ப்ளூடூத் காலிங் வசதியுடன் மலிவான விலையில் அறிமுகமான ராக்கெட் ஸ்மார்ட்வாட்ச்.! நம்பி வாங்கலாம்.!

|

இந்தியாவில் கடந்த இரண்டு மாதங்களில் அதிகமான ஸ்மார்ட்வாட்ச்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் பிரபலமான ஃபயர் போல்ட் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்துள்ளது. அதுவும் கம்மி விலையில்.

ஃபயர் போல்ட் ராக்கெட்

ஃபயர் போல்ட் ராக்கெட்

அதாவது ஃபயர் போல்ட் நிறுவனம் தற்போது ஃபயர் போல்ட் ராக்கெட் எனும் பெயரில் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. நாய்ஸ், போட், அமேஸ்ஃபிட், ரியல்மி மற்றும் இதர பிராண்டு மாடல்களுக்கு போட்டியாக இந்த புதிய ஃபயர் போல்ட் ராக்கெட் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மொபைல் பேசி வாகனம் ஓட்டி இறந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? பகீர் ரிப்போர்ட்.!மொபைல் பேசி வாகனம் ஓட்டி இறந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? பகீர் ரிப்போர்ட்.!

 1.3-இன்ச் எச்டி டிஸ்பிளே

1.3-இன்ச் எச்டி டிஸ்பிளே

இந்த ஃபயர் போல்ட் ராக்கெட் ஆனது 1.3-இன்ச் எச்டி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் 240×240 பிக்சல்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்வாட்ச். அதேபோல் வலது புறம் பட்டன், IP67 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியுடன் இந்த புதிய ஃபயர் போல்ட் ராக்கெட் ஸ்மார்ட்வாட்ச் வெளிவந்துள்ளது.

இந்த வருஷம் இந்த Redmi 12C போனை தான் எல்லாம் போட்டிபோட்டு வாங்க போறாங்க.! ஏன்னா விலை கம்மி.!இந்த வருஷம் இந்த Redmi 12C போனை தான் எல்லாம் போட்டிபோட்டு வாங்க போறாங்க.! ஏன்னா விலை கம்மி.!

அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள்

அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள்

இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஃபயர் போல்ட் ராக்கெட் ஸ்மார்ட்வாட்ச் மாடலில் ஏராளமான வாட்ச் ஃபேஸ்கள் உள்ளன. மேலும் ஸ்லீப் டிராக்கர், 100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்வாட்ச் வெளிவந்துள்ளது.

எழுதி வச்சிக்கோங்க! 2023-ல் இந்த 10 விஷயமும் கண்டிப்பா நடக்கும்! ஃபுல் டைம் WFH முதல் Elon Musk-ன் சரிவு வரை!எழுதி வச்சிக்கோங்க! 2023-ல் இந்த 10 விஷயமும் கண்டிப்பா நடக்கும்! ஃபுல் டைம் WFH முதல் Elon Musk-ன் சரிவு வரை!

ஏராளமான அம்சங்கள்?

அதேபோல் ஃபயர் போல்ட் ராக்கெட் ஸ்மார்ட்வாட்ச் மாடலில் ஸ்டெப், டிஸ்டன்ஸ், கலோரி என ஏராளமான அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட்வாட்ச் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றே கூறலாம்.

Telegram செயலியை பயன்படுத்துபவர்கள் கவனத்திற்கு: வாவ் சொல்லவைக்கும் புதிய அப்டேட்கள் கிடைத்தது.!Telegram செயலியை பயன்படுத்துபவர்கள் கவனத்திற்கு: வாவ் சொல்லவைக்கும் புதிய அப்டேட்கள் கிடைத்தது.!

மைக்ரோபோன்

மைக்ரோபோன்

பில்ட்-இன் ஸ்பீக்கர், மைக்ரோபோன் வசதியைக் கொண்டுள்ளது இந்த ஃபயர் போல்ட் ராக்கெட் ஸ்மார்ட்வாட்ச். எனவே இதன் மூலம் ப்ளூடூத் இணைப்பில் பயனர்கள் அழைப்புகளை மேற்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் சிரி போன்ற அம்சங்களைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்வாட்ச்.

தெரியுமா? Gmail-ல் ஒளிந்திருக்கும் இந்த ஆட்டோமேட்டிக் செட்டிங்-ஐ ON செஞ்சா Inbox-ல ஒரு அதிசயம் நடக்கும்!தெரியுமா? Gmail-ல் ஒளிந்திருக்கும் இந்த ஆட்டோமேட்டிக் செட்டிங்-ஐ ON செஞ்சா Inbox-ல ஒரு அதிசயம் நடக்கும்!

ஃபயர் போல்ட் ராக்கெட் ஸ்மார்ட்வாட்ச் விலை

ஃபயர் போல்ட் ராக்கெட் ஸ்மார்ட்வாட்ச் விலை

ஃபயர் போல்ட் ராக்கெட் ஸ்மார்ட்வாட்ச் மாடலில் ஸ்மார்ட் நோட்டிஃபிகேஷன் அம்சம் உள்ளது. பின்பு பிளாக், சில்வர் கிரே, ஷேம்பெயின் கோல்டு மற்றும் கோல்டு பின்க் போன்ற நிறங்களில் இந்த ஃபயர் போல்ட் ராக்கெட் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஃபயர் போல்ட் ராக்கெட் ஸ்மார்ட்வாட்ச் மாடலின் விலை ரூ.2,499-ஆக உள்ளது. பின்பு இதன் விற்பனை ஃபயர் போல்ட் வலைத்தளத்தில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஃ ஃபயர் போல்ட் கிலேடியேட்டர்

ஃ ஃபயர் போல்ட் கிலேடியேட்டர்

அதேபோல் இந்நிறுவனம் சமீபத்தில் தான் ஃ ஃபயர் போல்ட் கிலேடியேட்டர் எனும் ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்தது. பயர் போல்ட் கிலேடியேட்டர் ஸ்மார்ட்வாட்ச் ஆனது 1.96-இன்ச் எச்டி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் அல்ட்ரா நேரோ ஃபிரேம் டிசைன் மற்றும் 600 நிட்ஸ் ப்ரைட்னஸ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்வாட்ச்.

ஃபயர் போல்ட் கிலேடியேட்டர் ஸ்மார்ட்வாட்ச் ஆனது சீராக இயங்கும் கிரவுன், 123 ஸ்போர்ட்ஸ் மோட்கள், இதய துடிப்பு சென்சார், ஸ்கிராட்ச் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது. குறிப்பாக தனித்துவமான அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடல் வெளிவந்துள்ளது. அதேபோல் ப்ளூடூத் காலிங் வசதி கொண்ட ஃபயர் போல்ட் கிலேடியேட்டர் ஸ்மார்ட்வாட்ச் மாடலில் பில்ட்-இன் ஸ்பீக்கர் மற்றும் மைக்ரோபோன் ஆதரவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலில் காண்டாக்ட்ஸ் மற்றும் டயலர் ஆப்கள் பிரீலோடு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக 5 ஜிபிஎஸ் அசிஸ்ட் மோட்களை கொண்டிருக்கிறது இந்த அசத்தலான ஸ்மார்ட்வாட்ச் மாடல்.

யார் கண்ணுக்கும் தெரியாத ஒரு Secret Folder-ஐ உருவாக்கி அதனுள் Private File-களை மறைத்து வைப்பது எப்படி?யார் கண்ணுக்கும் தெரியாத ஒரு Secret Folder-ஐ உருவாக்கி அதனுள் Private File-களை மறைத்து வைப்பது எப்படி?

ஃபயர் போல்ட் கிலேடியேட்டர் ஸ்மார்ட்வாட்ச் விலை

ஃபயர் போல்ட் கிலேடியேட்டர் ஸ்மார்ட்வாட்ச் விலை

ஃபயர் போல்ட் கிலேடியேட்டர் ஸ்மார்ட்வாட்ச்-ஐ பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 24 மணி நேரத்திற்கு பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு பிளாக், புளூ, கோல்டு, பிளாக் & கோல்டு நிறங்களில் இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ஃபயர் போல்ட் கிலேடியேட்டர் ஸ்மார்ட்வாட்ச் மாடலின் விலை ரூ.2,999-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Fire Boltt Rocket Smartwatch with Bluetooth Calling feature launched at an affordable price: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X