ஆளுக்கு 2 வாங்கும் விலையில் 10 கிராம் எடையில் Xiaomi ப்ளூடூத் டிராக்கர்.. Moto Tag, AirTag-க்கு ஆப்பு!
ஷாவ்மீ (Xiaomi) நிறுவனம் தனது புதிய ப்ளூடூத் டிராக்கர் ஆன ஷாவ்மீ டேக்-ஐ (Xiaomi Tag) உலகளாவில் அறிமுகப்படுத்துவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. இந்த நிறுவனம் வருகிற பிப்ரவரி 28, 2026 அன்று பார்சிலோனாவில் நடைபெறும் எம்டபுள்யூசி (MWC) நிகழ்வின் போது இந்த டிவைஸை அறிமுகப்படுத்தும்.
வெறும் 10 கிராம் எடையும்மற்றும் அளவீட்டில் 7.2 மிமீ தடிமனும் கொண்ட ஷாவ்மீ டேக் ஆனது CR2032 காயின் பேட்டரியை பயன்படுத்துகிறது - இது ஒரு வருட பேட்டரி லைஃப்பை வழங்குகிறது. சாவிகள், பர்ஸ்கள் மற்றும் பைகள் உள்ளிட்ட தொலைந்து போன பொருட்களை பயனர்கள் விரைவாக கண்டறிய உதவும் வகையில் ஷாவ்மீ நிறுவனம் இந்த டிராக்கரை வடிவமைத்துள்ளது.

இந்த டிராக்கர் ஆப்பிளின் ஃபைண்ட் மை நெட்வொர்க் (Apple's Find My network) மற்றும் கூகுளின் ஃபைண்ட் ஹப் ஈகோசிஸ்டமை (Google's Find Hub ecosystem) ஆதரிக்கிறது, அதாவது இது ஐஓஎஸ் (iOS) மற்றும் ஆண்ட்ராய்டு (Android) டிவைஸ்களுடன் இணக்கமானதாக இருக்கும்.
இது லோக்கேஷன் கண்காணிப்புக்காயாக ப்ளூடூத் 5.4 மற்றும் என்எப்சி-ஐ (NFC) பயன்படுத்துகிறது, ஆனால் அல்ட்ரா-வைட்பேண்ட் (UWB) தொழில்நுட்பத்தை உள்ளடக்கவில்லை. இருப்பினும், யுடபுள்யூபி எனேபிள்டு வெர்ஷன் உருவாக்கத்தில் இருப்பதாகவும், எதிர்காலத்தில் தொடங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே ஷாவ்மீ டேக் ஆனது அதன் அதிகாரப்பூர்வ வெளியீட்டிற்கு முன்னதாகவே, பல ஐரோப்பிய சில்லறை விற்பனையாளர் வலைத்தளங்களில் தோன்றியுள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது. லீக் ஆன லிஸ்டிங்கின் படி, ஒரே ஒரு ஷாவ்மீ டேக்கின் விலை இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.1910 க்கு அறிமுகம் செய்யப்படலாம்; நான்கு ஷாவ்மீ டேக்களை உள்ளடக்கிய 1 பேக் ஆனது இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.6370 க்கு அறிமுகம் செய்யப்படலாம்.
ஒட்டுமொத்தமாக ஷாவ்மீ டேக் ஆனது ஆப்பிளின் ஏர்டேக் (AirTag), மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ டேக் (Moto Tag) அல்லது சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஸ்மார்ட்டேக் (Galaxy SmartTag) போன்ற டிராக்கர்களுக்கு அதிக விலை செலுத்த விரும்பாத, ஜியோடேக் (JioTag) போன்ற டிராக்கர்களை விரும்பாத பயனர்களுக்காக ஷாவ்மீ டேக் ஒரு சிறந்த ஆப்ஷன் ஆக இருக்கும்.
மேலும் வருகிற பிப்ரவரி 28 நடக்கும் நிகழ்வில் ஷாவ்மீ நிறுவனம் அதன் ஷாவ்மீ டேக்கை மட்டுமின்றி இன்னும் சில தயாரிப்புகளை வெளியீடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அவைகளில் ஷாவ்மீ 17 அல்ட்ரா (Xiaomi 17 Ultra) ஸ்மார்ட்போன், ரெட்மி பட்ஸ் 8 ப்ரோ (Redmi Buds 8 Pro) இயர்பட்ஸ் மற்றும் ஷாவ்மீ அல்ட்ரா ஸ்லிம் மேக்னட்டிக் பவர் பேங்க் (Xiaomi Ultra Slim Magnetic Power Bank) ஆகியவைகளும் அடக்கம்.
ஷாவ்மீ 17 அல்ட்ராவை பொறுத்தவரை நடக்கவுள்ளது உலகளாவிய அறிமுகமாகும். ஷாவ்மீயின் இந்த லேட்டஸ்ட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆனது ஏற்கனவே சீனாவில் அறிமுகமாகி விட்டது. இப்போது உலக சந்தைகளுக்கு விரிவடைகிறது. சீனாவில் ஷாவ்மீ 17 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதினின்படி தோராயமாக ரூ.90,000 க்கு அறிமுகம் செய்யப்பட்டது.
முக்கிய அம்சங்களை பொறுத்தவரை ஷாவ்மீ 17 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.9-இன்ச் 1.5K LTPO AMOLED டிஸ்பிளே, குவால்காம் ஆக்டா கோர் 3nm ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட், லைக்காவால் டியூன் செய்யப்பட்ட ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், அதில் 50எம்பி + 50எம்பி + 200எம்பி கேமராக்கள், 50எம்பி செல்பீ கேமரா, 90W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 6,800mAh பேட்டரி ஆகியவைகளை கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








