படுத்தே விட்டான்.. இந்த Motorola Flip Phone மீது ரூ.20000 நேரடி விலை குறைப்பு.. கூடவே ரூ.10500 டிஸ்கவுண்ட்!
மோட்டோரோலா நிறுவனத்தின் அடுத்த பிளாக்ஷிப் பிளிப் ஸ்மார்ட்போன் ஆக மோட்டோரோலா ரேஸர் 70 அல்ட்ரா கூடிய விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இந்த ஸ்மார்ட்போனின் டிசைன் ரெண்டர்கள் லீக் ஆனதை தொடர்ந்து, தற்போது இதன் முக்கிய அம்சங்களும் லீக் ஆகி உள்ளன.
இது முன்னதாக அறிமுகமான மோட்டோரோலா ரேஸர் 60 அல்ட்ராவின் பல அம்சங்களை தக்கவைத்து கொள்வதோடு, பெரிய பேட்டரி உட்பட சில மேம்படுத்தல்களையும் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் தான் மோட்டோரோலா ரேஸர் 60 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் விலை சர்ரென்று குறைந்துள்ளது.

நினைவூட்டும் வண்ணம் மோட்டோரோலா நிறுவனம் ஆனது கடந்த 2025 ஆம் ஆண்டு மே மாதத்தில், இந்தியாவில் அதன் மோட்டோரோலா ரேஸர் 60 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி இன்டர்னல் மெமரி கொண்ட சிங்கிள் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.99,999 க்கு அறிமுகம் செய்து இருந்தது.
ஆனால் தற்போது இது அமேசான் இந்தியா வலைதளத்தில் ரூ.79,999 க்கு வாங்க கிடைக்கிறது. அதாவது நேரடியாக ரூ.20000 விலை குறைப்பை பெற்றுள்ளது. கூடுதலாக ரூ.10500 வரையிலான கிரெடிட் கார்டு இன்ஸ்டன்ட் கேஷ்பேக் ஆபரும் கிடைக்கிறது. இதன் மூலம் மோட்டோரோலா ரேஸர் 60 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் விலையை இன்னும் குறைக்கலாம்.
மோட்டோரோலா ரேஸர் 60 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ்
- 7-இன்ச் OLED மடிக்கக்கூடிய டிஸ்பிளே
- 4-இன்ச் pOLED கவர் டிஸ்பிளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் செராமிக்
- ஸ்டெயின்லெஸ் ஸ்டீலால் கட்டமைக்கப்பட்ட ஒரு கீல் (இது 800,000 க்கும் மேற்பட்ட மடிப்புகளைத் தாங்கும் கடுமையான சோதனைக்கு உட்பட்டுள்ளது)
- ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்
- 16GB RAM மற்றும் 512GB ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ்
- மோட்டோ ஏஐ அம்சங்கள்
- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 50MP ப்ரைமரி கேமரா, 50MP அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 50MP டெலிஃபோட்டோ கேமரா
- 50MP செல்பீ கேமரா
- 4500mAh பேட்டரி
- 68W வயர்டு மற்றும் வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்
மோட்டோரோலா ரேஸர் 70 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- 1224 × 2992 பிக்சல்ஸ் ரெசல்யூஷன் கொண்ட 7-இன்ச் போல்டபிள் இன்னர் டிஸ்பிளே
- 1080×1272 பிக்சல்ஸ் ரெசல்யூஷன் கொண்ட 4-இன்ச் கவர் ஸ்கிரீன்
- ரேஸர் 60 அல்ட்ராவில் உள்ள அதே ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்
- ரேஸர் 60 அல்ட்ராவில் உள்ள அதே 16GB ரேம் மற்றும் 512GB ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான ஹலோ யுஐ
- எக்ஸ்டர்னல் ப்ரைமரி மற்றும் அல்ட்ராவைடு கேமராக்கள் உட்பட மூன்று 50-மெகாபிக்சல் கேமரா
- 5000mAh பேட்டரி )(இது முந்தைய மாடலில் உள்ள 4,700mAh பேட்டரியை விட வெறும் 6 சதவீதம் தான் பெரியது)
- 68W வயர்டு சார்ஜிங்
- இசிம் மற்றும் நானோ சிம் ஆகிய இரண்டிற்குமான ஆதரவு
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP48 ரேட்டிங்
- அளவீட்டில் விரிக்கப்பட்ட நிலையில் 171.48 x 73.99 x 7.19 மிமீ
- எடையில் சுமார் 199 கிராம் (அதாவது இது அதன் முந்தைய மாடலின் அளவு மற்றும் எடைக்கு ஏறக்குறைய சமமாக இருக்கும்)


Click it and Unblock the Notifications








