Home
Mobile

ஆபர் மழை.. புதுசா 9020mAh பேட்டரி VIVO போன் வந்ததும் 6500mAh பேட்டரி 5ஜி போன் மீது செம்ம டிஸ்கவுண்ட்!

விவோ (Vivo) நிறுவனத்தின் லேட்டஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போனாக விவோ டி5 ப்ரோ 5ஜி மாடல் இந்தியாவில் அறிமுகமான வேகத்தில், இதற்கு முன்னதாக அறிமுகமான விவோ டி4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஆகிய இரண்டுமே "மாறி மாறி" ஆபர்களை அள்ளிவீசி கொண்டிருக்கிறது.

தற்போது விவோ டி4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் மீது நேரடி விலை குறைப்பு, பேங்க் ஆபர் மற்றும் எக்ஸ் சேன்ஜ் ஆபர் என மொத்தம் 3 வகையான சலுகைகள் கிடைக்கிறது. அதென்ன சலுகைகள் என்பதை பற்றி பார்பதற்க்ய் முன்னர், புதிதாக அறிமுகமான விவோ டி5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் விலை, அறிமுக ஆபர் மற்றும் விற்பனை விவரங்களை பார்த்துவிடலாம்.

VIVO: 6500mAh பேட்டரி 5ஜி போன் மீது செம்ம டிஸ்கவுண்ட்!

இந்தியாவில் விவோ டி5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.29,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது விவோ டி4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் அசல் அறிமுக விலையை (ரூ.27,999) விட ரூ.2000 அதிக விலைக்கு வெளியாகி உள்ளது.

அதே சமயம், அடுத்ததாக உள்ள விவோ டி5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் ஹை-எண்ட் 8ஜிபி + 256ஜிபி ஆப்ஷனின் விலை ரூ.33,999 என்றும், இறுதியாக 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட டாப்-ஆஃப்-தி-லைன் மாடலின் விலை ரூ.39,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

மேற்கண்ட அசல் அறிமுக விலைகள் ஒருபக்கம் இருக்க, விவோ நிறுவனமானது எச்டிஎப்சி வங்கி, எஸ்பிஐ மற்றும் ஆக்சிஸ் வங்கி கார்டுகளுடன் ரூ.3,000 வரை உடனடி வங்கி தள்ளுபடியையும், ஆறு மாதங்கள் வரை வட்டியில்லா இஎம்ஐ வசதியையும் வழங்குகிறது. மாற்றாக, வாடிக்கையாளர்கள் ரூ.3,000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் போனஸுடனும் விவோ டி5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கலாம்.

விவோ நிறுவனத்தின் இந்த புதிய 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது, இந்தியாவில் வருகிற ஏப்ரல் 21 ஆம் தேதி அன்று, இந்திய நேரப்படி மதியம் 12 மணிக்கு பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் விவோ இந்தியா (Vivo India) ஆன்லைன் ஸ்டோர் வழியாக விற்பனைக்கு வரும். இந்த ஸ்மார்ட்போன் காஸ்மிக் பிளாக் மற்றும் கிளேசியர் ப்ளூ ஆகிய 2 வண்ணங்களில் வாங்க கிடைக்கும்.

விவோ டி4 ப்ரோ 5ஜி மீது அறிவிக்கப்பட்டுள்ள 3 ஆபர்கள்: முன்னரே குறிப்பிட்டபடி விவோ டி4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்தியாவில் ரூ.27,999 க்கு அறிமுகமானது. பிளிப்கார்ட்டில் எந்த மாற்றமும் இல்லாமல், அதே விலைக்கு வாங்க கிடைத்தாலும், பல வகையான வங்கி மற்றும் எக்ஸ்சேன்ஜ் ஆபர் கிடைக்கிறது.

பிளிப்கார்ட் ஆக்சிஸ் கிரெடிட் கார்டு - ரூ.2350
பிளிப்கார்ட் ஆக்சிஸ் டெபிட் கார்டு - ரூ.1750
பிளிப்கார்ட் எஸ்பிஐ கிரெடிட் கார்டு - ரூ.2350
எச்டிஎப்சி கிரெடிட் அல்லது டெபிட் கார்டு - ரூ.1000
எக்ஸ்சேன்ஜ் ஆபர் - ரூ.25,250 வரை

இதேபோல அமேசானில் ரூ.529 நேரடி விலைக்குறைப்பை பெற்று ரூ.27,470 க்கு வாங்க கிடைக்கிறது. கூடவே ரூ.2500 பேங்க் ஆபரும் கிடைக்கிறது.

புதிய விவோ டி5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 144ஹெர்ட்ஸ் 6.83-இன்ச் 1.5கே AMOLED டிஸ்பிளே
- குவால்காமின் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7 சீரிஸ் சிப்செட்
- 90W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 9,020mAh பேட்டரி
- 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவை கொண்ட டூயல் ரியர் கேமரா செட்டப்

பழைய விவோ டி4 ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:
- 6.77-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் குவாட்-கர்வ்டு அமோஎல்இடி டிஸ்பிளே
- 1080 × 2392 பிக்சல்ஸ் ரெசல்யூஷன்
- 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 5000 நிட்ஸ் லோக்கல் பீக் ப்ரைட்னஸ்
- 1500 நிட்ஸ் க்ளோபல் பீக் ப்ரைட்னஸ்

- ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 சிப்செட் (Snapdragon 7 Gen 4 SoC)
- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) ஆதரவுடன் 50-மெகாபிக்சல் சோனி IMX882 பிரைமரி சென்சார்
- 3எக்ஸ் ஜூம் ஆதரவுடன் 50-மெகாபிக்சல் சோனி IMX882 பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா
- 2-மெகாபிக்சல் பொக்கே கேமரா
- 32-மெகாபிக்சல் செல்பீ கேமரா

- ஏஐ ப்ரொபெஷனல் போர்ட்ரெயிட்
- ஏஐ ஏரேஸ் 3.0
- ஏஐ மேஜிக் மூவ்
- ஏஐ இமேஜ் எக்ஸ்பாண்டர்
- ஏஐ போட்டோ என்ஹான்ஸ்
- IP68 மற்றும் IP69 ரேட்டிங்
- இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார்
- வெப்பச் சிதறலுக்கான 16,470 சதுர மிமீ 10-அடுக்கு வீசி கூலிங் சிஸ்டம்
- 90W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 6500mAh சிலிக்கான்-கார்பன் பேட்டரி

- ப்ரீ-இன்ஸ்டால்டு கூகுள் ஜெமினை ஆப்
- ஜெமினி லைவ் மற்றும் பிற ஏஐ அம்சங்கள்
- ஏஐ கேப்ஷன்ஸ்
- ஏஐ ஸ்மார்ட் கால் அசிஸ்டண்ட்
- ஏஐ ஸ்பேம் கால் ப்ரொடெக்ஷன்
- 5ஜி, 4ஜி, வைஃபை 6, ப்ளூடூத் 5.4, ஜிபிஎஸ் மற்றும் யூஎஸ்பி டைப்-சி ஆதரவு
- அளவீட்டில் 7.53 மிமீ தடிமன்
- எடையில் 192 கிராம்

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo T4 Pro 5G Selling Under Multiple Offers After Vivo T5 Pro 5G India Launch Price Sale Date April 21 Revealed
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X