நிலவில் வீடுகட்ட மனிதரின் சிறுநீர் அதிகம் தேவைப்படும் - ஆராய்ச்சியின் புதிய ட்விஸ்ட்!

|

மனித உடலிலிருந்து வெளியேறும் தேவையில்லாத ஒரு பொருளாகக் கருதப்படும் சிறுநீர் இருந்தால் நிலவில் கட்டுமானப்பணிகளை எளிதாக முடித்துவிடலாம் என்று ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மனித சிறுநீரை, எதிர்காலத்தில் சந்திரனில் கான்கிரீட் செய்யப் பயன்படுத்தலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நிலவிற்கு மனிதர்களை அனுப்பும் திட்டம்

நிலவிற்கு மனிதர்களை அனுப்பும் திட்டம்

நிலவிற்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்காகப் பல ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. நிலவில் மனிதர்கள் தங்குவதற்கான இட வசதி, உணவு பதப்படுத்துதல் போன்று பலவிதமான தேவைகளைப் பூர்த்தி செய்யும் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக விண்வெளி வீரர்களுக்குத் தேவைப்படும் பொருட்களைப் பூமியிலிருந்து எடுத்துச் செல்வதற்கான தேவையைக் குறைக்கப் பல ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

கட்டுமான கான்கிரீட் பொருளை சிறுநீரிலிருந்து தயார் செய்யலாம்

கட்டுமான கான்கிரீட் பொருளை சிறுநீரிலிருந்து தயார் செய்யலாம்

ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் சந்திரன் கட்டுமானங்களுக்கான கான்கிரீட் பொருளை விண்வெளி வீரர்களின் சிறுநீரிலிருந்து தயார் செய்யலாம் என்று அறிவித்துள்ளது. அதற்கான சாத்தியம் மனிதனின் சிறுநீரில் உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். இதன்படி நிலவில் கான்கிரீட் உருவாக்கப்படல் பூமியிலிருந்து பொருட்களை எடுத்துச்செல்வதற்கான செலவையும், நேரத்தையும், இந்த முறை பெரிதும் குறைக்க உதவும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் எதிர்பார்த்த BSNL-ன் இலவச 4ஜி சிம்.! அனைவருக்கும்.! ஆனால்...?அதிகம் எதிர்பார்த்த BSNL-ன் இலவச 4ஜி சிம்.! அனைவருக்கும்.! ஆனால்...?

மனித சிறுநீரில் உள்ள யூரியா

மனித சிறுநீரில் உள்ள யூரியா

மனித சிறுநீரில் உள்ள முக்கிய கரிம சேர்மமான யூரியா, சந்திர மணலுடன் சேரும் பொழுது அதன் உறுதியான இறுதி வடிவத்தில் கடினமாவதற்கு முன்பு கான்கிரீட் கலவையை மிகவும் இணக்கமாக மாற்றுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் நடத்திய சமீபத்திய ஆய்வில் கண்டறிப்பட்டுள்ளது. சந்திர மணலில் மற்ற திரவப்பொருட்களை விடவும் மனிதனின் சிறுநீர் உறுதியான வெளிப்பாட்டை கட்டியுள்ளதை படத்தில் நீங்கள் காணலாம்.

நிலாவின் பொருட்களை வைத்து கட்டுமானபணி

நிலாவின் பொருட்களை வைத்து கட்டுமானபணி

சந்திரன் தளத்தில் அங்கேயே கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து கட்டுமானபணி நடத்தப்பட்டால் இன்னும் விரைவாகக் கட்டுமான வேலையை முடிக்கமுடியும் என்றும் கூறப்பட்டுள்ளது. முடிந்தவரை பூமியிலிருந்து பொருட்களை எடுத்த செல்லாமல் இருக்க பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஏர்டெல் அட்டகாச திட்டங்கள்: தினசரி 2 ஜிபி ரூ.99, ரூ.129, ரூ.199 மட்டும்!ஏர்டெல் அட்டகாச திட்டங்கள்: தினசரி 2 ஜிபி ரூ.99, ரூ.129, ரூ.199 மட்டும்!

சந்திர கான்கிரீட்

சந்திர கான்கிரீட்

நிலவில் கட்டுமானப்பணிக்காக உருவாக்கப்படும் "சந்திர கான்கிரீட்" இன் முக்கிய மூலப்பொருள் சந்திரனின் மேற்பரப்பில் கிடைக்கும் சந்திர ரெகோலித் எனப்படும் ஒரு வகை தூள் மணல் பயன்படுத்தப்படுகிறது. ஹைட்ரஜன் பிணைப்புகளை உடைத்து, திரவ கலவைகளின் பாகுத்தன்மையைக் குறைக்க மனிதனின் சிறுநீரில் உள்ள யூரியா உதவுகிறது, இந்த செய்முறை நிச்சயமாக நிலவில் தேவைப்படும் நீரின் அளவைக் குறைக்கும் என்று ESA கூறியுள்ளது.

மனித உடல் ஒவ்வொரு நாளும் எவ்வளவு சிறுநீர் வெளியேற்றுகிறது

மனித உடல் ஒவ்வொரு நாளும் எவ்வளவு சிறுநீர் வெளியேற்றுகிறது

சராசரியாக ஒரு மனித உடல் ஒவ்வொரு நாளும் சுமார் 1.5 லிட்டர் சிறுநீர் திரவ கழிவுகளை உருவாக்குகிறது. இதனால் வருங்கால சந்திர மக்களின் சிறுநீரை சேகரித்து அதை விண்வெளி ஆய்வுக்கான ஒரு நல்ல தயாரிப்பு பொருளாகப் பயன்படுத்தலாம் என்று ஆராய்ச்சியாளர்களின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Google Chrome பயனர்களே உஷார்! உடனே அப்டேட் செய்யுங்கள் இல்லைனா சிக்கல்!Google Chrome பயனர்களே உஷார்! உடனே அப்டேட் செய்யுங்கள் இல்லைனா சிக்கல்!

இன்னும் பல ஆராய்ச்சி

இன்னும் பல ஆராய்ச்சி

அதேபோல், பூமியில், யூரியா பொருள் தொழில்துறை உரமாகவும், ரசாயன மற்றும் மருத்துவ நிறுவனங்களுக்கான மூலப்பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், நிலவில் தாவரம் வளர்ப்பது, செயற்கைமுறையில் ஆக்சிஜன் உருவாக்குவது, நீர் உருவாக்குவது போன்று பல ஆராய்ச்சிகளையும் ஆராய்ச்சியளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

Best Mobiles in India

English summary
Human Urine Could Be Used To Make Lunar Concrete To Make Buildings On Moon : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X