Google சர்ச் ஆப்ஸில் அதிகம் எதிர்பார்த்த 'அந்த' அம்சம் வெளியிட தயார்! ஆண்ட்ராய்டு, iOS பயனர்கள் குஷி

|

கூகிள் சர்ச் பயன்பாடு ஒருவழியாக, இறுதியாக தனது ஆண்ட்ராய்டு மற்றும் iOS பயனர்களுக்கான மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டார்க் தீம் பயன்முறை அம்சத்தைப் தற்பொழுது வெளியிட்டுள்ளது. இந்த அம்சம் நீண்ட காலமாகச் சோதனையிலிருந்து வந்தது, தற்பொழுது அனைவருக்கும் கிடைக்கும் விதத்தில் கூகிள் இந்த டார்க் மோடு பயன்முறையை வெளியிட்டுள்ளது. இதை எப்படி உங்கள் ஸ்மார்ட்போனில் ஆக்டிவேட் செய்யலாம் என்று பார்க்கலாம்.

புதிய டார்க் மோட் அம்சம்

புதிய டார்க் மோட் அம்சம்

இந்த நாட்களில் AMOLED டிஸ்பிளே ஸ்க்ரீன்கள் மிகவும் பொதுவானதாக இருப்பதால், அதற்கான UI இணக்கத்துடன் கூடிய டார்க் மோட் இடைமுகம் தேவைப்படுகிறது. இதற்கான சரியான மென்பொருளைக் கூகிள் நிறுவனம் உருவாக்கி வந்தது. AMOLED டிஸ்பிளே ஸ்மார்ட்போன்களில் டார்க் மோடு பயன்முறை நிறைய பேட்டரியைச் சேமிப்பது மட்டுமல்லாமல், ஸ்மார்ட்போனை இரவில் அதிகம் பயன்படுத்தக்கூடியதாக மாற்றுகிறது.

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் இவர்களுக்கு மட்டுமே டார்க் தீம்

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் இவர்களுக்கு மட்டுமே டார்க் தீம்

கூகிள் தேடல் பயன்பாட்டின் சமீபத்திய புதுப்பித்தலுடன், நிறுவனம் இறுதியாகப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டார்க் மோடு அம்சத்தை மக்களுக்காக தற்பொழுது வழங்கியுள்ளது. இருப்பினும், இந்த அம்சம் ஆண்ட்ராய்டு 10 ஸ்மார்ட்போன்களில் மட்டுமே எடுக்கக்கூடியது.

ஸ்மார்ட்போனில் வேகமாக பரவும் வைரஸ்! அனைத்து மாநில அரசுக்கும் சிபிஐ விடுத்த எச்சரிக்கை!ஸ்மார்ட்போனில் வேகமாக பரவும் வைரஸ்! அனைத்து மாநில அரசுக்கும் சிபிஐ விடுத்த எச்சரிக்கை!

ஆப்பிள் பயனர்களில் யாருக்கெல்லாம் டார்க் தீம் கிடைக்கும்?

ஆப்பிள் பயனர்களில் யாருக்கெல்லாம் டார்க் தீம் கிடைக்கும்?

அதேபோல், கூகிள் நிறுவனத்தின் இந்த புதிய டார்க் மோடு தீம்iOS 10 இயங்குதளத்திற்கு மேல் இயங்கும் ஐபோன் பயனர்களுக்கு மட்டுமே இந்த அம்சம் பயன்படுத்தக் கிடைக்கிறது என்று கூகிள் தெரிவித்துள்ளது. ஆப்பிள் பயனர்களில் iOS 10 இனத்திற்கு பயனர்கள் இந்த டார்க் தீம் அம்சத்தை பயன்படுத்தலாம்.

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் டார்க் தீம் ஆக்டிவேட் செய்வது எப்படி?

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் டார்க் தீம் ஆக்டிவேட் செய்வது எப்படி?

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் டார்க் தீம் ஆக்டிவேட் செய்வதற்குப் பயனர்கள் கூகிள் சர்ச் பயன்பாட்டை ஓபன் செய்து வலது மேல் மூலையில் உள்ள மூன்று புளியை கிளிக் செய்து செட்டிங்ஸ் கிளிக் செய்ய வேண்டும். கூகிள் செட்டிங்ஸ் மெனுவில் உள்ள தீம்ஸ் ஆப்ஷனை கிளிக் செய்து டார்க் என்ற விருப்பத்தை கிளிக் செய்து உங்கள் கூகிள் பயன்பாட்டை டார்க் தீமாக மாற்றிப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

கொரோனா வார்டுக்குள் ஆன்லைன் டெலிவரி மூலம் சிக்கன் தந்தூரி, பிரியாணி! அடங்காத நோயாளிகள்!கொரோனா வார்டுக்குள் ஆன்லைன் டெலிவரி மூலம் சிக்கன் தந்தூரி, பிரியாணி! அடங்காத நோயாளிகள்!

ஆப்பிள் ஐபோனில் டார்க் தீம் ஆக்டிவேட் செய்வது எப்படி?

ஆப்பிள் ஐபோனில் டார்க் தீம் ஆக்டிவேட் செய்வது எப்படி?

இதேபோல் ஆப்பிள் ஐபோன் பயனர்களும் தங்களின் கூகிள் சர்ச் பயன்பாட்டை ஓபன் செய்து செட்டிங்ஸ் சென்று டார்க் தீம் அம்சத்தை ஆக்டிவேட் செய்துகொள்ளலாம். ஆப்பிள் iOS 12 இயக்க முறைமையை இயக்கும் பயனர்களுக்குக் கூகிள் பயன்பாட்டின் டார்க் தீம் மோடு ஆக்டிவேட் செய்ய டோஃகில் ஸ்விட்ச் விருப்பம் வழங்கப்பட்டுள்ளது.

அண்ட்ராய்டு மற்றும் iOS பயனர்கள் குஷி

அண்ட்ராய்டு மற்றும் iOS பயனர்கள் குஷி

பெரும்பாலான கூகிள் பயன்பாடுகளைப் போலவே, இந்த புதுப்பிப்பு அப்டேட் மக்களைச் சென்றடையும் அளவுக்கு நிலையானதா என்பதை நிறுவனம் சரிபார்த்த பின்னரே எப்பொழுது வெளியீட்டுக்கு அனுமதிக்கும். கூகிள் நிறுவனம் எந்த கால அவகாசத்தையும் வெளியிடவில்லை என்றாலும் கூட, அண்ட்ராய்டு மற்றும் iOS பயனர்கள் இந்த வார இறுதிக்குள் இந்த புதிய அப்டேட்டை பெறுவார்கள் என்று அறிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Google Search App Gets Dark Mode Feature For Both Android And iOS Users : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X