Home
News

FASTag-ல் புதிய 72 மணி நேர விதி.. வாகன ஓட்டிகள் கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. இல்லையெனில் சிக்கல் தான்..

இந்தியாவில் உள்ள சுங்கச்சாவடிகளில் நீண்ட நேரம் காத்திருக்காமல், உடனுக்குடன் சுங்கக் கட்டணத்தைச் செலுத்த ஃபாஸ்டேக் (FASTag) பெரிதும் பயன்படுகிறது. முன்பு சுங்கச்சாவடிகளை நாம் கடந்து செல்லும்போது வானத்தை நிறுத்தி பணமாகச் செலுத்தி மீதமுள்ள தொகை வாங்கி செல்ல வேண்டிய நிலை இருந்தது. அதுவும் இதனால் சுங்கச்சாவடிகளில் நீண்ட வரிசைகளில் வாகனங்கள் காத்திருக்க வேண்டி நிலைமையும் உண்டானது.

அதேபோல் வார இறுதி நாட்கள் மற்றும் முக்கியமான பண்டிகை நாட்களில் சுங்கச்சாவடிகளிலேயே பல மணி நேரம் வாகனங்கள் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. அதன்பிறகு ஃபாஸ்டேக் நடைமுறைக்கு வந்த பிறகு இது முற்றிலுமாக மாறிவிட்டது. சுங்க கட்டணம் செலுத்த வேண்டிய அனைத்து வாகனங்களில் ஃபாஸ்டேக் ஒட்டப்பட்டு இருந்து. இது வாகன உரிமையாளரின் வங்கி கணக்கோடு தொடர்பு படுத்தப்பட்டிருக்கும்.

FASTag-ல் புதிய 72 மணி நேர விதி.. வாகன ஓட்டிகள் தெரிஞ்சுக்கோங்க..

அதுவும் சுங்கச்சாவடி கடந்து செல்லும்போது தானாகவே ஃபாஸ்டேக் ஸ்கேன் செய்யப்பட்டு சுங்க கட்டணம் வங்கி கணக்கில் இருந்து எடுத்துக் கொள்ளப்படும். இந்த ஃபாஸ்டேக் வசதி வந்தது முதல் இந்தியாவில் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் காத்திருப்பது பெருமளவு குறைந்து இருக்கிறது. இதன்மூலம் எரிபொருளும், நேரமும் மிச்சப்படுத்தப்பட்டுள்ளது என்பது தான் உண்மை.

ஆனாலும் இந்த ஃபாஸ்டேக் முறையில் அவ்வப்போது புதிய மாற்றங்கள் வந்து கொண்டே தான் இருக்கிறது. அதன்படி தற்போது கூட ஒரு புதிய மாற்றம் வந்துள்ளது. வாகன ஓட்டிகள் இந்த மாற்றம் குறித்து தெரிந்துவைத்துக் கொள்வது மிகவும் நல்லது.

தற்போது இந்திய தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் ரொக்க பணமாகச் சுங்க கட்டணத்தைச் செலுத்தும் முறை நிறுத்தப்படுகிறது. உங்களுடைய ஃபாஸ்டேக் வேலை செய்யவில்லை என்றாலும் அல்லது பேலன்ஸ் இல்லை என்றாலும் நீங்கள் ரொக்கமாகப் பணத்தைக் கொடுத்து சுங்க கட்டணத்தைச் செலுத்த முடியாது. அதற்கு மாற்றாக யுபிஐ (UPI) செயலிகள் மூலம் மட்டுமே பணம் செலுத்த முடியும். ஆகவே உங்களது வண்டியில் ஃபாஸ்டேக் இருப்பதையும் அதில் எப்போதும் பேலன்ஸ் இருப்பதையும் உறுதி செய்துகொள்வது நல்லது.

அதேபோல் கார், ஜீப், வேன் போன்ற தனியார் வாகனங்களுக்கு ஓராண்டுக்கான ஃபாஸ்டேக் பாஸ் வழங்கப்படுகிறது. இதன் விலை சமீபத்தில் உயர்த்தப்பட்டுள்ளது. முன்பு ரூ.3000 இருந்த ஃபாஸ்டேக் பாஸ் கட்டணம் இப்போது ரூ.3075-ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது குறிப்பாக இந்த பாஸ் இருந்தால் ஒரு வருடத்திற்கு எந்த சுங்க கட்டணமும் செலுத்தாமல் செல்லலாம்.

FASTag-ல் புதிய 72 மணி நேர விதி.. வாகன ஓட்டிகள் தெரிஞ்சுக்கோங்க..

மேலும் இப்போது சுங்க கட்டணம் செலுத்தாமல் வாகன ஓட்டிகள் ஏமாற்றுவதைத் தடுப்பதற்காக ஒரு புதிய மின்னணு கண்காணிப்பு முறையைத் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளது. அதன்படி இந்த புதிய மின்னணு கண்காணிப்பு முறையில் அனைத்து வாகனங்களும் கண்காணிக்கப்படும். இதில் ஒரு குறிப்பிட்ட வாகனம் சுங்க கட்டணம் செலுத்த தவறியிருந்தால் அந்த வாகனத்தின் உரிமையாளருக்கு எஸ்எம்எஸ் (SMS) மூலம் ஒரு எச்சரிக்கை தகவல் அனுப்பப்படும்.

இந்த எஸ்எம்எஸ் வந்த 72 மணி நேரத்திற்குள் குறிப்பிட்ட அந்த சுங்க கட்டணத்தை அந்த வாகன உரிமையாளர் கண்டிப்பாகச் செலுத்த வேண்டும். ஒருவேளை 72 மணி நேரத்திற்குப் பின்பு அவர்கள் கட்டணத்தைச் செலுத்தவில்லை என்றால் சுங்க கட்டணம் இரட்டிப்பாகும். அதாவது நீங்கள் அபராத தொகை செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
New FASTag Rules 2026: Missed Toll Payments Could Turn Costly in 72 Hours
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X