Home
News

புது SIM கார்டு ரூல்ஸ்.. DoT அறிவித்துள்ள புதிய கெடு.. எந்த தேதிக்குள் என்ன செய்ய வேண்டும்?

டாட் (DoT) என்கிற தொலைத்தொடர்பு துறை ( Department of Telecommunications) ஆனது, சிம் கார்டுகளுக்கான புதிய விதியான சிம் பைண்டிங் செயல்முறையை கட்டாயமாக (Mandatory SIM-binding) செய்வதற்கான புதிய காலக்கெடுவை அறிவித்து உள்ளது. சிம் பைண்டிங் என்றால் என்ன? இதற்கான புதிய காலக்கெடு என்ன? யாரெல்லாம் என்ன செய்ய வேண்டும்? இதோ விவரங்கள்:

புதிய காலக்கெடு: நவம்பர் 2025-ல் முதன்முதலில் அறிவிக்கப்பட்ட இந்த கட்டாய சிம் பைண்டிங்கிற்கான உத்தரவானது, மார்ச் 30 ஆம் தேதி என்கிற கெடுவை கொண்டிருந்தது. ஆனால் இப்போது இந்த கெடு 2026 ஆம் ஆண்டு இறுதி (டிசம்பர் 31) வரை நீடிக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது.

புது SIM கார்டு ரூல்ஸ்.. DoT அறிவித்துள்ள புதிய கெடு!

யார் என்ன செய்ய வேண்டும்? மணிகண்ட்ரோல் (Moneycontrol) வலைத்தளம் ஆனது "டாட் ஆனது சிம் பைண்டிங்கிற்கான காலக்கெடுவை நீட்டித்து, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் தகவல் தெரிவித்துள்ளது" என்று பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு வட்டாரம் கூறியதாக செய்தி வெளியிட்டு உள்ளது.

வாட்ஸ்அப், சிக்னல் மற்றும் டெலிகிராம் போன்ற மெசேஜிங் பிளாட்பாரம்கள் சிம் பைண்டிங்கை செயல்படுத்துவதில் உள்ள சவால்களை சுட்டிக்காட்டியதாக கூறப்படுகிறது. அதன் விளைவாகவே இந்த காலக்கெடு நீட்டிப்பு வந்துள்ளது போல் தெரிகிறது. ஆப்பிள் மற்றும் கூகுள் உள்ளிட்ட பிரபலமான ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களும், ஆப்ரேட்டிங் சிஸ்டம் ப்ரொவைடர்களும் கூட சிம் பைண்டிங்கிற்கான காலக்கெடுவை நீட்டிக்க கோரியிருந்ததாகவும் கூறப்படுகிறது.

ஆப்பிள் நிறுவனம் ஐஓஎஸ் அமைப்பில் உள்ள தொழில்நுட்ப கட்டுப்பாடுகளைச் சுட்டிக்காட்டி, சாத்தியமான அணுகுமுறைகளில் பணியாற்றி வருவதால் கூடுதல் அவகாசம் கோரியதாகவும் கூறப்படுகிறது வாட்ஸ்அப்பின் "தாய்" நிறுவனமான மெட்டா, தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமான ஒரு உத்தியை இறுதி செய்வதற்காக தொலைத்தொடர்பு துறையுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

சிம் பைண்டிங் என்றால் என்ன? உதாரணத்திற்கு ஒரு வாட்ஸ்அப் அக்கவுண்ட்டை எடுத்துக்கொள்வோம். இந்திய அரசாங்கத்தின் புதிய சிம் பைண்டிங் விதியின் படி - ஒரு வாட்ஸ்அப் அக்கவுண்ட் ஆனது அந்த அக்கவுண்ட்டை பதிவு செய்ய பயன்படுத்தப்படும் சிம் கார்டுடன் தொடர்ந்து இணைக்கப்பட்டிருப்பதையும், அந்த சிம் கார்டு ஆனது குறிப்பிட்ட டிவைஸில் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

அதாவது, உங்கள் வாட்ஸ்அப் நம்பர் ஒரு குறிப்பிட்ட சிம்மில் பதிவு செய்யப்பட்டிருந்தால், அந்த சிம் ஆக்டிவ் ஆக இருக்க வேண்டும் மற்றும் உங்கள் ஸ்மார்ட்போனில் செருகப்பட்டு இருக்க வேண்டும். அது அகற்றப்பட்டால், மாற்றப்பட்டால் அல்லது செயலற்றதாக இருந்தால், செயலிழந்தால், வாட்ஸ்அப் சேவை செயலிழந்து போகலாம்.

இந்திய அரசாங்கத்தின் கூற்றுப்படி, இந்த நடவடிக்கை மிகவும் அவசியமான ஒன்றாகும், ஏனெனில் சில மெசேஜிங் சேவைகள் ஆனது சிம் கார்டு ஆனது இந்தியாவிற்கு வெளியே எடுக்கப்பட்ட பிறகும் அல்லது பயன்படுத்தப்பட்ட பிறகும் கூட இயங்குகின்றன. இந்த "பாதுகாப்பு ஓட்டையை" தான் சைபர் மோசடி செய்பவர்கள் தவறாக பயன்படுத்துவதாக தொடர்புடைய அதிகாரிகள் நம்புகிறார்கள்.

OPINION: இந்த புதிய சிம் பைண்டிங் விதியின் கீழ், உங்கள் சிம் கார்டை நீங்கள் மாற்றினாலோ அல்லது செயலிழக்க செய்தாலோ, மறு சரிபார்ப்பு செய்யப்படும் வரை நீங்கள் வாட்ஸ்அப், டெலிகிராம், ஸ்னாப் சாட், மெசேஞ்சர் அல்லது சிக்னல் ஆப்பிற்கான அணுகலை இழப்பீர்கள் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த மாற்றம் - டூயல் சிம்கள் அல்லது இசிம் (eSIM) கார்டுகளை பயன்படுத்துபவர்களுக்கும், அடிக்கடி வெளியூர் பயணம் செய்பவர்களுக்கும் அல்லது பல டிவைஸ்களில் ஒரே வாட்ஸ்அப் அக்கவுண்ட்டை பயன்படுத்துபவர்களுக்கும் இது பெரிய சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்!

More from GizBot

Best Mobiles in India

English summary
DoT extended Mandatory SIM binding Deadline till End of 2026 Even Apple Google Facing Issues Report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X