கர்மா இஸ் பூமராங்! 62,084 கிமீ வேகத்தில் பூமியை நெருங்கும் சிறுகோள்! NASA கணிப்பு சொல்வது என்ன?

|

சிறுகோள் என்பது சுமார் 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நமது சூரிய குடும்பத்தின் ஆரம்பகால உருவாக்கத்திலிருந்து எஞ்சி இருப்பவை ஆகும். பெரும்பாலான சிறுகோள்கள் ஒழுங்கற்ற வடிவத்தில் இருக்கிறது. இதில் சிலவைகள் கோள்கள் போன்று இருந்தாலும் பெரும்பாலும் குழிகள் அல்லது ஆழமான பள்ளங்களைக் கொண்டவையாக இருக்கிறது.

நெருக்கமாக வரும் சிறுகோள்கள்

நெருக்கமாக வரும் சிறுகோள்கள்

விண்வெளியில் ஆங்காங்கே சிறுகோள்கள் மிதந்துக் கொண்டிருக்கிறது. பெரும்பாலான சிறுகோள்கள் நிலையற்ற பாதையில் விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கிறது. இதில் சில சிறுகோள்கள் பூமிக்கு மிக நெருக்கமாக பயணித்த சென்றிருக்கிறது. அப்படியான ஒரு சிறுகோள் குறித்து தான் பார்க்கப் போகிறோம்.

பூமியின் ஈர்ப்பு விசை

பூமியின் ஈர்ப்பு விசை

சூரிய மண்டலத்தில் பல்வேறு விண்கற்கள் மிதந்துக் கொண்டிருக்கின்றன. இவைகளில் சில பூமியின் இருக்கும் ஈர்ப்பு விசை காரணத்தால் அவ்வப்போது வளிமண்டலத்துக்குள் நுழைகிறது.

விண்வெளியில் இருந்து கீழே விழும் பொருட்கள் காற்றின் அடர்த்தி மற்றும் அதன் அதிவேக பயணத்தால் தீப்பிடிக்க வாய்ப்புகள் இருக்கிறது.

பூமியின் பெரும்பகுதி கடலால் சூழப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக வானில் இருந்து விழும் பெரும்பாலன பொருட்கள் கடலிலேயே விழுவதாக கூறப்படுகிறது.

பில்லியன் கணக்கில் சிறுகோள்கள்

பில்லியன் கணக்கில் சிறுகோள்கள்

சூரிய மண்டலத்தில் பில்லியன் கணக்கில் சிறு கற்களும், உலோகப் பாறைகளும் நீந்திக் கொண்டிருக்கின்றன.

இந்த விண்கற்கள் சில பூமியை நோக்கி வரும்பட்சத்தில் பூமியில் மேற்புறத்தில் இருந்து ஈர்ப்பு விசை காரணமாக பூமியை நோக்கி ஈர்க்கப்படுகிறது அதேசமயத்தில் அதன் பயண வேகமும் அதிகரிக்கிறது.

சிறுகோள்களை உற்று கண்காணிக்கும் நாசா

சிறுகோள்களை உற்று கண்காணிக்கும் நாசா

நிலையற்ற பாதையில் மிதந்துக் கொண்டிருக்கும் சிறுகோள்கள் சில கிரகங்களை விபத்துக்கு உள்ளாக்கி இருக்கிறது. இதை அறிந்த நாசாவின் கிரக பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அலுவலகம், சிறுகோள் பயணிக்கும் பாதை அதன் அளவு, வேகம் உள்ளிட்டவைகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

குறிப்பாக பூமியை நோக்கி பயணிக்கும் சிறுகோள்கள் மற்றும் பூமிக்கு ஆபத்து விளைவிக்க வாய்ப்பு இருக்கும் சிறுகோள்களை (NEOs- Near-Earth Objects) உற்று நோக்கி கண்காணித்து வருகிறது நாசாவின் கிரக பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அலுவலகம்.

80 அடி சிறுகோள்

80 அடி சிறுகோள்

அதன்படி 80 அடி சிறுகோள் ஒன்று பூமியை நோக்கி வேகமாக நெருங்கி வருவதை கண்டறிந்த நாசாவின் கிரக பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அலுவலகம் இதுகுறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த சிறுகோளுக்கு 2020 BP என பெயரிடப்பட்டுள்ளது.

பூமிக்கு மிக அருகில் வரும் என கணிப்பு

பூமிக்கு மிக அருகில் வரும் என கணிப்பு

இந்த சிறுகோள் பூமிக்கு அருகில் ஆபத்தான முறையில் பயணிக்கும் என்ற கணித்த காரணத்தால் நாசா, Asteroid 2020 BP குறித்து ரெட் அலர்ட் விடுக்கும் வகையில் இந்த சிறுகோளை சிவப்பு கொடியில் மார்க் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சிறுகோள் 3.5 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் பூமிக்கு மிக அருகில் வரும் என நாசா கணித்திருக்கிறது.

62084 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் சிறுகோள்

62084 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் சிறுகோள்

நாசா தகவல்படி, 2020 BP என்ற சிறுகோள் ஆனது மணிக்கு கிட்டத்தட்ட 62084 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறது. இது ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணையின் வேகத்தை விட மிக அதிகமாகும்.

சிறுகோள் 2020 BP அளவு 80 அடி அகலம் ஆகும். அதாவது இந்த சிறுகோள் ஆனது சுமார் ஒரு வணிக விமானத்தின் அளவு கொண்டதாக இருக்கும் என கூறப்படுகிறது.

சூரியனை சுற்ற எடுத்துக் கொள்ளும் நாட்கள்

சூரியனை சுற்ற எடுத்துக் கொள்ளும் நாட்கள்

the-sky.org இன் வெளியிட்ட தகவலின்படி, சிறுகோள் 2020 BP ஆனது அப்போலோ சிறுகோள்களின் குழுவிற்கு சொந்தமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறுகோள் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது ஜனவரி 18, 2020 அன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறுகோள் சூரியனை ஒருமுறை சுற்றி முடிக்க 1089 நாட்கள் எடுத்துக் கொள்கிறது. விண்கல் சூரியனை சுற்றும் பாதையை வைத்து கணிக்கும் போது, சிறுகோள் 2020 BP ஆனது சூரியனில் இருந்து அதிகபட்சமாக 508 மில்லியன் கிலோமீட்டர் தூரமும் நெருக்கமாக 111 மில்லியன் கிலோமீட்டர் தூரமும் பயணிக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

File Images

Best Mobiles in India

English summary
NASA Warning About Asteroid: 2020 BP Asteroid Travels Nearly 62084 Km Speed Towards Earth. Do You Know What Happen Next?.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X