மிட்-ரேஞ்ச் மிரளுது.. 9000mAh பேட்டரி.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. புது OnePlus போன்.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் ஒன்பிளஸ் நோர்ட் 6 (OnePlus Nord 6) வெளியீடு உறுதி செய்யப்பட்டு உள்ளது. சிப்செட், பேட்டரி, ஸ்டோரேஜ் உள்ளிட்ட பீச்சர்கள் உறுதி செய்யப்பட்டு உள்ளன. கூடவே, பட்ஜெட் செக்மெண்ட்டும் உறுதியாகி இருக்கிறது. இந்த ஒன்பிளஸ் நோர்ட் 6 ஸ்மார்ட்போனின் முழு பீச்சர்கள் எப்படி இருக்கும்?
சீன மார்கெட்டில் வெளியான ஒன்பிளஸ் டர்போ 6 (OnePlus Turbo 6) ஸ்மார்ட்போனின் ரீபிராண்ட் வெர்ஷனாக ஒன்பிளஸ் நோர்ட் 6 ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. இதை உறுதி செய்யும் விதமாக குயிக் சில்வர் (Quick Silver), ஃப்ரெஷ் மின்ட் (Fresh Mint) மற்றும் பிட்ச் பிளாக் (Pitch Black) கலர்கள் இருக்கின்றன. இதே டிசைன் மற்றும் கலர்களில் ஒன்பிளஸ் டர்போ 6 சீனாவில் கிடைக்கிறது.

மேலும், குவால்காம் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 சிப்செட், 9000mAh பேட்டரி, 165 FPS அவுட்புட் உள்ளிட்ட பீச்சர்களும் ஒன்பிளஸ் டர்போ 6 மாடலை நினைவூட்டுகின்றன. ஆகவே, ஒன்பிளஸ் டர்போ 6 டர்போ போனில் கிடைத்த பீச்சர்களை வைத்து நோர்ட் 6 போனில் என்னென்ன பீச்சர்களை எதிர்பார்க்கலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
ஒன்பிளஸ் நோர்ட் 6 அம்சங்கள் (OnePlus Nord 6 Specifications): 6.78 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. 1.5K ரெசொலூஷனுடன் பிளாட் டிசைனை கொண்டுள்ளது. 165Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1800 நிட்ஸ் எச்பிஎம் பிரைட்னஸ் கிடைக்கிறது. மேலும், 3840 PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் 450 பிபிஐ பிக்சல் டென்சிட்டி உள்ளது.
3600 நிட்ஸ் எச்பிஎம் பிரைட்னஸ் கிடைக்கிறது. 165 FPS கேமிங் அவுட்புட் கொடுக்கப்பட்டு உள்ளது. ஓப்போ கிரிஸ்டல் ஷீல்டு (OPPO Crystal Shield) புரொடெக்சன் கிடைக்கிறது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 4என்எம் (Qualcomm Snapdragon 8s Gen 4 4nm) சிப்செட் மற்றும் அட்ரினோ 825 ஜிபியு (Adreno 825 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது.
டச் ரெஃப்ளெக்ஸ் சிப் (Touch Reflex Chip) மற்றும் ஜி2 வை-பை சிப் (G2 Wi-Fi Chip) கொடுக்கப்பட்டு உள்ளது. 80W சூப்பர்வூக் (SUPERVOOC) சார்ஜிங் கொண்ட 9000mAh பேட்டரி கிடைக்கிறது. மேலும், ஃபைபாஸ் சார்ஜிங் மற்றும் 27W ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி மோனோகுரோம் கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் வருகிறது.
மெயின் கேமராவில் சோனி எல்ஒய்டி 600 (Son LYT 600) சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) டெக்னாலஜி கிடைக்கிறது. 20X டிஜிட்டல் ஜூம் (Digital Zoom) உள்ளது. நைட் சீன்ஸ் (Night Scenes), லாங்க் எக்ஸ்போசர் (Long Exposure), மல்டி-வியூ ரெக்கார்டிங் (Multi-View Recording), ஏஐ ஐடி போட்டோஸ் (AI ID Photos), ப்ரொபஷனல் மோட் (Professional Mode) பீச்சர்கள் உள்ளன.
16 எம்பி செல்பீ ஷூட்டரை இந்த ஒன்பிளஸ் நோர்ட் 6 ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கிடைக்கிறது. கலர்ஓஎஸ் அல்லது ஆக்ஸிஜன் ஓஎஸ் கிடைக்க வாய்ப்புள்ளது. IP66 ரேட்டிங், IP68 ரேட்டிங், IP69 ரேட்டிங் மற்றும் IP69K ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர்ப்ரூப் உள்ளது.
எக்ஸ்-ஆக்சிஸ் லீனியர் மோட்டார் (X-axis Linear Motor) கிடைக்கிறது. இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Optical Fingerprint Sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) கிடைக்கிறது. ஸ்டீரியோ டூயல் ஸ்பீக்கர்கள் (Stereo Dual Speakers) மற்றும் 2 மைக்ரோபோன்கள் உள்ளன. வருகிற ஏப்ரல் 7ஆம் தேதி இந்தியாவில் நோர்ட் 6 வெளியாக இருக்கிறது. ரூ.40,000 பட்ஜெட்டுக்குள் கிடைக்க உள்ளது.


Click it and Unblock the Notifications








