உஷார்! Malware தாக்குதல்: உங்களுக்கு தேவை சைபர் கிரைம் பாதுகாப்பு! உடனே படியுங்கள்

|

Malware தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே செல்கிறது. முக்கியமாகப் பல ஸ்மார்ட்போன் பயனர்களின் பணம் மற்றும் தகவல்கள் Malware தாக்குதலினால் திருடப்பட்டு வருகிறது. மால்வேர் Malware தாக்குதலிலிருந்து உங்களை எப்படிப் பாதுகாத்துக்கொள்வது என்பதற்கான பாதுகாப்பு டிப்ஸ் இதோ.

Malware என்றால் என்ன?

Malware என்றால் என்ன?

Malicious Software - 'தீங்கிழைக்கும் மென்பொருள்' என்பதற்கான சுருக்கமான பெயரே 'தீம்பொருள்'(Malware) என்பதாகும். பயனர்களின் அனுமதியின்றி அவர்களின் கணினி அல்லது ஸ்மார்ட்போனில் ஊடுருவிச் சேதப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட கணினி நிரல்கள் தான் மால்வேர்கள். மால்வேர்களால் மூலம் தான் உங்கள் ஸ்மார்ட்போன் மற்றும் கணினியில் உள்ள உங்கள் தகவல்கள் திருடப்படுகிறது.

எத்தனை Malware வகைகள் உள்ளதென்று தெரியுமா?

எத்தனை Malware வகைகள் உள்ளதென்று தெரியுமா?

ஸ்மார்ட்போன் மற்றும் கணினிகளைப் பாதிக்கக்கூடிய முக்கியமான மால்வேர்கள் மொத்தம் 5 வகைப்படும். குறிப்பாக வைரஸ்கள்(viruses), ஸ்பைவேர்(spyware), வோர்ம்ஸ்(worms), ட்ரோஜான்கள்(trojans), ரூட்கிட்கள்(rootkits) போன்ற மால்வேர்கள் உங்களின் கணினி பாதுகாப்புக்கு மற்றும் பல்வேறு வகையான அச்சுறுத்தல்களுக்கு உங்களை உள்ளடக்கும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

அந்தரங்க உரையாடல்களை ஒட்டுக்கேட்கிறது ஆப்பிள்! முன்னாள் ஊழியர் கூறியது என்ன? சிக்கலில் ஆப்பிள்.!அந்தரங்க உரையாடல்களை ஒட்டுக்கேட்கிறது ஆப்பிள்! முன்னாள் ஊழியர் கூறியது என்ன? சிக்கலில் ஆப்பிள்.!

முதல் மொபைல் வைரஸ் தாக்குதல்

முதல் மொபைல் வைரஸ் தாக்குதல்

மொபைல் போன்களால் பரவிய முதல் கணினி வைரஸ் Cabir தான். காபிர் என்றழைக்கப்படும், இந்த வைரஸ் ஒரு வோர்ம் வகை வைரஸ் ஆகும். ஜூன் மாதம் 16 ஆம் தேதி 2004 ஆம் ஆண்டு, முதல் முறையாக சிம்பியன் இயக்க மொபைல்களில் இந்த தாக்குதல் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் போனில் மால்வேர் தாக்குதல் எப்படி நடக்கிறது தெரியுமா?

உங்கள் போனில் மால்வேர் தாக்குதல் எப்படி நடக்கிறது தெரியுமா?

உங்கள் ஸ்மார்ட்போனில் இந்த மால்வேர் வைரஸ்கள் எப்படி ஊடுருவுகின்றது என்று தெரிந்துகொள்ளுங்கள்.
1. தீங்கிழைக்கும் செயலிகளை டவுன்லோட் செய்வதினால்.
2. பாதிக்கப்பட்ட அல்லது அப்டேட் செய்யப்படாத OS இயங்குதளத்தைப் பயன்படுத்துவதால்.
3. சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல்களை கிளிக் செய்வதனால்.
4. பாதுகாப்பற்ற Wi-Fi / URL களைப் பயன்படுத்துவதால்.
5. வாய்ஸ்மெயில் பிஷ்ஷிங்(voicemail phishing) மற்றும் சம்மந்தமில்லாத மெசேஜ்கள் காரணங்களால்.

கூகுள் எச்சரிக்கை: உடனே இந்த செயலியை Uninstall செய்யுங்க இல்லனா ஆபத்து!கூகுள் எச்சரிக்கை: உடனே இந்த செயலியை Uninstall செய்யுங்க இல்லனா ஆபத்து!

மால்வேர் தாக்குதலிலிருந்து உங்கள் மொபைலை பாதுகாப்பதற்கான டிப்ஸ்

மால்வேர் தாக்குதலிலிருந்து உங்கள் மொபைலை பாதுகாப்பதற்கான டிப்ஸ்

மால்வேர் தாக்குதல்களிலிருந்து உங்கள் ஸ்மார்ட்போனை பாதுகாத்துக்கொள்ளலாம் என்பது ஒரு நல்ல செய்தி. ஆனால் இந்த விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்றினால் மட்டுமே கண்டிப்பா தாக்குதல்களிலிருந்து தப்பித்துக்கொள்வீர்கள். பாதுகாப்பிற்கான டிப்ஸ் என்ன என்பதைப் பார்க்கலாம்.

ஸ்ட்ரிக்டா ஃபோலோ செய்ய தவறாதீர்கள்

ஸ்ட்ரிக்டா ஃபோலோ செய்ய தவறாதீர்கள்

1. உங்கள் ஸ்மார்ட்போனை முதலில் ஜெயில் பிரேக்கிங் செய்யாதீர்கள். ஜெயில் பிரேக்கிங் என்பது உங்கள் சாதனத்தின் பாதுகாப்பு வரம்புகளை ரூட்டிங் செய்வதற்கான மாற்று பெயர். ரூட்டிங் செய்யாதீர்கள்.
2. சரியான VPN செயலியை பயன்படுத்திக்கொள்ளப் பழகிக்கொள்ளுங்கள். முக்கியமாக பொது Wi-Fi நெட்வொர்க்கில் உங்கள் ஸ்மார்ட்போன் கனெக்ட் செய்யப்பட்டிருக்கும் பொழுது VPN பயன்படுத்துங்கள்.
3. நம்பிக்கைக்குரிய மூலங்களிலிருந்து மட்டுமே செயலிகளை டவுன்லோட் செய்யுங்கள்.

நிலவின் 3வது அடுக்கில் நுழைந்த சந்திராயன்2-கெத்துகாட்டிய இஸ்ரோ.!நிலவின் 3வது அடுக்கில் நுழைந்த சந்திராயன்2-கெத்துகாட்டிய இஸ்ரோ.!

நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியவை

நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியவை

4. உங்கள் மொபைலில் முக்கியமான டேட்டா எதுவும் இருந்தால், அது என்க்ரிப்ட் செய்யப்பட்டுள்ளதா என்று உறுதிப்படுத்தவும். என்க்ரிப்ட் செய்யப்பட்டிருந்தால், மால்வேர் அதைத் திருடினாலும் அது பாதுகாப்பாக இருக்கும்.
5. உங்கள் மொபைலை ஸ்கேனிங் செய்யுங்கள். MobileScan போன்ற அதிகாரப்பூர்வமான பாதிப்பு ஸ்கேனரைப் பயன்படுத்தவும்.
6. தவறாமல் உங்கள் சாப்ட்வேரை அப்டேட் செய்யுங்கள். சாப்ட்வேர் அப்டேட்கள் உங்களை எப்பொழுதும் மால்வேர் தாக்குதலிலிருந்து காப்பாற்றும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

உங்கள் மொபைல் மால்வேர் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை எப்படி அறிவது?

உங்கள் மொபைல் மால்வேர் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை எப்படி அறிவது?

1. உங்கள் மொபைல் மிகவும் மெதுவாக செயல்படும்.
2. செயலிகள் லோடு ஆவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும்.
3. பேட்டரி பயன்பாடு எதிர்பார்த்ததை விட வேகமாகச் செலவழியும்.
4. அதிகமான பாப்-அப் விளம்பரங்கள் உங்கள் போனில் தோன்றும்.
5. உங்கள் போனில், நீங்கள் டவுன்லோட் செய்யாத செயலிகள் ஏதேனும் இருக்கும்.
6. விவரிக்கப்படாத டேட்டா பயன்பாடு மற்றும் அதிகப்படியான தொலைப்பேசி பில் வந்து சேரும்.

Jio Set-Top-Box இப்படி தான் இருக்குமா? ஜியோஃபைபர் கனெக்ஷனை எப்படி முன்பதிவு செய்வது?Jio Set-Top-Box இப்படி தான் இருக்குமா? ஜியோஃபைபர் கனெக்ஷனை எப்படி முன்பதிவு செய்வது?

மால்வேரால் பாதிக்கப்பட்ட உங்கள் மொபைலை எவ்வாறு சரிசெய்வது?

மால்வேரால் பாதிக்கப்பட்ட உங்கள் மொபைலை எவ்வாறு சரிசெய்வது?

முதலில், பீதி அடைய வேண்டாம். சமீபத்திய சாப்ட்வேர் அப்டேட் அல்லது செயலி அப்டேட்டினால் கூட உங்கள் ஸ்மார்ட்போன் வினோதமாகச் செயல்படலாம். மால்வேர் தாக்குதல் உண்மையில் உங்கள் போனில் நடந்துள்ளதா என்பதை அறிய malware detection செயலிகளைப் பயன்படுத்துங்கள். சிறப்பான மற்றும் அதிகாரப்பூர்வமான சில malware detection செயலிகளை குறிப்பிட்டுள்ளோம் அவற்றை பயன்படுத்தி நிலைமையைச் சரி செய்துகொள்ளுங்கள்.

malware detection செயலிகள்

malware detection செயலிகள்

1. Avast Mobile Security & Antivirus
2.​ Bitdefender Mobile Security
3. AVG Antivirus FREE for Android
4. ​Kaspersky Antivirus & Security
5.​ Malwarebytes Anti-Malware

ஜியோ ஜிகா பைபர் சேவை இந்தியா முழுக்க இலவசம்: அதிரவிட்ட அம்பானி.!ஜியோ ஜிகா பைபர் சேவை இந்தியா முழுக்க இலவசம்: அதிரவிட்ட அம்பானி.!

மால்வேர் தாக்குதலிலிருந்து பாதுகாப்பாக இருங்கள்

மால்வேர் தாக்குதலிலிருந்து பாதுகாப்பாக இருங்கள்

இந்த செயலிகள் உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள மால்வேர் வைரஸ்களை கண்டறிந்து நீக்கிவிடும். இதில் சில பயன்பாடுகள் இலவசமாக வழங்கப்பட்டாலும், சில முக்கிய அம்சங்களுக்கு நாம் ஒரு கட்டணம் செலுத்தத்தான் வேண்டும் என்பதையும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள். இந்த முறைகளின் படி உங்கள் போனில் உள்ள மால்வேர்களை கண்டறிந்து, தேவையற்ற மால்வேர் தாக்குதலிலிருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
How Does Malware Enter Your Phone And How To Remove It : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X