விவோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விலைகுறைப்பு.!


விவோ நிறுவனத்தின் இரண்டு புதிய ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ஆஃப்லைன் தளத்தில் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்படி விலைகுறைக்கப்பட்ட விவோ y15, விவோ y12 ஸ்மார்ட்போன் மாடல்கள் மகேஷ் டெலிகாம் உட்பட பல்வேறு ஆஃப்லைன் ஸ்டோர்களில் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

விவோ Y15, விவோ Y12

ஆனால் பிளிப்கார்ட் மற்றும் அமேசான் தளங்களில் இந்த விவோ Y15, விவோ Y12 ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சிறந்த அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன்கள் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
விலைகுறைப்பு

விவோ Y15 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.12,990-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.12,990-விலையில்
விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் விவோ Y12 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.10,999-ஆக இருந்தது, தற்சமயம்விலைகுறைக்கப்பட்டு ரூ.9,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர்: ரூ.699 விலை-அன்லிமிடெட் டேட்டா.! மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்.!

விவோ Y15 டிஸ்பிளே:

இந்த ஸ்மார்ட்போன் மாடல் 6.35-இன்ச் வாட்டர்டிராப் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1544 x 720 பிக்சல்திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. இக்கருவி ஆக்டோ-கோர்
மீடியாடெக் பி22 எஸ்ஒசி சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதள்தை அடிப்படையாக கொண்டு
இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

விவோ Y15 கேமரா

விவோ Y15 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைட் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் எனமூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. மேலும் 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், ஏஐ-அம்சம் என பல்வேறு வசதிகள் இந்தஸ்மார்ட்போனில் உள்ளது. விவோ வ்யை15 சாதனத்தில் 5000எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளும் உள்ளது.

விவோ வ்யை12 டிஸ்பிளே

விவோ வ்யை12 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.35-இன்ச் முழு எச்டி ஐபிஎஸ் பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 720 x 1544 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.இக்கருவி ஆக்டா-கோர் மிடியாடெக் ஹீலியோ பி22 எஸ்ஒசி சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

மூன்று கேமராக்கள்

விவோ வ்யை12 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி வைட-ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என
மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சம் இவற்றுள்
அடக்கம். இந்த ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் உள்ளது

Best Mobiles in India

English Summary

Vivo Y15 and Y12 Price Drops in India : Read more about this in Tamil GizBot