நிறுவனத்தின் மினி ஸ்பீக்கர்கள் வெளியாகிவிட்ட நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஹோம்பாட் ஸ்பீக்கர்களுன் இந்தியாவில் வெளியானால், இந்தியாவின் ஸ்மார்ட் ஸ்பீக்கர் சந்தையில் உச்சகட்டட போட்டிகள் நடக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். சரி இதற்கெல்லாம் பிள்ளையார் சுழி போட்டுள்ள கூகுள் ஸ்மார்ட் ஹோம் ஸ்பீக்கர்களின் விலை மற்றும் அம்சங்கள் என்ன என்பதை விரிவாக காண்போம்.

விலை நிர்ணயம், வண்ண மாறுபாடுகள் :

விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, கூகுள் ஹோம் ஸ்பீக்கர் ஆனது ரூ.9,999/- என்கிற நிர்ணயத்தை பெற்றுள்ளது. இது அமேசான் எக்கோ ஸ்மார்ட் ஸ்பீக்கருடன் நேரடியாக போட்டியிடும் ஒரு விலையாகும். அமேசான் எக்கோ ஸ்பீக்கரின் விலையும் ரூ.9,999/- என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வரையிலாக சாக் பேப்ரிக் பேஸ் வண்ணத்தில் கிடக்கம் கூகுள் ஹோம் ஆனது சிறிது காலம் களைத்து கோரல் நிறத்திலும் கிடைக்கும்.

இந்தியாவில் அறிமுகமானது கூகுள் மினி ஸ்பீக்கர்; அமேசானுக்கு ஆப்பு.!

மறுகையில் உள்ள கூகுள் ஹோம் மினி ஆனது அமேசான் எக்கோ டாட் ஸ்பீக்கரின் அதே ரூ.4,499/- என்கிற விலைப்புள்ளியை பெற்றுள்ளது. இந்த மினி ஸ்பீக்கர், சாக் பேப்ரிக் மற்றும் கோரல் ஆகிய வண்ண மறுபாடுகளில் வாங்க கிடைக்கிறது.

Translate English to Tamil In your Mobile Easily (GIZBOT TAMIL)

கூகுள் ஹோம் ஸ்பீக்கர் அம்சங்கள் :

கூகுள் ஹோம் ஆனது அதன் மேல் பக்கத்தில் டச் சர்பேஸ் ஒன்றை கொண்டுள்ளது.அது பிளேபேக், வால்யூம் மற்றும் கூகுள் அசிஸ்டென்ட்டை கட்டுப்படுத்த பயன்படும். உடன் மைக் ஒன்றையும் கொண்டுள்ளது. இது தொலைதூரக் குரல் அங்கீகாரத்தை வழங்குகிறது. இதன் குரல் மெய்நிகர் தொழில்நுட்பமானது பல்வேறு குரல்களை பகுப்பாய்வு செய்து கண்டறியும் திறனை கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. ஒரு 2-இன்ச் ட்ரைவர் மற்றும் மற்றும் டூயல் 2-இன்ச் ரேடியேட்டர்ஸ் கொண்ட ஒரு ஹை-எக்ஸ்கர்ஷன் ஸ்பீக்கரை கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட் மற்றும் அதற்கு மேலான மற்றும் ஐஓஎஸ் 9.1 மற்றும் அதற்கு மேலான ஸ்மார்ட்போன்களுக்கு ஆதரவு அளிக்கும்.

இந்தியாவில் அறிமுகமானது கூகுள் மினி ஸ்பீக்கர்; அமேசானுக்கு ஆப்பு.!

கூகுள் ஹோம் மினி ஸ்பீக்கர் அம்சங்கள் :

கூகுள் மினி என்பது ஒரு சிறிய வகை ஸ்மார்ட் ஸ்பீக்கர் ஆகும். இந்த ஸ்பீக்கரும் கூகுள் அசிஸ்டென்ட்டை பயன்படுத்துகிறது. மெஷ் அல்லது பேப்ரிக் பயன்படுத்தி உருவாக்கம் பெற்றுள்ள இந்த சாதனம் ஆனது பயன்பாட்டை உணர்த்தும் பொருட்டு மேல்பக்கம் நான்கு எல்இடி லைட்களை கொண்டுள்ளது.

இந்தியாவில் அறிமுகமானது கூகுள் மினி ஸ்பீக்கர்; அமேசானுக்கு ஆப்பு.!

இந்தகூகுள் மினி ஆனது குரல் கட்டளைகளின் வழியாக, பல வகையான பணிகளை செய்யும் திறன் கொண்டுள்ளது. அதாவது வானிலைஅப்டேட், நியூஸ், ம்யூசிக், ஐஓடி (இன்டர்நெட் ஆப் திங்ஸ்) அல்லது ஸ்மார்ட் ஹோம் சாதனங்களைக் கட்டுப்படுத்தும் திறன் ஆகியவைகளையும் கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Google Home smart speaker launched at Rs 9,999. Here's how it compares against rival Amazon Echo. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X