வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் வரும் புதிய அப்டேட்.! என்ஜாய் செய்யும் பயனர்கள்.!

|

வாட்ஸ்அப் நிறுவனம் கடந்த ஆண்டு பல அசத்தலான அம்சங்களை அறிமுகம் செய்தது. அதேபோல் இந்த ஆண்டும் நாம் எதிர்பார்க்கும் பல சிறப்பான அம்சங்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு அம்சங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.

மீண்டும் ஒரு அசத்தலான வசதி

மீண்டும் ஒரு அசத்தலான வசதி

அதன்படி வாட்ஸ்அப் நிறுவனம் மீண்டும் ஒரு அசத்தலான அம்சத்தை வெளியிட்டுள்ளது. அதாவது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் இதுவரை புகைப்படங்கள், வீடியோக்கள், டெக்ஸ்ட்கள் மட்டுமே வைக்கும் வசதி இருந்த நிலையில், இனி உங்கள் குரலை வைத்து வாய்ஸ் நோட்ஸ்ஸையும் ஸ்டேட்டஸாக வைக்கும் வசதியும் கொண்டுவரப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் பீட்டா..

வாட்ஸ்அப் பீட்டா..

தற்போது வெளிவந்த தகவலின்படி ஆண்ட்ராய்டு 2.23.2.8 க்கான சமீபத்திய வாட்ஸ்அப் பீட்டா பயன்படுத்தும் பயனர்களுக்கு இந்த புதிய வசதி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து பயனர்களுக்கு இந்த புதிய வசதி கிடைக்கும் என்று WABetaInfo தளம் தகவல் தெரிவித்துள்ளது.

அண்டார்டிகாவில் விழுந்த அபூர்வ விண்கல்.. 7 கிலோ பாறைக்குள் ஒளிந்திருக்கும் 7 பிறவிகள் பற்றிய ரகசியம்?அண்டார்டிகாவில் விழுந்த அபூர்வ விண்கல்.. 7 கிலோ பாறைக்குள் ஒளிந்திருக்கும் 7 பிறவிகள் பற்றிய ரகசியம்?

பயன்படுத்துவது எப்படி?

பயன்படுத்துவது எப்படி?

குறிப்பாக இந்த புதிய வசதியை நீங்கள் பயன்படுத்த வேண்டும் என்றால், டைப் செய்யும் கீபோர்டு அருகே இருக்கும் மைக்கை டேப் செய்து, குரல் பதிவுகளை ரெக்கார்டு செய்ய வேண்டும். பின்பு நீங்கள் ரெக்கார்டு செய்ததை எடுத்து ஸ்டேட்டஸாக பகிர்ந்துக் கொள்ளலாம்.

30 வினாடிகள் மட்டுமே..

30 வினாடிகள் மட்டுமே..

அதேபோல் ஆரம்பத்தில் குரல் பதிவிற்கான அதிகபட்ச பதிவு நேரம் 30 வினாடிகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ள நிலையில், வரும் காலங்களில் குரல் பதிவிற்கான நேரம் அதிகப்படுத்தப்படும் என்று வாட்ஸ்அப் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயனுள்ள வகையில் இருக்கும்

பயனுள்ள வகையில் இருக்கும்

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் பகிரப்படும் படங்கள் மற்றும் வீடியோக்களைப் போலவே, குரல் பதிவுகளும் 24 மணி நேரத்திற்குப் பிறகு மறைந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த புதிய அம்சம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றே கூறலாம்.

disappearing messages அம்சம்

disappearing messages அம்சம்

மேலும் வாட்ஸ்அப் நிறுவனம் ஒரு அசத்தலான அம்சத்தை விரைவில் கொண்டுவர உள்ளது. அதாவது வாட்ஸ்அப் செயலியில் முன்பு ஆட்டோ மெட்டிக்காக மெசேஜ்களை டெலிட் ஆகும் வகையில் disappearing messages என்ற அம்சம் கொண்டுவரப்பட்டது. இந்த அம்சம் மூலம் மெசேஜ்களை குறிப்பிட்ட ஒரு காலத்திற்குப் பிறகு ஆட்டோமெட்டிக்காக டெலிட் செய்திடும் வகையில் செட் செய்து கொள்ளலாம்.

Kept அம்சம்

Kept அம்சம்

குறிப்பாக சில நேரங்களில் நாம் மெசேஜ் அனுப்பிக் கொண்டிருக்கும் போது, சில மெசேஜ்கள் முக்கியமாகத் தோன்றும். ஆனாலும் disappearing messages ஆப்ஷனில் இருக்கும் போது அத்தகைய மெசேஜ்களும் டெலிட் ஆகிவிடும். இந்நிலையில் முக்கியமான மெசேஜ்களை மட்டும் அப்படியே வைத்திருக்கும் வகையில் வாட்ஸ்அப் செயலியில் Kept என்ற அம்சம் மெசேஜ் செய்யும் இடத்தில் கொண்டுவரப்பட உள்ளது

விரைவில் பயன்பாட்டுக்கு வரும்..

விரைவில் பயன்பாட்டுக்கு வரும்..

Kept என்ற புதிய அம்சம் மூலம் பயனர்கள் தங்கள் செயலியில் ஆட்டோ டெலிட் ஆகும் மேசேஜ்களை சேமிக்கலாம். பின்பு வாட்ஸ்அப் தற்போது இந்த அம்சத்தை உருவாக்கி வருகிறது. இது இன்னும் பீட்டா சோதனையாளர்களுக்கு வழங்கப்படவில்லை.

பீட்டா சோதனையாளர்களுக்கு இந்த அம்சம் இன்னும் கிடைக்கவில்லை என்றாலும், இது முதலில் Wabetainfo தளத்தில் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது Wabetainfo தளத்தில் பகிரப்பட்டுள்ள ஸ்கிரீன்ஷாட்டின்படி, ஆட்டோ டெலிட்டாகும் மெசேஜ்க்கு அருகில் Kept என்ற புக்மார்க் ஐகானை காணலாம்.

இருந்தபோதிலும் இந்த புதிய அம்சம் பயனர்களுக்கு எப்போது கிடைக்கும் என்று தெளிவாகத் தெரியவில்லை. இணையத்தில் கசிந்த தகவலின்படி பீட்டா சோதனை முடிந்ததும் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Users Can Send Audio Notes Via WhatsApp Status: Know How?: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X