விண்கல்லின் மேலே 75மீட்டர் உயரத்தில் பறந்து அட்டகாசமான படங்கள் எடுக்கும் நாசா விண்கலம்..

|

நாசாவின் OSIRIS-REx விண்கலம் அதனுடைய மிகப்பெரிய தருணத்திற்கு தயாராகி வருகிறது. பென்னு என்ற விண்கல்லில் உள்ள இந்த OSIRIS-REx (தோற்றம், நிறமாலை விளக்கம், வள அடையாளம், பாதுகாப்பு, ரெகோலித் எக்ஸ்ப்ளோரர்) விண்கலம், பண்டைய பாறையின் மாதிரியை சேகரிக்கத் தயாராகிவருகிறது. அந்த மாதிரியைச் சேகரிப்பது என்பது துல்லியமான ஆய்விற்கு பிறகு நடவடிக்கை எடுப்பதற்கு ஈடாகும்.

OSIRIS-REx விண்கலமானது

OSIRIS-REx விண்கலமானது சமீபத்திய வாரங்களில் தொடர்ச்சியான ஒத்திகைகளை நிகழ்த்தியது. இந்த ஒத்திகைகள் ஒவ்வொன்றிலும் பென்னுவின் மேற்பரப்புக்கு நெருக்கமாக விண்கலம் கொண்டு வரப்பட்டு, மீண்டும் சுற்றுப்பாதையில் பின்வாங்கி நிலைநிறுத்தப்பட்டது. இறுதியில் விண்கலம் அதன் ஆபத்தான தொடுதல் மற்றும் செல்லக்கூடிய மாதிரி நடைமுறைகளைச் செய்யும்.

சமீபத்திய ஒத்திகையில்

மிகச் சமீபத்திய ஒத்திகையில் " செக் பாயிண்ட்" நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் விண்கலமானது பென்னுவின் மேற்பரப்பிற்கு 75 மீட்டர் (246 அடி) உயரத்திற்குள் கொண்டு வரப்பட்டது. முந்தைய ஒத்திகைகளின் போது 620 மீட்டர் (2,034 அடி), பின்னர் 250 மீட்டர் (820 அடி) உயரத்தில் மட்டுமே விண்கலம் நெருங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.

பூமியிலிருந்து வெகு தொலைவில் OSIRIS-REx விண்கலம் உள்ள நிலையில் , அதன் மாதிரி சேகரிப்பு செயல்பாடுகள் அனைத்தும் ‌தன்னாட்சி முறையில் செய்யப்படும். மேற்பரப்பில் இருந்து வெறும் 75 மீட்டர் தொலைவில், விண்கலத்தின் தன்னாட்சி அமைப்பு அதன் நிலை மற்றும் வேகத்தை சரிபார்த்து, மேற்பரப்பில் தொடரும் முன் அதன் பாதையை சரிசெய்யும் நடவடிக்கை என்பதால் சமீபத்திய ஒத்திகை செக்பாயிண்ட் என அழைக்கப்பட்டது‌.


இந்த ஒத்திகையில், விண்கலம் முதல் முறையாக அதன் செக்பாயிண்டை அடைந்தது. ஒரே ஒரு ஒத்திகை இது மட்டுமே என்பதால், OSIRIS-REx அதன் செக்பாயிண்டை தொட்டுவிட்டு, விண்கல்லில் இருந்து விலகி பாதுகாப்பான தூரத்தில் சுற்றுப்பாதைக்கு திரும்பியது.

மே 8: இந்தியாவில் 108எம்பி கேமராவுடன் களமிறங்கும் சியோமி மி 10.!மே 8: இந்தியாவில் 108எம்பி கேமராவுடன் களமிறங்கும் சியோமி மி 10.!

சேகரிப்பு தளத்தின் ஏ

அடிக்கடி நிகழந்த இந்த நெருக்கமான அணுகுமுறைகளின் போது, ​​நாசாவின் விண்கலம் அதன் மாதிரி சேகரிப்பு தளத்தின் ஏராளமான புகைப்படங்களை கைப்பற்றியது. இந்த படங்கள் அனைத்தும் விண்கலத்தின் இயற்கை அம்ச கண்காணிப்பு ( Natural Feature Tracking - என்எஃப்டி) அமைப்பின் ஒரு பகுதியாக சேமிக்கப்படுகின்றன.

செக்பாயிண்ட் ஒத்திகையின்

மாதிரி சேகரிப்பு நிகழ்விற்கான நேரம் வரும்போது, ​​OSIRIS-REx அதன் கேமராக்களிலிருந்து அதன் நிகழ்நேர படங்களை தற்போது சேமித்துள்ள படங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்‌. மேலும் அந்த ஒப்பீடுகளைப் பயன்படுத்தி பென்னுவின் பாறாங்கல் பரவிய மேற்பரப்பில் உள்ள மாதிரி சேகரிப்பு தளத்திற்கு தன்னை தானே வழிநடத்தும்.

இந்த செக்பாயிண்ட் ஒத்திகையின் போது OSIRIS-REx விண்கலம் அதன் மாதிரி செயல்முறையான டச்-அண்ட் கோ மாதிரி கையகப்படுத்தல் செயல்முறையை ( TAGSAM) செயல்படுத்தியது‌.

செயல்பாட்டு சோ

பொதுவாக விண்கலத்தின் உள்ளே மடிக்கப்பட்டுள்ள TAGSAM-ன் செயல்பாட்டு சோதனை வெற்றிகரமாக இருந்தது. OSIRIS-REx இல் உள்ள பல கருவிகளும் இந்த நெருக்கமான அணுகுமுறையின் போது பல்வேறு தரவை சேகரித்தன.

மாதிரியைச் சேகரிக்க வேண்டிய நேரம் வரும்போது, ​​OSIRIS-REx மேற்பரப்பில் இறங்கவேண்டிவரும், ஆனால் விண்கலம் தானே தரையிறங்காது. அதற்கு பதிலாக, TAGSAM மேற்பரப்பில் பயன்படுத்தப்படும். TAGSAM விண்கல்லில் உள்ள தூசியை நைட்ரஜன் வாயுவை வெளியேற்றுவதன் மூலம் தூய்மையாக்கும் .

ரெகோலித்தின் சிறிய துண்டுகளை

நைட்ரஜன் ரெகோலித்தின் சிறிய துண்டுகளை TAGSAM இன் மாதிரி சேகரிப்பு தலையில் செலுத்தும். இக்கருவியின் முடிவில் உள்ள செயலற்ற தொடர்பு பட்டைகளும் மாதிரிகள் சேகரிக்கும்.

2 செ.மீ (0.8 அங்குலம்) க்கும் குறைவான துகள்களில் 60 கிராம் (2.1 அவுன்ஸ்) அளவிற்கு சேகரிப்பதே இத்திட்டத்தின் குறிக்கோள் ஆகும்.

News Source: sciencealert.com

Best Mobiles in India

English summary
NASA's OSIRIS-REx Spacecraft Just Dove 75 Meters Above An Asteroids Surface Took Picture: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X