17 வருட பயணம்: யூடியூப்பில் பதிவேற்றப்பட்ட முதல் வீடியோ என்ன தெரியுமா?

|

சமூகவலைதளங்களில் மிகவும் பிரதான பயன்பாடாக யூடியூப் திகழ்ந்து வருகிறது. பொழுதுபோக்கு, கற்றல், அறிதல் என பல விஷயங்களுக்கான வீடியோக்களும் யூடியூப்பில் இருக்கிறது. ஆனால் யூடியூப்பில் முதன்முதலாக பதிவேற்றப்பட்ட வீடியோ என்னவென்று தெரியுமா?. வாருங்கள் இது குறித்த தகவலை விரிவாக பார்க்கலாம்.

வருவாய் வழங்கும் யூடியூப்

வருவாய் வழங்கும் யூடியூப்

சமூகவலைதளங்களில் கணக்குகள் தொடங்கி அதன்மூலம் பணம் ஈட்டுவோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக யூடியூப்பில் சேனல் தொடங்கி அதன்மூலம் பணம் ஈட்டியதோடு பிரபலமடைந்தவர்கள் ஏராளம். யூடியூப் நிறுவனம் வீடியோக்களின் தரம் மற்றும் பார்வையாளர்கள் எண்ணிக்கையை வைத்து "யூடியூப் ஆட் சென்ஸ் சேவை" மூலம் வருவாய் ஈட்டித் தருகிறது. சமூகவலைதளங்களில் உச்சமாக இருக்கும் யூடியூப் தொடங்கப்பட்ட 17 வருடங்கள் கடந்துவிட்டன.

டியூப்பில் பதிவேற்றப்பட்ட முதல் வீடியோ

டியூப்பில் பதிவேற்றப்பட்ட முதல் வீடியோ

17 வருடங்களுக்கு முன்னால் யூடியூப்பில் பதிவேற்றப்பட்ட முதல் வீடியோவை தற்போது யூடியூப் அதன் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிர்ந்துள்ளது. இந்த யூடியூப் தளமானது 2005 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சாட் ஹர்லி, ஸ்டீவ் சென் மற்றும் ஜவேக் க்ரீம் என்ற மூவரால் தொடங்கப்பட்டது. இந்த தளத்தை உருவாக்கிய மூவரில் ஒருவரான ஜவேக் க்ரீம் யூடியூப் இணை நிறுவனர் ஆவார். 17 வருடங்களுக்கு முன்னதாக யூடியூப்பில் பதிவேற்றப்பட்ட தளத்தின் முதல் வீடியோவில் ஜவேக் க்ரீம் மற்றும் ஒரு விலங்கு இடம்பெற்றிருக்கிறது.

யானைகள் குறித்து சிறிய விளக்கம்

யானைகள் குறித்து சிறிய விளக்கம்

யூடியூப்பில் பதிவேற்றப்பட்ட முதல் வீடியோவானது சான் டியாகோ உயிரியல் பூங்காவில் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த வீடியோவில், பூங்காவின் வேலிக்குள் இருக்கும் இரண்டு யானைகளுக்கு முன்பு யூடியூப் இணை நிறுவனர் ஜாவேத் க்ரீம் நின்றபடி யானைகள் குறித்து சிறிய விளக்கம் அளிக்கிறார்.

முதல் வீடியோவில் அளிக்கப்பட்டுள்ள விளக்கம்

முதல் வீடியோவில் அளிக்கப்பட்டுள்ள விளக்கம்

இந்த வீடியோவில் "சரி, இதோ நாம் யானகளுக்கு முன்னால் இருக்கிறோம். இவர்கள் குறித்த அருமையான விஷயம் என்னவென்றால், அவர்களுக்கு உண்மையாகவே மிகவும் நீளமான தும்பிக்கைகள் உள்ளன. அது மிகவும் அருமையாக இருக்கிறது. மேலும் சொல்ல வேண்டியது, அவ்வளவுதான் என இணை நிறுவனர் ஜாவேத் க்ரீம் யானைகள் குறித்து குறிப்பிடுகிறார்.

27 ஆண்டுகளுக்கு பிறகு மூடப்பட்ட Internet Explorer.. 90s கிட்ஸ் குமுறல்..2K கிட்ஸ் கேலி.. என்னாச்சு தெரியுமா?27 ஆண்டுகளுக்கு பிறகு மூடப்பட்ட Internet Explorer.. 90s கிட்ஸ் குமுறல்..2K கிட்ஸ் கேலி.. என்னாச்சு தெரியுமா?

இன்ஸ்டாகிராம் கணக்கில் வீடியோவை பகிர்ந்த யூடியூப்

#YouTubeFactsFest என்ற ஹேஷ்டேக் உடன் யூடியூப் அதன் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கில் இந்த வீடியோவை பதிவேற்றியுள்ளது. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் யூடியூப் இணை நிறுவனர் ஜாவேக் க்ரீமின் சரிபார்க்கப்பட்ட (ப்ளூ டிக்) யூடியப் கணக்கில் பதிவேற்றப்பட்டிருக்கும் ஒரே வீடியோ இதுதான். இந்த வீடியோ 1.8 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றிருக்கிறது.

யூடியூப்பை வாங்கிய கூகுள்

யூடியூப்பை வாங்கிய கூகுள்

யூடியூப் தொடங்கப்பட்ட ஓராண்டில் கூகுள் நிறுவனம் அதை 1.65 பில்லியன் டாலருக்கு வாங்கியது. அப்போதில் இருந்து யூடியூப்பின் தாய் நிறுவனமாக கூகுள் திகழ்ந்து வருகிறது. 2020 ஆம் ஆண்டில் மட்டும் யூடியூப் 19.8 பில்லியன் டாலர் வருமானம் ஈட்டி இருப்பது குறிப்பிடத்தக்க ஒன்று. தற்போது சமூகவலைதளங்களின் அடையாளமாகவே யூடியூப் இருக்கிறது என்றால் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. இந்த நிலையில் யூடியூப் பகிர்ந்துள்ள அதன் முதல் வீடியோவானது அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது.

Vlog பிரிவை சேர்ந்த வீடியோ

Vlog பிரிவை சேர்ந்த வீடியோ

யூடியூப்பில் பதிவேற்றப்பட்ட முதல் வீடியோவானது Vlog பிரிவை சேர்ந்ததாகும். பயண விரும்பிகள் தாங்கள் மேற்கொள்ளும் பயணம், அங்கு காணப்படும் சுவாரஸ்ய நிகழ்வு, கிடைக்கும் சுவையான உணவு உள்ளிட்டவைகள் குறித்து வீடியோவாக பதிவேற்றப்படும் பதிவுகளே Vlog எனப்படும். யூடியூப்பில் பதிவேற்றப்பட்ட முதல் வீடியோ Vlog பிரிவை சேர்ந்ததாக இருப்பது பல vlogger-களையும் குஷிப்படுத்தி இருக்கிறது.

PUBG கேம் விளையாடிய 16 வயது இளைஞர் தூக்கு.. நண்பர்கள் செய்த விளையாட்டு விபரீதம் ஆனது..PUBG கேம் விளையாடிய 16 வயது இளைஞர் தூக்கு.. நண்பர்கள் செய்த விளையாட்டு விபரீதம் ஆனது..

விளம்பரங்களின்றி யூடியூப் வீடியோ

விளம்பரங்களின்றி யூடியூப் வீடியோ

இந்த 17 ஆண்டுகளில் யூடியூப் ஆற்றிய சேவைகள் என்பது அளப்பரியதாகும். சமையல் குறிப்பு முதல் பிரபஞ்ச விசித்திரங்கள் வரை அனைத்து தகவலும் யூடியூப்பில் வீடியோ அம்சத்தில் பெறலாம். யூடியூப்பில் வீடியோ பார்க்கும் போது விளம்பரங்கள் வருவது தொந்தரவாக இருக்கும் பட்சத்தில் யூடியூப் ப்ரீமியம் சந்தா அம்சத்தை அணுகலாம். ப்ரீமியம் செலுத்தி யூடியூப்பை அணுகும் போது விளம்பரங்களின்றி வீடியோக்களை ஸ்ட்ரீம் செய்யலாம்.

Best Mobiles in India

English summary
YouTube Went Nostalgic And Shares Its First Ever Video Uploaded 17 Years Ago

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X