படுத்தே விட்டான் Samsung.. புது Galaxy S26 அறிமுகமானதும் முழு Galaxy S25 சீரீஸ் விலைகளும் சரிந்தது!
சாம்சங் (Samsung) நிறுவனத்தின் 2026 பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் ஆக சாம்சங் கேலக்ஸி எஸ்26 சீரீஸ் (Samsung Galaxy S26 Series) மாடல்கள், இந்தியா உட்பட உலகளவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து கேலக்ஸி எஸ்25 சீரீஸின் கீழ் உள்ள 3 மாடல்களின் விலைகளும் குறைந்துள்ளன.
அதாவது சாம்சங் கேலக்ஸி எஸ்25, சாம்சங் கேலக்ஸி எஸ்25 பிளஸ் மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஆகிய 3 மாடல்களின் விலைகளும் குறைந்துள்ளன. எவ்வளவு குறைந்து உள்ளன? அசல் விலை என்ன? குறைக்கப்பட்ட பின்னர் விலை நிர்ணயம் என்ன? புதிய சாம்சங் கேலக்ஸி எஸ்26 சீரீஸின் இந்திய விலை நிர்ணயம் என்ன? இதோ விவரங்கள்:

சாம்சங் கேலக்ஸி எஸ்25 சீரீஸ் விலை குறைப்பு: பிளிப்கார்ட்டில் தற்போது சாம்சங் கேலக்ஸி எஸ்25 ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.74,999 க்கு வாங்க கிடைக்கிறது. நினைவூட்டும் வண்ணம் இந்த ஸ்மார்ட்போனின் அசல் அறிமுக விலை ரூ.80,999 ஆகும். அதாவது ரூ.6000 நேரடி விலை குறைப்பை பெற்றுள்ளது.
இதேபோல பிளிப்கார்ட்டில் சாம்சங் கேலக்ஸி எஸ்25 பிளஸ் ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனும் ரூ.74,999 க்கு வாங்க கிடைக்கிறது. நினைவூட்டும் வண்ணம் இந்த ஸ்மார்ட்போனின் அசல் அறிமுக விலை ரூ.99,999 ஆகும். அதாவது ரூ.25,000 நேரடி விலை குறைப்பை பெற்றுள்ளது.
கடைசியாக உள்ள சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன், பிளிப்கார்ட் வழியாக ரூ.1,07,699 க்கு வாங்க கிடைக்கிறது. நினைவூட்டும் வண்ணம் இந்த ஸ்மார்ட்போனின் அசல் அறிமுக விலை ரூ.1,29,999 ஆகும். அதாவது ரூ.22,300 நேரடி விலை குறைப்பை பெற்றுள்ளது.
சாம்சங் கேலக்ஸி எஸ்26 சீரீஸ் விலை விவரங்கள்: இந்த சீரீஸின் கீழ் சாம்சங் கேலக்ஸி எஸ்26 (Galaxy S26), சாம்சங் கேலக்ஸி எஸ்26 பிளஸ் (Galaxy S26 Plus) மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா (Galaxy S26 Ultra) ஆகிய 3 மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் இந்த 3 ஸ்மார்ட்போன்களின் முன்பதிவுகளும் ஏற்கனவே தொடங்கி விட்டன.
இந்திய சந்தையில் சாம்சங் கேலக்ஸி எஸ்26 ஸ்மார்ட்போனின் விலை ரூ.87,999 முதல் தொடங்குகிறது. சாம்சங் கேலக்ஸி எஸ்26 பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.1,19,999 முதல் தொடங்குகிறது. சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் விலை ரூ.1,39,999 முதல் தொடங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன்கள் இன்னும் விலை அதிகமான ஸ்டோரேஜ் ஆப்ஷன்களிலும் வாங்க கிடைக்கிறது.
உதாரணத்திற்கு சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா ஸ்மார்ட்போன் மொத்தம் 3 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ரூ.1,39,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 12ஜிபி ரேம் + 512ஜிபி ஆப்ஷன் ரூ.1,59,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது,
ஹைஎண்ட் 16ஜிபி ரேம் + 1டிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,89,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா ஸ்மார்ட்போனிற்கான ப்ரீ-ஆர்டர் இன்று (பிப்ரவரி 25) முதல் தொடங்கியது. இந்த போன் கோபால்ட் வயலட், ஒயிட், பிளாக் மற்றும் ஸ்கை ப்ளூ ஆகிய நான்கு கலர்களில் கிடைக்கும். சாம்சங்.காம் (Samsung.com) வழியாக பிங்க் கோல்ட் மற்றும் சில்வர் ஷேடோ கலர்களிலும் வாங்கலாம்.


Click it and Unblock the Notifications