Just In
- 8 hrs ago
பந்துக்கு பந்து சிக்ஸ் அடிக்கும் Vivo: 5ஜி போன் இல்லாத எல்லாரும் கொடுத்து வச்சவங்க!
- 8 hrs ago
இன்றே கடைசி: ரெட்மி நிறுவனத்தின் பிரபலமான ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலை குறைப்பு.!
- 9 hrs ago
நம்பர் 1 யாருனு இப்ப தெரியும்: மொத்த போனுக்கும் ஆப்பு வைக்கும் புதிய Xiaomi போன்!
- 10 hrs ago
உலக Apple ரசிகர்கள் எதிர்பார்த்த அந்த 1 விஷயம்.! அடுத்த வாரம் ரிலீஸ்.! iPhone யூஸர்ஸ் குஷியோ குஷி.!
Don't Miss
- News
மல்யுத்த வீராங்கனைகளிடம் அத்துமீறிய பாஜக எம்பி? விசாரிக்க மேரி கோம் தலைமையில் குழு அமைப்பு
- Sports
காவ்யா மாறன் அழகில் மயங்கிய வெளிநாட்டு ஆண்கள்.. கல்யாணம் பண்ணிக்குங்க என கெஞ்சல்.. வீடியோ
- Lifestyle
கும்பம் செல்லும் சுக்கிரனால் ஜனவரி 22 முதல் இந்த 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..
- Movies
வதந்திகளை நம்பாதீங்க.. விஜய் ஆண்டனி உடல் நிலை குறித்து இயக்குனர் சுசீந்திரன் அறிக்கை!
- Finance
முகேஷ் அம்பானி காட்டில் பண மழை.. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் Q3ல் ரூ.15,792 கோடி லாபம்..!
- Automobiles
டெலிவரி தொடங்கியாச்சு.. இனி ஃபார்ச்சூனருக்கு பதிலா இந்த காருலதான் எல்லா அரசியல்வாதிகளும் வலம் வர போறாங்க!
- Travel
சென்னையிலிருந்து திருப்பதி – தரிசன டிக்கெட் முன்பதிவு, பயணச் செலவுகள், தங்குமிடம் புக்கிங் – இதர தகவல்கள்!
- Education
TNPSC Road inspector Recruitment 2023:சிவில் டிராட்மென்ஷிப் சான்றிதழ் இருந்தால் 716 பேருக்கு வாய்ப்பு..!
வாட்ஸ்அப் கொண்டுவரும் Kept அம்சம்: இதனால் என்ன பயன்? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.!
டெலிகிராம் உள்ளிட்ட பல்வேறு செயலிகளுக்குப் போட்டியாக அசத்தலான அம்சங்களை அறிமுகம் செய்துவருகிறது வாட்ஸ்அப் நிறுவனம். குறிப்பாக வாட்ஸ்அப் நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு புதிய அம்சங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் ஒரு அசத்தலான அம்சத்தை விரைவில் கொண்டுவர உள்ளது.

disappearing messages அம்சம்
அதாவது வாட்ஸ்அப் செயலியில் முன்பு ஆட்டோ மெட்டிக்காக மெசேஜ்களை டெலிட் ஆகும் வகையில் disappearing messages என்ற அம்சம் கொண்டுவரப்பட்டது. இந்த அம்சம் மூலம் மெசேஜ்களை குறிப்பிட்ட ஒரு காலத்திற்குப் பிறகு ஆட்டோமெட்டிக்காக டெலிட் செய்திடும் வகையில் செட் செய்து கொள்ளலாம்.

வாட்ஸ்அப் செயலியில் Kept..
குறிப்பாக சில நேரங்களில் நாம் மெசேஜ் அனுப்பிக் கொண்டிருக்கும் போது, சில மெசேஜ்கள் முக்கியமாகத் தோன்றும். ஆனாலும் disappearing messages ஆப்ஷனில் இருக்கும் போது அத்தகைய மெசேஜ்களும் டெலிட் ஆகிவிடும். இந்நிலையில் முக்கியமான மெசேஜ்களை மட்டும் அப்படியே வைத்திருக்கும் வகையில் வாட்ஸ்அப் செயலியில் Kept என்ற அம்சம் மெசேஜ் செய்யும் இடத்தில் கொண்டுவரப்பட உள்ளது.

பீட்டா சோதனையாளர்களுக்கு?
அதாவது Kept என்ற புதிய அம்சம் மூலம் பயனர்கள் தங்கள் செயலியில் ஆட்டோ டெலிட் ஆகும் மேசேஜ்களை சேமிக்கலாம். பின்பு வாட்ஸ்அப் தற்போது இந்த அம்சத்தை உருவாக்கி வருகிறது. இது இன்னும் பீட்டா சோதனையாளர்களுக்கு வழங்கப்படவில்லை.

Wabetainfo தளத்தில் வெளியிடப்பட்டது
ஆனாலும் பீட்டா சோதனையாளர்களுக்கு இந்த அம்சம் இன்னும் கிடைக்கவில்லை என்றாலும், இது முதலில் Wabetainfo தளத்தில் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது Wabetainfo தளத்தில் பகிரப்பட்டுள்ள ஸ்கிரீன்ஷாட்டின்படி, ஆட்டோ டெலிட்டாகும் வரும் மெசேஜ்க்கு அருகில் Kept என்ற புக்மார்க் ஐகானை காணலாம். குறிப்பாக இந்த ஐகான் ஆட்டோ டெலிட் ஆகும் மெசேஜ் தக்க வைக்கப்பட்டுள்ளது என்பதற்கு அடையாளமாகவும் ஒரு குறியீடு காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இருந்தபோதிலும் இந்த புதிய அம்சம் பயனர்களுக்கு எப்போது கிடைக்கும் என்று தெளிவாகத் தெரியவில்லை. இணையத்தில் கசிந்த தகவலின்படி பீட்டா சோதனை முடிந்ததும் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று கூறப்படுகிறது.

ஆண்ட்ராய்டு போன்
அதேபோல் வாட்ஸ்அப் நிறுவனம் கடந்த ஆண்டு ஐஓஎஸ் (ஐபோன்) தளத்திற்கு Move to iOS என்ற வசதியை அறிமுகம் செய்தது. இதில் நாம் அனைத்து வாட்ஸ்அப் டேட்டா விவரங்களையும் ஆண்ட்ராய்டு போனில் இருந்து ஐபோனிற்கு Google Drive Backup இல்லாமல் சுலபமாக மாற்றமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இதேபோன்ற வசதியை ஆண்ட்ராய்டு போன்களிலும் அறிமுகம் செய்ய வாட்ஸ்அப் நிறுவனம் முடிவு செய்துள்ளது. குறிப்பாக இதன் மூலம் நமது டேட்டா இன்னும் கூடுதல் பாதுகாப்பாக வாட்ஸ்அப் உடன் இருக்கும். குறிப்பாக ஆண்ட்ராய்டு போன்களில் புதிய Chat Transfer Feature தான் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் டேட்டா
நாம் இப்போது வாட்ஸ்அப் டேட்டாவை ஒரு ஆண்ட்ராய்டு போனில் இருந்து மற்றொரு ஆண்ட்ராய்டு போனுக்கு மாற்ற வேண்டும் என்றால், முதலில் அனைத்து டேட்டாவையும் எடுத்து கூகுள் டிரைவ்-இல் Backup செய்துவிட்டு, பின்னர் புதிய போனில் Whatsapp திறந்து நமது Whatsapp Accountஉள்ளே சென்று மீண்டும் அவற்றை Restore செய்ய வேண்டிய நிலை இருந்தது. ஆனால் இந்த புதிய வசதி வந்ததும் இவ்வளவு சிரமப்பட தேவை இருக்காது. அதாவது நேரடியாக வாட்ஸ்அப் Settings - Chat Transfer to Android கிளிக் செய்தால் போதும் நமது அனைத்து டேட்டா விவரங்களும் புதிய ஆண்ட்ராய்டு போனிற்கு சென்றுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
Photo Courtesy: WABetaInfo
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470