தரமான லேப்டாப் மாடலை இந்தியாவில் களமிறக்கும் Xiaomi: அறிமுகம் எப்போது?
சியோமி நிறுவனம் வரும் ஆகஸ்ட் 30-ம் தேதி இந்தியாவில் சியோமி நோட்புக் ப்ரோ 120ஜி லேப்டாப் மாடலை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த லேப்டாப் தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சியோமி நோட்புக் ப்ரோ 120ஜி லேப்டாப்
இப்போது ஆன்லைனில் கசிந்த இந்த சியோமி நோட்புக் ப்ரோ 120ஜி லேப்டாப் மாடலின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது இந்த சியோமி நோட்புக் ப்ரோ 120ஜி மாடல் ஆனது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட ஃபுல் எச்டி டிஸ்பிளேவுடன் வெளிவரும் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த கேமிங் லேப்டாப்
குறிப்பாக மென்மையான அனிமேஷன்கள்/UI மற்றும் உயர்ந்த கேமிங் அனுபவத்தை கொடுக்கும் இந்த புதிய சியோமி நோட்புக் ப்ரோ 120ஜி லேப்டாப். பின்பு இதன் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சியோமி நிறுவனம்.

தரமான பிராசஸர்
அதாவது 12வது ஜெனரல் இன்டெல் கோர் i5 H-series பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான லேப்டாப் மாடல். மேலும் என்விடியாவின் ஜியிபோர்ஸ் எம்எக்ஸ்550 கிராபிக்ஸ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான சியோமி நோட்புக் ப்ரோ 120ஜி லேப்டாப் மாடல்.
குறிப்பாக இந்த லேப்டாப் மாடலை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1டிபி ஸ்டோரேஜ்
சியோமி நோட்புக் ப்ரோ 120ஜி லேப்டாப் ஆனது 8ஜிபி/16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி அல்லது 1டிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. அதேபோல் இந்த புதிய லேப்டாப் குறைந்த எடையில் தனித்துவமான வடிவமைப்பில் அறிமுகமாகும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனெக்டிவிட்டி
இந்த சியோமி லேப்டாப் ஆனது ப்ளூடூத் v.5.2 மற்றும் வைஃபை 6, யுஎஸ்பி ஏ 3.2, ஜென் 2 போர்ட், யுஎஸ்பி டைப்-சி போர்ட், தண்டர்போல்ட் 4, 3.5 மி.மீ. ஹெட்ஜாக் மற்றும் 1 x HDMI 2.1 போர்ட் போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அருமையான பேட்டரி
இணையத்தில் வெளிவந்த தகவலின்படி, இந்த சியோமி நோட்புக் ப்ரோ 120ஜி லேப்டாப் ஆனது 80Whr பேட்டரி ஆதரவுடன் வெளிவரும் என்று
கூறப்படுகிறது. அதேபோல் இந்த லேப்டாப் மாடலில் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப் கேமரா
இதுதவிர உயர் தெளிவுத்திறன் கொண்ட வெப் கேமரா, மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு எனப் பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த சியோமி லேப்டாப் மாடல். அதேபோல் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த புதிய சியோமி லேப்டாப்.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








