தங்க முட்டை போடும் பாக்டீரியா.! ஜூம் செய்து பார்த்து ஆடிப்போன விஞ்ஞானிகள்.! அது Egg இல்ல.!

|

பூமியில் உள்ள மற்ற உலோகங்களை ஒப்பிடும் பொழுது தங்கத்திற்கு மதிப்பு அதிகம். தங்கத்தை விட அதிக மதிப்பு கொண்ட சில உலோகங்கள் பூமியில் இருந்தாலும், மனிதர்களால் அதிகம் வாங்கப்படும் விலை உயர்ந்த பொருளாகத் தங்கம் திகழ்கிறது.

இந்த பொருளை சிறுக-சிறுக சேர்ப்பதற்கு மக்கள் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். இத்தகைய மதிப்பு கொண்ட தங்கத்தினை ஒரு பாக்டீரியா மூலம் நீங்கள் உருவாக்கலாம் அல்லது அறுவடை செய்யலாம் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? நம்புங்க மக்களே.! இது உண்மை தான்.

தங்க முட்டை போடும் பாக்டீரியா.! ஜூம் செய்து பார்த்து ஆடிப்போன விஞ்ஞானி

விஞ்ஞானிகளை குழப்பத்தில் சுத்தவிட்ட 'தங்க முட்டை' போடும் பாக்டீரியா.!

கடந்த 2009 ஆம் ஆண்டு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், குப்ரியாவிடஸ் மெட்டாலிடூரன்ஸ் (Cupriavidus metallidurans) என்ற பாக்டீரியா, தங்கத்தை 'முட்டை' போல வெளியேற்றுகிறது என்பதனை கண்டறிந்தனர். அறிவியல் வரலாற்றில் இது ஒரு புதுமையான கண்டுபிடிப்பாகும். முதலில் இந்த பாக்டீரியா தங்க முட்டை போடுவதாக விஞ்ஞானிகள் கருதினர். ஆனால், மிசிரோஸ்கோப் மூலம் அந்த தங்க முட்டையை ஜூம் செய்து பார்த்த பிறகு தான் ஆடிப்போனார்கள்.

பாக்டீரியா உடலில் இருந்து வெளிவந்தது தங்கம் தான் என்பது உறுதியானது. ஆனால், அது முட்டை இல்லை வேற ஒரு 'ஐட்டம்' என்பதை விஞ்ஞானிகள் பிறகு தான் கண்டறிந்தனர். தங்கத்தை வெளியிடும் பாக்டீரியா பற்றி மேலும் அறிந்துகொள்ளத் தொடர்ந்து படியுங்கள். எந்த ஒரு வேதிப்பொருளும் வேதியல் சுழற்சிக்கு உண்டாவது வழக்கம். அதாவது ஒரு வடிவத்திலிருந்து மற்றொரு வடிவமாக மாறி, பிரிந்து, சேர்ந்து, படிகமாகி, வெவ்வேறு வடிவத்தினை அடையும்.

இந்த இயற்கையான சுழற்சிக்குத் தங்கம் மட்டும் விதிவிலக்கல்ல. அந்த வகையில், குப்ரியாவிடஸ் மெட்டாலிடூரன்ஸ் என்ற பாக்டீரியா நுண்ணுயிரியை ஆராய்ச்சி செய்யும் ஒரு குழு, இந்த பாக்டீரியா மட்டும் எப்படி விஷத்தன்மை கொண்ட சூழ்நிலையைத் தாக்குப் பிடிக்கிறது என்ற குழப்பத்தில் வெகு நாட்களாக ஆராய்ச்சி செய்தனர். இறுதியில் இதற்கான விடையைக் கண்டறிந்துவிட்டனர்.

தங்க முட்டை போடும் பாக்டீரியா.! ஜூம் செய்து பார்த்து ஆடிப்போன விஞ்ஞானி

எப்படி இந்த பாக்டீரியா உடலில் தங்கம் வந்தது? ஜூம் செய்து பார்த்த விஞ்ஞானிகள்.!

இந்த பாக்டீரியா பொதுவாக ஹைட்ரஜன் (Hydrogen) மற்றும் விஷத்தன்மை கொண்ட பல்வேறு விதமான டாக்ஸிக் ஹெவி மெட்டல்ஸ் (Toxic Heavy meals) இருக்கும் மண்ணில் உயிர் வாழ்கிறதாம். மற்ற பாக்டீரியாக்கள் இத்தகைய சூழ்நிலையில் தாக்குப் பிடிக்காத நிலையில், இந்த சி மெட்டாலிடூரன்ஸ் மட்டும் விஷத்தன்மையால் பாதிக்கப்படாமல் உயிர் வாழ்கின்றன. இதற்கான காரணம் அவற்றின் செயல்பாடு தான் என்பதனை இந்த ஆராய்ச்சி குழு கண்டறிந்துள்ளது.

செம்பு (Copper) மற்றும் தங்கத்தின் (Gold) கலவைகள் (Compounds) சுலபமாக இந்த சி.மெட்டாலிடூரன்ஸ் பாக்டீரியாக்களின் செல்களில் ஊடுருவும் தன்மை கொண்டவை. பொதுவாகவே செம்பு மற்றும் தங்கத்தின் சில கலவைகளுக்கு விஷத்தன்மை இருக்கும். அவை அவற்றின் உலோக வடிவத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டவை. இந்த சி.மெட்டாலிடூரன்ஸ் செம்பு கலவைகள் தனக்குள் நுழையும் பொழுது பொதுவாக கப்-ஏ (CupA) என்ற என்சைம்-ஐ (Enzyme) வெளியேற்றி அந்த செம்பின் விஷத்தன்மையை முறியடிக்கும்.

அதுவே செம்பு மற்றும் தங்கத்தின் கலவை இரண்டுமே நுழையும்போது இந்த கப்-ஏ என்சைமின் தாக்கம் குறைந்துவிடும். இத்தகைய சூழ்நிலையில் இந்த சி.மெட்டாலிடூரன்ஸ் கோப்-ஏ (CopA) என்ற புது வகையான என்சைம்-ஐ வெளியிடும். இந்த கோப்-ஏ என்சைமானது செம்பு மற்றும் தங்கக் கலவைகளை உருமாற்றி, செல்களால் குறைந்த அளவே உள்ளே இழுக்கப்படும் கலவையாக மாற்றுகிறது.

தங்க முட்டை போடும் பாக்டீரியா.! ஜூம் செய்து பார்த்து ஆடிப்போன விஞ்ஞானி

இது தங்கம் தான்.. ஆனால், இது முட்டை இல்லையா? அப்படினா இது என்ன?

இதன் மூலம் குறைந்த அளவான செம்பு மற்றும் தங்கமே இந்த சி.மெட்டாலிடூரன்ஸ் செல்களுக்குள் செல்லும். இதனால் இந்த பாக்டீரியா குறைந்த அளவே விஷத்தன்மையை எதிர்கொள்கிறது. மீதமிருக்கும் செம்பு வெளியேற்றப்படுகிறது. இதேபோல மீதமிருக்கும் தங்கமும் சிறிய நானோ-பார்டிகில்களாக (Nanoparticles) அந்த பாக்டீரியாவின் வெளிப்புறம் கழிவாக வெளியேற்றப்படுகிறது.

இறுதியில் இது தங்கம் முட்டை இல்லை, பாக்டீரியா உடலில் இருந்து வெளிவரும் தங்க கழிவு என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதை பாக்டீரியா 'கக்கிய கழிவு' என்று கூறலாம் அல்லது பாக்டீரியாவின் 'எச்சம்' என்றும் கூறலாம். எதிர்காலத்தில், இந்த ஆராய்ச்சி பல விலை மதிப்பற்ற உலோகங்களை அதன் படிமங்களிலிருந்து பிரித்தெடுக்க உதவும் என்று நம்பப்படுகிறது.

இந்தப் பிரித்தெடுக்கும் செயல்பாடு இன்றைய சூழ்நிலையில் மிகவும் கடினமான ஒன்றாக இருக்கிறது. ஆனால், சீக்கிரம் இத்தகைய பாக்டீரியாக்களை வைத்து விஞ்ஞானிகள் தங்கம் அறுவடை செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. கழிவாக இருந்தாலும் தங்கம்-தங்கம் தானே.! என்ன சொல்றீங்க?

Best Mobiles in India

English summary
How Bacteria Can Produce Gold By Ingesting Toxic Metals Scientists Explained

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X