எல்லோர் கவனத்தையும் Twitter பக்கம் திருப்பிட்டு.. அமெரிக்காவுல Elon Musk பார்த்த "அடேங்கப்பா" வேலை!

|

ட்விட்டர் நிறுவனத்தின் புதிய "சொந்தக்காரர்" ஆன எலான் மஸ்க் (Elon Musk), எல்லோருடைய கவனத்தையும் ட்விட்டர் மீது திசை திருப்பி விட்டு.. அமெரிக்காவில் ஒரு அசால்ட் ஆன வேலையை பார்த்து உள்ளார்!

அதென்ன வேலை? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

ட்விட்டர்-லாம் ஒன்னுமே இல்ல!

ட்விட்டர்-லாம் ஒன்னுமே இல்ல!

உங்களில் சிலருக்கு எலான் மஸ்க்கை ட்விட்டர் நிறுவனத்தின் புதிய பொறுப்பாளாராகத்தான் தெரியும். ஆனால் அவர் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் CEO, மற்றும் தலைமை பொறியாளரும் கூட ஆவார்!

அதாவது விண்கலங்களை உருவாக்குவது, அதை விண்வெளிக்குள் செலுத்த உதவும் ராக்கெட்களை உருவாக்குவது, செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த உதவுவது போன்ற பணிகளை செய்து - ட்விட்டர் எல்லாம் ஒன்றுமே இல்லை என்கிற அளவிற்கு கோடிக்கணக்கில் பணம் பார்க்கும் - ஒரு தனியார் நிறுவனம் என்றால் அது ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) தான்!

கேப்புல நடந்த கிடா வெட்டு! Elon Musk அசந்த நேரம் பார்த்து ISRO செய்த " title="கேப்புல நடந்த கிடா வெட்டு! Elon Musk அசந்த நேரம் பார்த்து ISRO செய்த "அடேங்கப்பா" வேலை!
" loading="lazy" width="100" height="56" />
கேப்புல நடந்த கிடா வெட்டு! Elon Musk அசந்த நேரம் பார்த்து ISRO செய்த "அடேங்கப்பா" வேலை!

தங்க முட்டை போடும் வாத்து!

தங்க முட்டை போடும் வாத்து!

எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திடம் தங்க முட்டை போடும் ஒரு வாத்து உள்ளது. அது தான் - ரீயூசபிள் ராக்கெட் (Reusable rocket).

அதாவது ஒரு செயற்கைகோளை அல்லது விண்கலத்தை சுமந்து சென்று, அதை சுற்றுப்பாதையில் விட்டுவிட்டு, மீண்டும் பூமிக்கு திரும்பும் ராக்கெட் தான் - ரீயூசபிள் ராக்கெட் எனப்படுகிறது.

இன்னும் சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், ரீயூசபிள் ராக்கெட்டை மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம். அதன் மூலம் பெரிய அளவிலான பொருட்செலவை குறைக்கலாம்; நல்ல லாபத்தை பார்க்கலாம்!

தீக்கு இரையான பல கோடிகள்!

தீக்கு இரையான பல கோடிகள்!

கசப்பான உண்மை என்னவென்றால், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ரீயூசபிள் ராக்கெட் ஆனது ஒரே இரவில் உருவாக்கப்படவில்லை.

பல ஆண்டுகள் கனவு மற்றும் உழைப்பு, பல எண்ணிக்கையிலான முயற்சிகள், தோல்விகள் மற்றும் விபத்துகள் என - பல கோடிகளை தீக்கு இரையாக்கிய பின்னரே - ரீயூசபிள் ராக்கெட் வெற்றிகரமாக உருவானது!

அதன் பின்னர், நாசா போன்ற விண்வெளி ஆராய்ச்சி மையங்களும் கூட ரீயூசபிள் ராக்கெட்களில் பணியாற்ற தொடங்கின, அந்த பட்டியலில் இந்தியாவின் இஸ்ரோவும் உண்டு!

மிரண்டு போன விஞ்ஞானிகள்! இத்தனை வருஷமாக சூரியனுக்கு பின்னால் ஒளிந்திருந்த மிரண்டு போன விஞ்ஞானிகள்! இத்தனை வருஷமாக சூரியனுக்கு பின்னால் ஒளிந்திருந்த "பொருள்" வெளிப்பட்டது!

சைலன்ட் ஆக வேலை பார்க்கும் இஸ்ரோ!

சைலன்ட் ஆக வேலை பார்க்கும் இஸ்ரோ!

பிஎஸ்எல்வி (PSLV) என்கிற போலார் சாட்டிலைட் லான்ச் வெஹிக்கிள் (Polar Satellite Launch Vehicle) மற்றும் ஜிஎஸ்எல்வி (GSLV) என்கிற ஜியோசிங்க்ரநைஸ் சாட்டிலைட் லான்ச் வெஹிக்கிள் (Geosynchronous Satellite Launch Vehicle) போன்றவைகளை தொடர்ந்து, இஸ்ரோ ஒரு புத்தம் புதிய ராக்கெட்டில் வேலை செய்கிறது.

அதுதான் - என்ஜிஎல்வி (NGLV) என்கிற நெக்ஸ்ட் ஜெனரேஷன் லான்ச் வெஹிக்கிள் (Next-Generation Launch Vehicle) ஆகும். இந்நேரம் உங்களுக்கே புரிந்து இருக்கும்.. இது தான் இஸ்ரோவின் ரீயூசபிள் ராக்கெட் (Reusable rocket) என்று!

நீ BAD-னா.. நான் உன்னோட DAD!

நீ BAD-னா.. நான் உன்னோட DAD!

சமீபத்தில் தான், இஸ்ரோவின் தலைவர் ஆன எஸ் சோமநாத், இந்தியா அதன் சொந்த ரீயூசபிள் ராக்கெட்டின் வடிவமைப்பில் செயல்பட்டு வருவதாகவும், அது 20 டன் எடையுள்ள பேலோடை கூட அசால்ட் ஆக சுமந்து செல்லும் என்றும் கூறி இருந்தார்!

அதை தொடர்ந்து ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், "நீ BAD-னா.. நான் உன்னோட DAD!" என்று கூறும்படியான ஒரு காரியத்தை செய்துள்ளது.

25 மணி நேரமாக மாறப்போகும் 1 நாள்.. விஞ்ஞானிகள் புட்டுப்புட்டு வைக்கும் 3 உண்மைகள்!25 மணி நேரமாக மாறப்போகும் 1 நாள்.. விஞ்ஞானிகள் புட்டுப்புட்டு வைக்கும் 3 உண்மைகள்!

அப்படி என்ன செய்தது?

அப்படி என்ன செய்தது?

எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், உலகின் மிகவும் சக்திவாய்ந்த ராக்கெட்களில் ஒன்றான ஃபால்கன் ஹெவி ராக்கெட்டை (Falcon Heavy rocket) வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி உள்ளது!

டெட்ரா-1 சாட்டிலைட் உட்பட அமெரிக்க விண்வெளிப் படைக்கான சரக்குகளை ஏற்றி சென்ற ஃபால்கன் ஹெவி ராக்கெட் ஆனது அமெரிக்காவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் (Kennedy Space Center) இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

சில நிமிடங்களில்.. பூமிக்கு திரும்பிய 2 பூஸ்டர்கள்!

சில நிமிடங்களில்.. பூமிக்கு திரும்பிய 2 பூஸ்டர்கள்!

ஃபால்கன் ஹெவி ராக்கெட்டை விண்ணில் செலுத்திய சில நிமிடங்களுக்குப் பிறகு, ராக்கெட்டின் இரண்டு சைட் பூஸ்டர்களும் (Side boosters) பூமிக்கு பத்திரமாக திரும்பி வந்தன.

வழக்கம் போல ராக்கெட்டின் மெயின் ஸ்டேஜ் ஆனது (main stage) மீட்கப்படாது. சுருக்கமாக, இதை மிகவும் வெற்றிகரமான ஒரு ரீயூசபிள் ராக்கெட் ஏவுதல் என்றே கூறலாம்!

செவ்வாய் கிரகத்தில் கேட்ட சத்தம்.. அதுவும் 4 முறை கேட்டது! என்னது அது?செவ்வாய் கிரகத்தில் கேட்ட சத்தம்.. அதுவும் 4 முறை கேட்டது! என்னது அது?

முதல் முறை - கார்.. இப்போது - பணம்!

முதல் முறை - கார்.. இப்போது - பணம்!

நினைவூட்டும் வண்ணம், கடந்த 2018 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட சோதனையின் ஒரு பகுதியாக ஃபால்கன் ஹெவி ராக்கெட் ஆனது டெஸ்லா கார் (Tesla Car) ஒன்றை விண்வெளிக்குள் செலுத்தியது.

அறியாதோர்களுக்கு டெஸ்லா (Tesla) நிறுவனமும் கூட எலான் மஸ்க்கிற்கு சொந்தமான கம்பெனி தான்.

செவ்வாய் கிரகத்தை நோக்கி ஒரு சிவப்பு நிற டெஸ்லா காரை செலுத்திய பிறகு, ஃபால்கன் ஹெவி ராக்கெட்டின் செயல்பாடுகள் அனைத்துமே வணிகம் தொடர்பாகவே இருக்கின்றன.

வரிசையில் நிற்கும் நாசா!

வரிசையில் நிற்கும் நாசா!

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா கூட, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் ஹெவி ராக்கெட்டை பெரிதும் நம்பி உள்ளது; தேர்தெடுத்துள்ளது!

ஏனென்றால், ஃபால்கன் ஹெவி ராக்கெட் ஆனது மிகவும் கனமான பேலோடுகளை கூட அசலாட் ஆக சுமந்து செல்லும் திறனை கொண்டது. இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், இது 64 டன் எடையை சுமந்து செல்லும் திறன் கொண்டது!

லண்டன் அருகே விழுந்த விண்கல்லுக்குள் இருந்த நம்ப முடியாத லண்டன் அருகே விழுந்த விண்கல்லுக்குள் இருந்த நம்ப முடியாத "பொருள்"!

ஃபால்கன் ஹெவி ராக்கெட்டை தூக்கி சாப்பிடும் ஸ்டார்ஷிப்!

ஃபால்கன் ஹெவி ராக்கெட்டை தூக்கி சாப்பிடும் ஸ்டார்ஷிப்!

எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ், ஸ்டார்ஷிப் (Starship) என்கிற மற்றொரு ராக்கெட்டையும் உருவாக்கி வருகிறது.

அது ஃபால்கன் ஹெவி ராக்கெட்டை தூக்கி சாப்பிடும் அளவிலான ஒரு சூப்பர் ஹெவி (Super Heavy) ராக்கெட் ஆக இருக்கும் என்பது போல் தெரிகிறது.

ஏனென்றால், நாசா அதன் ஆர்ட்டெமிஸ் 3 மிஷனுக்காக (Artemis 3 mission) தேர்வு செய்துள்ள ராக்கெட் - ஸ்டார்ஷிப்பே ஆகும். அறியாதோருக்கு ஆர்ட்டெமிஸ் 3 என்பது மனிதர்களை நிலவிற்கு அனுப்பும் நாசாவின் வருங்கால திட்டங்களில் ஒன்றாகும். இது 2025 ஆம் ஆண்டு வாக்கில் நடக்கும்.

Photo Courtesy: NASA, Wikipedia

Best Mobiles in India

English summary
Elon musk's SpaceX launched falcon heavy rocket just after ISRO announced its reusable rocket

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X