ப்ரீசார்ஜ் - வங்கி : பண பரிமாற்றம் நிகழ்த்துவது எப்படி.?

ப்ரீசார்ஜ் ஆப் மூலம் பண பரிமாற்றங்கள் செய்வதில் உங்களுக்கு குழப்பம் ஏதேனும் இருப்பின் கீழ்வரும் எளிய வழிமுறைகள் அதற்கு தீர்வாய் விளங்கும்.

Written By:

பேடிஎம் மொபைல் வேலட்டிற்கு நிகராக இந்தியாவின் மிகப்பெரிய மொபைல் பணப்பைகளில் ஒன்றாக ப்ரீசார்ஜ் உருவாகியுள்ளது. நவம்பர் 8-ஆம் தேதி முதல் இந்தியாவில் ரூ.500/- மற்றும் ரூ.1000/- நோட்டுக்கள் செல்லுபடியாகாது என்ற அறிவிப்பை தொடர்ந்து பணமில்லா பண பரிமாற்ற முறையை இந்திய மக்கள் பெரும்பாலோனோர்கள் பயன்படுத்தி வருகின்றன. அதில் ஒரு ஆன்லைன் ரீசார்ஜ் ஆப் தான் - ப்ரீசார்ஜ்.!

ப்ரீசார்ஜ் - வங்கி : பண பரிமாற்றம் நிகழ்த்துவது எப்படி.?

நீங்கள் ப்ரீசார்ஜ் பயன்படுத்த விரும்பினால் மற்றும் ப்ரீசார்ஜ் ஆப்பில் பண பரிமாற்றம் பற்றிய போதுமான தெளிவு உங்களிடம் இல்லை என்றால் அதாவது ப்ரீசார்ஜ் ஆப் பயன்படுத்தி எந்தவொரு வங்கி கணக்கிற்கும் பணம் பரிமாற்றம் செய்வது எப்படி.? ப்ரீசார்ஜ் டெஸ்க்டாப் வலைத்தளம் வழியாக ப்ரீசார்ஜ் வேலட்டில் இருந்து வங்கிக்கு பணம் பரிமாற்றம் செய்வது எப்படி.? என்பதை பற்றிய 'டிப்ஸ்' தொகுப்பே இது. பின்வரும் வழிமுறைகள் உங்களுக்கு ப்ரீசார்ஜ் ஆப் பற்றிய நல்லதொரு தெளிவை வழங்கும்.

ப்ரீசார்ஜ் ஆப் பயன்படுத்தி வங்கி கணக்கிற்கு பணம் பரிமாற்றம் செய்வது எப்படி.?

1) ப்ரீசார்ஜ் பயன்பாட்டை திறந்து உங்கள் அக்கவுண்டில் நுழையவும்
2) மை அக்கவுண்ட் டீடெயில்ஸ் பொத்தானை தட்டவும்
3) உங்கள் பணப்பையில் உள்ள பேலன்ஸ்-ஐ டாப் செய்யவும் (உங்கள் பெயர் மற்றும் மின்னஞ்சல் ஐடி கீழேயுள்ள)
4) இப்பொது வித்ட்ரா பட்டனை டாப் செய்து, நீங்கள் பணத்தை பரிமாற்றம் செய்ய விரும்பும் வங்கி கணக்கு தேர்வை நிகழ்த்தவும் திரும்பப்பெறு தட்டவும்
5) வித்ட்ரா ஆப்ஷனை டாப் செய்யவும்.

ப்ரீசார்ஜ் டெஸ்க்டாப் வலைத்தளம் வழியாக ப்ரீசார்ஜ் வேலட்டில் இருந்து வங்கிக்கு பணம் பரிமாற்றம் செய்வது எப்படி.?

1) ப்ரீசார்ஜ் வலைத்தளத்தினுள் நுழைந்து உங்கள் ப்ரீசார்ஜ் அக்கவுண்ட்டில் உள்நுழையவும்
2) ஆட் மணி பொத்தானை கிளிக் செய்யவும்
3) அடுத்த விண்டோவில் வித்ட்ரா டூ பேங்க் விருப்பத்தை (இடது புறத்தின் கீழே இருந்து இரண்டாவது விருப்பம்) தேர்வு செய்யவும்
4) நீங்கள் பணத்தை பரிமாற்றம் செய்ய விரும்பும் வங்கியை தேர்வு செய்யவும்
5) வித்ட்ரா பட்டனை கிளிக் செய்யவும்.

இதே போல பேடிஎம் ஆப் வழியாக பணப்பரிமாற்றம் நிகழ்த்துவது எப்படி என்ற டூடோரியலுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
How to Transfer Money From FreeCharge Wallet to Bank Account. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்