Home
Mobile

ரூ.47000 டிஸ்கவுண்ட்டில் லேட்டஸ்ட் iPhone.. ஆர்ட்ர்களை அள்ளும் Apple 50வது ஆண்டு விழா ஆபர்.. எந்த மாடல்?

ஆப்பிள் (Apple) நிறுவனம் தனது 50 வது ஆண்டு விழாவை கொண்டாடும் வேளையில், ஆப்பிளின் அங்கீகரிக்கப்பட்ட ரீசெல்லர் ஆன இமேஜின் ஸ்டோர் (Imagine Store) வழியாக லேட்டஸ்ட் ஐபோன் (Latest iPhone) மாடல்கள் மீது பல வகையான தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதன்கீழ் - உடனடி தள்ளுபடிகள், வங்கி கேஷ்பேக் மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனஸ் விருப்பங்களின் கலவையின் மூலம், ஆப்பிள் நிறுவனத்தின் பல ஐபோன் மாடல்களின் விலைகளை கடுமையாக குறைக்க முடிகிறது. குறிப்பாக ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் (iPhone 17 Pro Max) மாடலின் விலையை தாறுமாறாக குறைக்க முடிகிறது.

ரூ.47000 டிஸ்கவுண்ட்டில் லேட்டஸ்ட் iPhone.. எந்த மாடல்?

ஆப்பிள் 50 வது ஆண்டு விழா - மைஇமேஜின் ஸ்டோரில் கிடைக்கும் சலுகைகள்: 256ஜிபி ஸ்டோரேஜ் கோண கொண்ட ஐபோன் 17 ப்ரோ மேக்ஸின் எம்ஆர்பி ரூ.1,49,900 ஆகும். இந்த விற்பனையின் ஒரு பகுதியாக, அதன் விலை ரூ.1,02,900 ஆக குறைகிறது (ரூ.47,000 டிஸ்கவுண்ட்)!

இது ரூ.1,000 உடனடி தள்ளுபடி மற்றும் ரூ. 4,000 வங்கி கேஷ்பேக் ஆகியவற்றின் கலவையின் மூலம் கிடைக்கும் ஆபர் விலை ஆகும். மேலும், ரூ.6,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் தகுதியான மாடல்களுக்கு ரூ. 36,000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் வேல்யூவும் கூட வழங்கப்படுகிறது.

256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஐபோன் 17 ப்ரோ (iPhone 17 Pro) மாடலும் இந்த விற்பனையில் சேர்க்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்டது போன்ற எக்ஸ்சேஞ்ச் மற்றும் கேஷ்பேக் சலுகைகளுடன், இதன் விலை ரூ.89,900 ஆகக் குறைகிறது. இருப்பினும், இந்த மாடலின் மீது உடனடி தள்ளுபடி எதுவும் கிடைக்கவில்லை.

அடுத்ததாக ஐபோன் 17 (iPhone 17) இரண்டு ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. ஆரம்பத்தில் ரூ.82,900 என விலையிடப்பட்ட 256ஜிபி மாடலின் விலை ரூ. 37,900 ஆக குறைந்துள்ளது. அதே சமயம், ரூ.1,02,900 எம்ஆர்பி கொண்ட 512ஜிபி மாடல் ரூ.57,900 என்கிற விற்பனை விலையில் கிடைக்கிறது. இந்த விலையில் ரூ.1,000 உடனடி தள்ளுபடி, ரூ.3,000 வங்கி கேஷ்பேக், ரூ.6,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.35,000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் மதிப்பு ஆகியவைகள் அடங்கும்.

இந்த விற்பனையில் ஐபோன் ஏர் (iPhone Air) மாடலும் குறைந்த விலையில் வாங்க கிடைக்கிறது. இதன் 256ஜிபி மாடல் ரூ.56,900 க்கு கிடைக்கிறது. அதே சமயம், தள்ளுபடிகள், கேஷ்பேக் மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனஸ்களுக்கு பிறகு 512ஜிபி ஆப்ஷன் ரூ.76,900 க்கு கிடைக்கிறது. கடைசியாக வாடிக்கையாளர்கள் 24 மாதங்கள் வரையிலான வட்டியில்லா இஎம்ஐ விருப்பங்களையும் தேர்வு செய்யலாம் என்றும், தவணைகள் ரூ. 3,413-இல் இருந்து தொடங்கும் என்றும் இமேஜின் ஸ்டோர் அறிவித்துள்ளது.

ஐபோன் 17 ஏர் மாடலின் முக்கிய அம்சங்கள்: இது ஆப்பிள் நிறுவனத்தின் அல்ட்ரா ஸ்லிம் ஐபோன் மாடல் ஆகும் மற்றும் இசிம்-ஒன்லி மாடலும் ஆகும். அதாவது இசிம் ஆதரவை மட்டுமே கொண்டிருக்கும். டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 6.5-இன்ச் சூப்பர் ரெடினா XDR OLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மேலும் இது 3,000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் ப்ரோமோஷன் ஆகிய அம்சங்களையும் கொண்டுள்ளது

ஐபோன் ஏர் மாடல் ஆனது ப்ரோ மாடல்களை போலவே அதே ஏ19 ப்ரோ சிப்செட் கொண்டு இயக்கப்படுகிறது. கேமராக்களை பொறுத்தவரை. ஐபோன் ஏர் மாடலில் சிங்கிள் 48-மெகாபிக்சல் ஃப்யூஷன் பிரைமரி கேமரா உள்ளது. இது சென்சார்-ஷிப்ட் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன், எப்/1.6 அபெர்க்ஷர் மற்றும் 2எக்ஸ் டெலிஃபோட்டோ திறன்களை கொண்டுள்ளது. முன்பக்கத்தில், மற்ற ஐபோன் 17 மாடல்களைப் போலவே 18-மெகாபிக்சல் சென்டர் ஸ்டேஜ் கேமரா உள்ளது.

பேட்டரியை பொறுத்தவரை ஐபோன் ஏர் மாடலின் பேட்டரி விவரக்குறிப்புகளை ஆப்பிள் இன்னும் வெளியிடவில்லை. இருப்பினும் இது "நாள் முழுவதும்" பேட்டரி லைஃப்பை வழங்குவதாகவும், ஒரே சார்ஜில் 27 மணிநேரம் வரை வீடியோ பிளேபேக்கை வழங்குவதாகவும் கூறப்படுகிறது. மெங்கும் 30 நிமிட சார்ஜிங்கில் 50 சதவீதம் வரை சார்ஜ் ஆகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Apple 50th Anniversary Sale iPhone 17 Pro Max iPhone 17 Pro iPhone 17 iPhone Air gets Discount in Imagine Store
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X