Home
Mobile

சத்தமின்றி Samsung 5ஜி போன்களின் விலை உயர்வு.. எந்தெந்த மாடல்கள்? இதோ முழு விவரம்..

சாம்சங் நிறுவனம் இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ56, கேலக்ஸி ஏ36 மற்றும் கேலக்ஸி ஏப்17 ஸ்மார்ட்போன்களின் விலையை சத்தமின்றி உயர்த்தியுள்ளது. புதிய விலைகள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன. புதிய விலைகள் ஆன்லைன் உட்பட அனைத்து தளங்களிலும் நேரலையில் வெளியிடப்படும். மேலும் சாம்சங் நிறுவனம் இந்த மூன்று போன்களுக்கான விலைகளை ஏன் அதிகரித்துள்ளது என்பது குறித்து தகவலை வெளியிடவில்லை.

சாம்சங் கேலக்ஸி ஏ56 (Samsung Galaxy A56)
12ஜிபி ரேம் + 25ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ56 ஸமார்ட்போனுக்கு தற்போது ரூ.2000 விலை உயர்ந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை ரூ.48,999 விலையில் வாங்க முடியும். இதன் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்-க்கு ரூ.1000 விலை உயர்த்தப்பட்டு ரூ.44,999 விலையில் விற்பனை செய்யப்படும்.

சத்தமின்றி Samsung 5ஜி போன்களின் விலை உயர்வு.. எந்தெந்த மாடல்கள்?

சாம்சங் கேலக்ஸி ஏ36 (Samsung Galaxy A36)
8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ36 போனுக்கு ரூ.1000 விலை உயர்த்தப்பட்டு ரூ.36,499 விலையில் விற்பனை செய்யப்படும். மேலும் இதன் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்-க்கு ரூ.2000 விலை உயர்த்தப்பட்டு ரூ.40,499 விலையில் விற்பனை செய்யப்படும்.

சாம்சங் கேலக்ஸி எப்17 (Samsung Galaxy F17)
4ஜிபி + 128ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எப்17 ஸ்மார்ட்போனுக்கு ரூ.1000 விலை உயர்த்தப்பட்டு ரூ.16,499 விலையில் விற்பனை செய்யப்படும். மேலும் இதன் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்-க்கு ரூ.1000 விலை உயர்த்தப்பட்டு ரூ.17,999 விலையில் விற்பனை செய்யப்படும். இதன் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்-க்கு ரூ.1500 விலை உயர்த்தப்பட்டு ரூ.19,999 விலையில் விற்பனை செய்யப்படும். மேலும் இப்போது சாம்சங் கேலக்ஸி எப்17 ஸ்மார்ட்போனின் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

சத்தமின்றி Samsung 5ஜி போன்களின் விலை உயர்வு.. எந்தெந்த மாடல்கள்?

சாம்சங் கேல்க்ஸி எப்17 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy F17 5G specifications): எக்ஸிநோஸ் 1330 பிராசஸர் (Exynos 1330 processor) உடன் சாம்சங் கேல்க்ஸி எப்17 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும்.

சாம்சங் கேல்க்ஸி எப்17 5ஜி 6.7 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் சூப்பர் அமோலெட் (Super AMOLED) டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த டிஸ்பிளேவில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 2340 x 1080 பிக்சல்ஸ் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் புரொடெக்சன் மற்றும் பல சிறப்பான வசதிகள் உள்ளன.

50எம்பி பிரைமரி கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த புதிய சாம்சங் கேல்க்ஸி எப்17 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

சத்தமின்றி Samsung 5ஜி போன்களின் விலை உயர்வு.. எந்தெந்த மாடல்கள்?

One UI 7.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 இயங்குதள வசதியுடன் சாம்சங் கேல்க்ஸி எப்17 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு 6 ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட் கிடைக்கும். பின்பு 6 வருட பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். பின்பு பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் (Bottom Ported Speaker) இந்த போனில் உள்ளது. மேலும் யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio) ஆதரவும் இந்த போனில் உள்ளது.

IP54 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவுடன் சாம்சங் கேல்க்ஸி எப்17 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.3, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளது. குறிப்பாக 5000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய சாம்சங் போன். குறிப்பாக இந்த சாம்சங் போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A56, A36, and F17 prices hiked in India: Here are new price details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X