செவ்வாய் கிரகத்தில் ஓட்டை போட்ட NASA.. உள்ளே காத்திருந்த அதிர்ச்சி!

|

மற்ற எந்த உலக நாடுகளை விடவும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவானது (NASA) , மிகவும் உன்னிப்பாகவும், மிகவும் தீவிரமாகவும் செவ்வாய் கிரகத்தை ஆராய்ந்து வருகிறது.

அதற்கு, செவ்வாய் (Mars) கிரகத்தில் "தரை இறங்கிய" நாசாவின் 5 ரோவர்களே (Rovers) ஆகச்சிறந்த சாட்சிகள்!

என்னது? 5 ரோவர்களா என்று ஷாக் ஆக வேண்டாம்!

என்னது? 5 ரோவர்களா என்று ஷாக் ஆக வேண்டாம்!

உங்களில் பலருக்கும், நாசாவின் லேட்டஸ்ட் மார்ஸ் ரோவர்களான க்யூரியாசிட்டி (Curiosity) மற்றும் பெர்சவரென்ஸ் (Perseverance) பற்றி மட்டுமே தெரிந்து இருக்கலாம்

ஆனால் உண்மை என்னவென்றால் க்யூரியாசிட்டி மற்றும் பெர்சவரென்ஸ்க்கு முன்பாக, செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட 3 நாசா ரோவர்கள் உள்ளன. அவைகள் சோஜர்னர் (Sojourner) - 1997, ஆப்பர்ச்சுயுனிட்டி (Opportunity) - 2004-2018 மற்றும் ஸ்பிரிட் (Spirit) 2004-2010 ஆகும்!

பாறையில் ஓட்டை போடும் அளவிற்கு படு ஆக்டிவ்!

பாறையில் ஓட்டை போடும் அளவிற்கு படு ஆக்டிவ்!

நாசா அனுப்பிய முதல் 3 ரோவர்கள் தொழில்நுட்ப கோளாறுகளால் செயல் இழந்து போய் விட்டன. ஆக மார்ஸில் ஆக்டிவ் ஆக இருப்பது நாசாவின் க்யூரியாசிட்டி மற்றும் பெர்சவரென்ஸ் ரோவர்கள் மட்டுமே!

அதிலும் குறிப்பாக பெர்சவரென்ஸ் ரோவர் - படு ஆக்டிவ் ஆக வேலை செய்து வருகிறது. சமீபத்தில் இந்த ரோவர் செவ்வாய் கிரகத்தின் தனித்துவமான பாறை ஒன்றில் ஓட்டையும் போட்டுள்ளது!

அந்த ஓட்டைக்குள்.. ஒரு அதிர்ச்சி காத்திருந்தது!

அந்த ஓட்டைக்குள்.. ஒரு அதிர்ச்சி காத்திருந்தது!

நாசாவின் பெர்சவரென்ஸ் ரோவர் ஆனது ஒரு வருடமாக, முன்னொரு காலத்தில் ஒரு ஏரி இருந்ததாக மற்றும் எரிமலை வெடிப்புகள் நடந்ததாக நம்பப்படும் செவ்வாய் கிரகத்தின் பள்ளம் ஒன்றை ஆராய்ந்து வருகிறது.

அதனொரு பகுதியாக, செவ்வாய் கிரகத்தில் பில்லியன் கணக்கான ஆண்டுகளாக இருக்கும் ஒரு தனித்துவமான பாறையில் பெர்சவரென்ஸ் ரோவர் துளையிட்டது. அந்த ஓட்டைக்குள்.. ஒரு அதிர்ச்சி காத்திருந்தது!

செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பச்சை நிற பொருள்! இதெப்படி சாத்தியம்?செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பச்சை நிற பொருள்! இதெப்படி சாத்தியம்?

"உயிர்கள்" இருந்ததற்கான ஆதாரம்!

பெர்சவரென்ஸ் ரோவர் துளையிட்ட பாறைக்குள் ஆர்கானிக்-ரிச் மெட்டீரியல் (organic-rich material) கிடைத்துள்ளது. அதாவது கரிம வளமான பொருள் கிடைத்துள்ளது.

இந்த ஆச்சரியமான கண்டுபிடிப்பானது, செவ்வாய் கிரகத்தில், பண்டைய காலத்தில், நுண்ணுயிர்கள் வாழ்ந்ததற்கான அறிகுறிகளின் மீது வெளிச்சம் பாய்ச்சுகிறது .

இதை "கடந்தகால வாழ்க்கைக்கு" சான்றாக இருக்கும் ஒரு பொருள் அல்லது கட்டமைப்பு என்றும் கூறலாம்!

செவ்வாய் கிரகத்தின் சேறும் மெல்லிய மணலும்!

செவ்வாய் கிரகத்தின் சேறும் மெல்லிய மணலும்!

பெர்சவரென்ஸ் ரோவர் துளையிட்டது வைல்ட்கேட் ரிட்ஜ் (Wildcat Ridge) என்று அழைக்கப்படும் ஒரு செவ்வாய் கிரக பாறை ஆகும்.

அது பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, ஆவியாகிப்போன உப்புநீர் ஏரியில் குடியேறிய சேர் மற்றும் மெல்லிய மணலால் உருவான ஒரு பாறை ஆகும்!

சீனாவிற்கு.. நிலவில் கிடைத்த 6வது பொக்கிஷம்! மண்டை குடைச்சலில் அமெரிக்கா!சீனாவிற்கு.. நிலவில் கிடைத்த 6வது பொக்கிஷம்! மண்டை குடைச்சலில் அமெரிக்கா!

கண்டுபிடிக்கப்பட்ட

கண்டுபிடிக்கப்பட்ட "ஆதாரம்" பூமிக்கு திரும்பும் போது!

செவ்வாய் கிரகத்தில் பெர்சவரென்ஸ் ரோவரால் கண்டுபிடிக்கப்பட்ட "உயிர்களுக்கான" ஆதாரம், இந்த தசாப்தத்தின் பிற்பகுதியில் பூமிக்கு கொண்டுவரப்படும்.

அப்போது அந்த பாறை மாதிரிகளை (Rock samples) பகுப்பாய்வு செய்யும் போது, நாசா விஞ்ஞானிகளால் கற்பனைக்கு எட்டாத உண்மைகளை கூட கண்டுபிடிக்கப்படலாம்.

விண்வெளியில் வீசப்பட்ட விசித்திரமான அறுகோண வைரங்கள்! பூமியில் வந்து விழுமா?விண்வெளியில் வீசப்பட்ட விசித்திரமான அறுகோண வைரங்கள்! பூமியில் வந்து விழுமா?

செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் நாசா!

செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் நாசா!

போதுமான நிதி மற்றும் துல்லியமான தொழில்நுட்பம் சாத்தியமாகும் பட்சத்தில், 2030-களின் பிற்பகுதியில் அல்லது 2040-களின் முற்பகுதியில், செவ்வாய் கிரகத்திற்கு விண்வெளி வீரர்களை அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது.

இதுவரை நிகழ்த்தப்பட்ட எந்தவொரு விண்வெளி பயணத்தை விடவும் இது மிகப்பெரிய சவாலானதாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்!

விண்வெளியில் சிக்கிய விண்வெளியில் சிக்கிய "சிலந்தி" உருவம்! புகைப்படம் எடுத்த நாசா!

பூமியில் இருந்து செவ்வாய் கிரகத்திற்கு செல்ல எத்தனை நாட்கள் ஆகும்?

பூமியில் இருந்து செவ்வாய் கிரகத்திற்கு செல்ல எத்தனை நாட்கள் ஆகும்?

பூமிக்கும் செவ்வாய் கிரகத்திற்கும் இடையே உள்ள தூரம் - 130.94 மில்லியன் கிலோ மீட்டர்கள் ஆகும். ஆக செவ்வாய் கிரகத்திற்கான விண்வெளி பயணம் சுமார் ஏழு மாதங்கள் வரை நீடிக்கலாம்.

சுவாரசியமான விஷயம் என்னவென்றால், அந்த பயணத்தின் போது, ​​பொறியாளர்களுக்கு விண்கலத்தின் விமானப் பாதையை சரிசெய்யும் பல வாய்ப்புகள் கிடைக்கும். அதன் மூலம் விண்கலத்தின் வேகத்தை மாற்ற முடியலாம்!

Photo Courtesy: NASA, Wikipedia

Best Mobiles in India

English summary
NASA Mars Rover Perseverance Drilled Unique Rock Found Signs Of Ancient Microbial Life

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X