Home
News

புது UPI ரூல்ஸ்.. இனி ரூ.10,000 மேல அனுப்ப படாதபாடு.. Google Pay, PhonePe, Paytm க்கு அமலாகும்.. என்ன மாறுது?

கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற யுபிஐ (UPI) பரிவர்த்தனைகளை செய்யும் பேங்க் கஸ்டமர்களுக்கு ஆர்பிஐ (RBI) என்றழைக்கப்படும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா (Reserve Bank of India) ஆனது புதிய விதிகளை அமலுக்கு கொண்டுவர இருக்கிறது. இந்த விதிகள் அமலுக்கு வந்தால், ரூ.10,000 மேல் பணம் அனுப்புவது படாதபாடாக இருக்கும். இந்த விதிகளால் என்னென்ன மாறப்போகிறது?

கையில் காசு வைத்து இருந்து செலவு செய்த காலம் மாறிவிட்டது. பெட்டி கடைக்கு சென்று ரூ.10 செலவு செய்தாலும் சரி, சூப்பர் மார்கெட்டுக்கு சென்று ரூ.1,000 செலவு செய்தாலும் சரி, பேங்க் அக்கவுண்டுடன் இணைக்கப்பட்ட கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm) போன்ற யுபிஐ ஆப்கள் இருந்தால் போதும், சில நொடிகளில் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்யலாம்.

புது UPI ரூல்ஸ்.. இனி ரூ.10,000 மேல அனுப்ப படாதபாடு.. Google Pay!

ரூ.1,00,000 வரையில் யுபிஐ ஆப்கள் வழியாக பணத்தை அனுப்பி கொள்ளலாம். இதிலும் சில பரிவர்த்தனைகளை செய்ய அதிக வரம்பு கிடைக்கிறது. ஹாஸ்பிட்டல் பில், டியூசன் பில், டிராவல் புக்கிங் போன்றவற்றுக்கு ரூ.1,00,000 லட்சம் மேல் பரிவர்த்தனைகளை செய்ய அனுமதி கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த பரிவர்த்தனைகளையும் நொடியில் செய்து கொள்ளலாம்.

ஆனால், இப்போது ஆர்பிஐ கொண்டுவர இருக்கும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கான 1 மணி நேர தாமத விதிகள் அமலுக்கு வந்தால், ரூ.10,000 மேல் அனுப்ப வேண்டுமானால் 1 மணி நேரம் காத்திருக்க வேண்டும். அதாவது, பணத்தை அனுப்பிய பிறகு டெபிட் செய்யப்பட்டுவிடும். ஆனால், பெற வேண்டிய நபருக்கு சென்று சேர 1 மணி நேரம் தேவைப்படும்.

இந்த நேரத்தில் பணத்தை அனுப்பியவர் அதை கேன்சல் செய்து கொள்ளலாம். அப்படி செய்தால், டெபிட் செய்யப்பட்ட பணம் மீண்டும் கிரெடிட் செய்யப்பட்டுவிடும். இந்த விதிகளால் தவறான நபருக்கு பணம் அனுப்பிவிட்டால், அதை தெரிந்து கொள்ள அவகாசத்தை கொடுக்கும். இதை பயன்படுத்தி அனுப்பி பரிவர்த்தனையை கேன்சல் செய்து அதை திரும்பப் பெற்று கொள்ளலாம்.

அதே நேரத்தில் கியூஆர் கோட் ஸ்கேன் செய்து பணத்தை அனுப்புவது, பில் கட்டுவது, சந்தா செலுத்துவது உள்ளிட்டவற்றை செய்யும்போது, 1 மணி நேர தாமதமானால், அது படாதபாடாக மாறிவிடும். ஆனால், ரிவர்வ் பேங்க் ஆப் இந்தியா இதை ஒட்டுமொத்த பரிவர்த்தனைகளுக்கும் கொண்டுவர வாய்ப்புகள் குறைவாகும். தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பும்போது மட்டுமே இது கொண்டுவரப்படும்.

கியூஆர் கோட், மொபைல் நம்பர் போன்றவற்றில் யுபிஐ பரிவர்த்தனைகளை செய்யும்போது, அதில் இருக்கும் பெயர்களை செக் செய்ய முடியும். இதை பெறுபவரிடம் சொல்லி உறுதிப்படுத்திய பிறகே அனுப்பி கொள்ளலாம். ஆனால், போர்டல், லிங்குகள் வழியாக யுபிஐ பரிவர்த்தனைகளை செய்யும்போது, யாருக்கு பணம் அனுப்புகிறோம் என்பதை தெரிந்து கொள்வது சிரமமாக இருக்கும்.

இதில் பணமும் பறிபோக வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. ஆகவே, இதுபோன்ற பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே இந்த 1 மணி நேர தாமத விதிகள் அமலுக்கு கொண்டுவரப்பட வாய்ப்புள்ளது. இந்த விதிகளுக்கு இப்போதைக்கு கருத்து கேட்பு மட்டுமே தொடங்கி இருக்கிறது. ஆகவே, யுபிஐ பரிவர்த்தனைகளை செய்யும் பேங்க் கஸ்டமர்கள் ரூ.10,000 மேல் தாராளமாக அனுப்பி கொள்ளலாம்.

அதேபோல இது பர்சன்-டூ-பர்சன் (person-to-person) பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே கொண்டுவரப்படும். பர்சன்-டூ-மெர்ஜென்ட்கள் (person-to-merchants) பரிவர்த்தனைக்கு கொண்டுவரப்படாது. ஏனென்றால், பில் செலுத்துவது உள்ளிட்டவை உடனடியாக நடக்க வேண்டியது அவசியமாகும். இதில் 1 மணி நேர தாமத்துக்கு வாய்ப்புகள் கூட இல்லை.

ஆகவே, தெரியாத நபர்களிடம் செய்யப்படும் பர்சன்-டூ-பர்சன் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே இந்த விதிகள் கொண்டுவரப்பட வாய்ப்புகள் இருக்கிறது. இதிலும் யுபிஐ கஸ்டமர்கள் நினைத்தால் உடனடியாக அனுப்பி கொள்ளலாம். அந்த பரிவர்த்தனையில் சந்தேகம் இருந்தால், 1 மணி நேர தாமத்ததை செயல்படுத்தி கொள்ளலாம் என்ற ஆப்ஷனும் கொடுக்கப்பட வாய்ப்புள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
RBI 1 Hour Delay Rules For Digital Payments Above Rs 10000 Every UPI Users Need To Know This Rules
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X