ஐபோன்களுக்கு மட்டுமே கிடைத்த ஒரு முக்கிய அம்சம்: இனி ஆண்ட்ராய்டு போன்களுக்கும் கிடைக்கும்.! WhatsApp அதிரடி.!

|

வாட்ஸ்அப் நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு அம்சங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. எனவே தான் இந்த செயலியை உலகம் முழுவதும் அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் ஒரு தரமான அம்சத்தை ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு அறிமுகம் செய்ய உள்ளது. இப்போது அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

 Move to iOS என்ற வசதி

Move to iOS என்ற வசதி

அதாவது வாட்ஸ்அப் நிறுவனம் கடந்த ஆண்டு ஐஓஎஸ் (ஐபோன்) தளத்திற்கு Move to iOS என்ற வசதியை அறிமுகம் செய்தது. இதில் நாம் அனைத்து வாட்ஸ்அப் டேட்டா விவரங்களையும் ஆண்ட்ராய்டு போனில் இருந்து ஐபோனிற்கு Google Drive Backup இல்லாமல் சுலபமாக மாற்றமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்க போனை சர்வீஸ்-க்கு தரப்போறீங்களா? இதை செஞ்சுட்டு கொடுங்க.! இல்லாட்டி ரிஸ்க் ஜாஸ்தி.!உங்க போனை சர்வீஸ்-க்கு தரப்போறீங்களா? இதை செஞ்சுட்டு கொடுங்க.! இல்லாட்டி ரிஸ்க் ஜாஸ்தி.!

Chat Transfer Feature விரைவில்

Chat Transfer Feature விரைவில்

மேலும் தற்போது இதேபோன்ற வசதியை ஆண்ட்ராய்டு போன்களிலும் அறிமுகம் செய்ய வாட்ஸ்அப் நிறுவனம் முடிவு செய்துள்ளது. குறிப்பாக இதன் மூலம் நமது டேட்டா இன்னும் கூடுதல் பாதுகாப்பாக வாட்ஸ்அப் உடன் இருக்கும். குறிப்பாக ஆண்ட்ராய்டு போன்களில் புதிய Chat Transfer Feature தான் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவசரப்பட்டு இப்பவே புது போன் வாங்காதீங்க: இந்தியாவுக்கு வருது புதிய சாம்சங் 5G போன்: அறிமுக தேதி இதுதான்.!அவசரப்பட்டு இப்பவே புது போன் வாங்காதீங்க: இந்தியாவுக்கு வருது புதிய சாம்சங் 5G போன்: அறிமுக தேதி இதுதான்.!

 கூகுள் டிரைவ்-இல் Backup

கூகுள் டிரைவ்-இல் Backup

அதேபோல் நாம் இப்போது வாட்ஸ்அப் டேட்டாவை ஒரு ஆண்ட்ராய்டு போனில் இருந்து மற்றொரு ஆண்ட்ராய்டு போனுக்கு மாற்ற வேண்டும் என்றால், முதலில் அனைத்து டேட்டாவையும் எடுத்து கூகுள் டிரைவ்-இல் Backup செய்துவிட்டு, பின்னர் புதிய போனில் Whatsapp திறந்து நமது Whatsapp Accountஉள்ளே சென்று மீண்டும் அவற்றை Restore செய்ய வேண்டிய நிலை இருந்தது.

உள்ளே வராதே வெளியே போ! ரஷ்யாவை அசிங்கப்படுத்திய அமெரிக்கா! சொன்ன காரணம் தான் அல்டிமேட்!உள்ளே வராதே வெளியே போ! ரஷ்யாவை அசிங்கப்படுத்திய அமெரிக்கா! சொன்ன காரணம் தான் அல்டிமேட்!

வாட்ஸ்அப் Settings

வாட்ஸ்அப் Settings

ஆனால் இந்த புதிய வசதி வந்ததும் இவ்வளவு சிரமப்பட தேவை இருக்காது. அதாவது நேரடியாக வாட்ஸ்அப் Settings - Chat Transfer to Android கிளிக் செய்தால் போதும் நமது அனைத்து டேட்டா விவரங்களும் புதிய ஆண்ட்ராய்டு போனிற்கு சென்றுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

கண்டிப்பாக உதவும்

கண்டிப்பாக உதவும்

குறிப்பாக இந்த வசதி ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றே கூறலாம். அதேபோல் பழைய ஆண்ட்ராய்டு போனில் இருந்து அனைத்து டேட்டாவையும் புது ஆண்ட்ராய்டு போனுக்கு மாற்றுவதற்கு இந்த அம்சம் கண்டிப்பாக உதவும்.

இதுக்கு தானே வெயிட் பண்ணோம்.. ஒத்த iPhone மேல இத்தனை ஆபர்-ஆ! Flipkart அண்ணே.. ரொம்ப தேங்க்ஸ்!இதுக்கு தானே வெயிட் பண்ணோம்.. ஒத்த iPhone மேல இத்தனை ஆபர்-ஆ! Flipkart அண்ணே.. ரொம்ப தேங்க்ஸ்!

 தீர்வு வந்துவிட்டது?

தீர்வு வந்துவிட்டது?

அதேபோல் சமீபத்தில் வாட்ஸ்அப் நிறுவனம் ஒரு அட்டகாசமான அமசத்தை அறிமுகம் செய்தது. அதாவது சிலர் வாட்ஸ்அப் செயலியில் தெரியாமல் அனுப்பிய மெசேஜ் அல்லது புகைப்படங்களை நீக்குவதற்கு Delete for Everyone கொடுப்பதற்கு பதிலாக தவறுதலாக Delete for Me என்பதைக் கொடுத்துவிட்டு அவதிப்படுவார்கள். தற்போது இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு வந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ்அப் குரூப் அல்லது தனிப்பட்ட நபருக்குத் தவறுதலாக மெசேஜ் அல்லது புகைப்படங்களை அனுப்பும் பட்சத்தில் அதனை Delete for Everyone என்பதை கொடுத்து யாரும் பார்க்காதவாறு செய்துவிடலாம். ஆனால் சில நேரங்களில் Delete for எவேர்யோனே என்பதை கொடுப்பதற்குப் பதிலாக Delete for Me கொடுத்துவிட்டு அவதிப்பட்ட நிலைமை வந்திருக்கும்.

5 நொடிகளில் Undo

5 நொடிகளில் Undo

குறிப்பாக Delete for Me கொடுத்து அழிக்கப்பட்ட மெசேஜ் அனுப்பிய நபருக்கு மட்டும் தெரியாமல் இருக்கும் ஆனால் குரூப்பில் இருக்கும் மற்றவர்கள் அந்த மெசேஜை எளிமையாக பார்க்க முடியும். பின்பு அனுப்பியவர் அந்த மெசேஜை எதும் செய்ய முடியாத நிலை இருக்கும். இதனைக் கருத்தில் கொண்டு ஒரு புதிய அம்சத்தைக் கொண்டுவந்துள்ளது வாட்ஸ்அப் நிறுவனம்.

அதாவது Delete for Me கொடுத்து அழிக்கப்பட்ட ஒரு மெசேஜை Undo கொடுத்து திரும்பப் பெற்றுக் கொள்ள முடியும். அதனை ரெக்கவர் செய்தபின்பு Delete for Everyone கொடுக்க விரும்பினால் கொடுத்துக் கொள்ளலாம். குறிப்பாக இந்த புதிய அம்சம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும். அதேபோல் Delete for Me கொடுத்து அழிக்கப்பட்ட மெசேஜ் மீது Undo ஆப்ஷன் 5 நொடிகள் திரையில் தோன்றும். அந்த 5 நொடிகளில் Undo கொடுத்து விட்டால்போதும், Delete for Me கொடுத்து அழிக்கப்பட்ட மெசேஜ் திரும்பவும் தோன்றிவிடும்.

Best Mobiles in India

English summary
WhatsApp brings Soon new feature to transfer data from Android to Android without Google Drive: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X