WhatsApp புது அப்டேட்.. இனி போட்டோவை டாக்குமெண்டாக அனுப்ப அவசியமில்ல! மேட்டர் இதுதான்.!

|

பயனர்கள் தேவை அறிந்து WhatsApp தொடர்ந்து பல்வேறு புதுப்புது அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி தற்போது வாட்ஸ்அப், பீட்டா பயனர்களிடையே புதிய அம்சம் ஒன்றை சோதித்து வருகிறது. வாட்ஸ்அப் மூலம் புகைப்படம் அனுப்புபவர்களுக்கு இந்த அம்சம் பேருதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

சோதனையில் உள்ள புது அம்சம்

சோதனையில் உள்ள புது அம்சம்

சமூகவலைதளங்களில் பிரதான பயன்பாடாக இருக்கும் வாட்ஸ்அப் தொடர்ந்து புதுப்புது அம்சங்களை தங்களது தளத்தில் அறிமுகம் செய்து வருகிறது. அறிமுகம் செய்வதற்கு முன்னதாக அந்த அம்சங்களை பீட்டா பதிப்பில் சோதிப்பது நிறுவனத்தின் வழக்கம். அதன்படி தற்போது பல்வேறு புது அம்சங்கள் பீட்டா பதிப்பில் சோதனையில் இருக்கிறது. அதன்படியான ஒரு அம்சத்தை தான் பார்க்கப் போகிறோம். அது பயனர்களை அசல் தரத்தில் புகைப்படங்களை பகிர அனுமதிக்கும் அம்சம் ஆகும்.

அசல் தரத்தில் புகைப்படம் அனுப்பலாம்

அசல் தரத்தில் புகைப்படம் அனுப்பலாம்

அது என்ன அசல் தரத்தில் புகைப்படங்களை அனுப்புவது என கேள்வி வரலாம். அதாவது, நீங்கள் இனி புகைப்படத்தை அனுப்புவதற்கு முன் அதன் தரத்தை தேர்ந்தெடுக்க வாட்ஸ்அப் விரைவில் உங்களை அனுமதிக்க இருக்கிறது.

எந்த தரத்தில் உள்ளதோ அதே தரத்தில் அனுப்பலாம்

எந்த தரத்தில் உள்ளதோ அதே தரத்தில் அனுப்பலாம்

இதுகுறித்த WABetaInfo தகவலின்படி, வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டுக்கான சமீபத்திய பீட்டா அப்டேட் 2.23.2.11 இல் ஒரு புகைப்படத்தை அனுப்பும் முன் அதன் தரத்தை தேர்ந்தெடுக்க பயனர்களை அனுமதிக்கிறது. இந்த அம்சமானது பயனர்களை உயர் தெளிவுத்திறன் அல்லது அசல் தரத்தில் புகைப்படங்களை அனுப்ப அனுமதிக்கிறது.

பயனுள்ள பல அம்சங்கள் விரைவில்

பயனுள்ள பல அம்சங்கள் விரைவில்

வாட்ஸ்அப் நிறுவனம் கடந்த ஆண்டு பல அசத்தலான அம்சங்களை அறிமுகம் செய்தது. அதேபோல் இந்த ஆண்டும் நாம் எதிர்பார்க்கும் பல சிறப்பான அம்சங்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு அம்சங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேம்படுத்தப்பட்ட புது அம்சம்?

மேம்படுத்தப்பட்ட புது அம்சம்?

வாட்ஸ்அப் நிறுவனம் முன்னதாக இது தொடர்பான முயற்சிகளை மேற்கொண்டது. சில தினத்திற்கு முன்பு வாட்ஸ்அப் பீட்டா பதிப்பு 2.21.15.7 இல் 3 புகைப்பட தர விருப்பங்களை சோதனை செய்தது. அது ஆட்டோமேட்டிக், சிறந்த தரம் மற்றும் டேட்டா சேவர் பயன்முறை ஆகும்.

இதில் சிறந்த தரம் என்ற விருப்பத்தை தேர்வு செய்தால் புகைப்படம் ஏறத்தாழ அசல் தரத்தில் அனுப்பப்படும், டேட்டா சேவர் விருப்பத்தை தேர்வு செய்தால் புகைப்படம் அடிமட்ட தரத்தில் அனுப்பப்படும். இந்த அம்சத்தையே மேம்படுத்தி தற்போது வாட்ஸ்அப் சோதனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

இனி அசல் தரத்தில் புகைப்படம் அனுப்பலாம்

இனி அசல் தரத்தில் புகைப்படம் அனுப்பலாம்

சமீபத்திய பீட்டா பதிப்பில் சோதித்து வரும் அம்சத்தின் படி, வாட்ஸ்அப் இன் மேற்புறத்தில் உள்ள செட்டிங்க்ஸ் விருப்பத்தை கிளிக் செய்தால் புகைப்பட தர விருப்பம் காட்டப்படும். இதில் அசல் தரத்தில் புகைப்படங்களை அனுப்பும் விருப்பம் இடம்பெற்றிருக்கும் என கூறப்படுகிறது.

Compress செய்யாமல் இனி அனுப்பலாம்

Compress செய்யாமல் இனி அனுப்பலாம்

கண்டிப்பாக இது மிகவும் பயனுள்ள அம்சமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதுநாள் அதீத தரத்தில் சிறந்த புகைப்படத்தை பதிவு செய்து நீங்கள் அனுப்பினால் அதை பெறும் நபரிடம் அதே தரத்தில் இந்த புகைப்படம் சென்று சேராது. அது Compress செய்யப்பட்டு அனுப்பப்படும். சரி, ஒரிஜினல் தரத்தில் புகைப்படங்களை அனுப்ப வேண்டும் என்றால் அதை டாக்குமெண்ட் மூலமாக தான் அனுப்ப வேண்டும். குறிப்பாக ஐஓஎஸ் பயனர்களுக்கு இந்த செயல்முறை மிக சிரமமாக இருந்தது.

விரைவில் அறிமுகமாகும் என எதிர்பார்ப்பு

விரைவில் அறிமுகமாகும் என எதிர்பார்ப்பு

2 ஜிபி வரையிலான கோப்புகளை அனுப்ப அனுமதிக்கும் வாட்ஸ்அப், ஏன் புகைப்படத்தை மட்டும் Compress செய்து அனுப்புகிறது என்ற கேள்வி பலரிடமும் இருந்தது. இந்த கேள்விக்கு விடை அளிக்கும் வகையில் வாட்ஸ்அப் இந்த நடவடிக்கையில் இறங்கி இருக்கிறது.

இந்த அம்சம் அனைத்து பயனர்களுக்கும் எப்போது கிடைக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும் இது பீட்டா பதிப்பில் இருக்கும் காரணத்தால் அடுத்த சில மாதங்களில் அனைவருக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
WhatsApp will Soon Allow Users to Send Photos in Original Quality Without Compress

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X