Home
Mobile

Motorola 5ஜி போனுக்கு செம ஆஃபர்.. சோனி கேமரா.. 68W சார்ஜிங்.. 256ஜிபி மெமரி.. எந்த மாடல்?

மோட்டோரோலா நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அதுவும் இந்நிறுவனத்தின் போன்கள் தரமான அம்சங்களுடன் வெளிவருவதால் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் மோட்டோரோலா 5ஜி ஒன்று தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

தற்போது பிளிப்கார்ட் தளத்தில் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட மோட்டோரோலா எட்ஜ் 60 5ஜி (MOTOROLA Edge 60 5G) ஸ்மார்ட்போனுக்கு 19 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.25,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1300 வரை தள்ளுபடியும் கிடைக்கும். எனவே இந்த போனை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

Motorola 5ஜி போனுக்கு செம ஆஃபர்.. சோனி கேமரா.. எந்த மாடல்?

மோட்டோரோலா எட்ஜ் 60 5ஜி அம்சங்கள் (Motorola edge 60 5G specifications): 6.67-இன்ச் குவாட் கர்வ்ட் பிஓஎல்இடி டிஸ்பிளே (quad-curved pOLED Display) வசதியுடன் புதிய மோட்டோரோலா எட்ஜ் 60 5ஜி போன் வெளிவந்துள்ளது. இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

தரமான ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 (2.6GHz Octa Core MediaTek Dimensity 7400) சிப்செட் வசதி உடன் புதிய மோட்டோரோலா எட்ஜ் 60 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கேமிங் பயனர்களை கவரும் வகையில் மாலி ஜி-615 எம்சி2 ஜிபியு (Mali-G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த போனில் உள்ளது.

அதேபோல் மோட்டோரோலா எட்ஜ் 60 5ஜி ஸ்மார்ட்போனில் 50எம்பி சோனி எல்ஒய்டி-700சி பிரைமரி சென்சார் + 50எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 10எம்பி டெலிபோட்டோ சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமரா இந்த போனில் உள்ளது. அதேபோல் 4கே வீடியோ பதிவு ஆதரவைக் கொண்டுள்ளன இந்த போனின் கேமராக்கள்.

IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் மோட்டோரோலா எட்ஜ் 60 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இராணுவ தர MIL-STD-810H சான்றிதழ் பெற்றுள்ளது இந்த மோட்டோரோலா போன். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் எடை 181 கிராம் ஆகும்.

Motorola 5ஜி போனுக்கு செம ஆஃபர்.. சோனி கேமரா.. எந்த மாடல்?

வைஃபை 6, புளூடூத் வி5.4, 5ஜி, 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. 5500mAh பேட்டரி உடன் மோட்டோரோலா எட்ஜ் 60 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 68W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது .

அதுவும் யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers), டால்பி அட்மாஸ் (Dolby Atmos) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன. ஆண்ட்ராய்டு 15 (Android 15) மூலம் இந்த போன் இயங்கும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Motorola Edge 60 5G with 256GB memory available at 19 percent discount on Flipkart: Check Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X