மார்ச் 12 வரை பொறுங்க.. மிரட்டலான 5ஜி போனை களமிறங்கும் iQOO.. 7200mAh பேட்டரி.. எந்த மாடல்?
ஐக்யூ நிறுவனம் தனது புதிய ஐக்யூ இசட்11எக்ஸ் (iQOO Z11x) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்நிலையில் இந்த புதிய போனின் அறிமுக தேதி ஆன்லைனில் கசிந்துள்ளது. அதாவது டிப்ஸ்டர் சஞ்சு சவுத்ரியின் தகவல்படி, வரும் மார்ச் 12-ம் தேதி மதியம் 12 மணி அளவில் இந்த புதிய ஐக்யூ போன் இந்தியாவில் அறிமுகமாகும் என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல் இந்த புதிய ஐக்யூ ஸ்மார்ட்போன் அமேசான் மற்றும் iQOO.com தளங்களில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்புகள் தற்போது ஆன்லைனில் வெளியாகி உள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

ஐக்யூ இசட்11எக்ஸ் அம்சங்கள் (iQOO Z11x Specifications): தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 7400 டர்போ சிப்செட் (MediaTek Dimensity 7400 Turbo chip) உடன் புதிய ஐக்யூ இசட்11எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனில் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்த முடியும்.
6.76-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே உடன் புதிய ஐக்யூ இசட்11எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இந்த போனின் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
50எம்பி சோனி மெயின் கேமரா உடன் புதிய ஐக்யூ இசட்11எக்ஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் மூலம் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
8ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி உடன் புதிய ஐக்யூ இசட்11எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய ஐக்யூ இசட்11எக்ஸ் ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் புதிய ஐக்யூ இசட்11எக்ஸ் ஸ்மார்ட்போன் வெளிவரும். அதேபோல் OriginOS 6 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

7200mAh பேட்டரி உடன் புதிய ஐக்யூ இசட்11எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 44W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.
5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய போனில் உள்ளன. மேலும் ஐக்யூ இசட்11எக்ஸ் ஸ்மார்ட்போன் ரூ.20,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








