பூமியின் மிக பழமையான தாவரம்.! 32,000 வருடத்திற்கு பிறகு பூ பூத்தது.! இயற்கையின் அதிசயம்.!

|

ரீஜெனரேஷன் (Regeneration) என்பது ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு. விஞ்ஞான ரீதியாக ரீஜெனரேஷன் என்பது இழந்த அல்லது சேதம் அடைந்த திசுக்கள், உறுப்புகள் அல்லது திறன் போன்ற விஷயங்களை மீண்டும் பெறுவதாகும். இது தாவரங்கள் விலங்குகள் மற்றும் சில நுண்ணுயிர்கள் உட்பட பல வடிவங்களில் நிகழும் இயற்கையான செயல்முறையாகும். ஆனால், இதை விஞ்ஞானிகள் சில நேரங்களில் டெஸ்ட் டியூப்களிலும் மேற்கொள்கின்றனர்.

ரீஜெனரேஷன் முறை பெரும்பாலும் விலங்குகள், தாவரங்களில் அதிகமாக காணப்படுகின்றன. உதாரணமாக பல்லிகளின் வால் துண்டிக்கப்பட்டாலோ அல்லது அவற்றின் கால் துண்டிக்கப்பட்டாலோ, அவை மீண்டும் ரீஜெனெரேஷன் மூலம் தானாக அது உருவெடுத்து வளர்ந்துவிடும். அதேபோல், பாலூட்டிகளில் கல்லீரல் பாதிக்கப்பட்டால், அதனுடைய செல்கள் மீண்டும் ரீஜெனரேஷன் செய்யப்பட்டும். தாவரங்களின் இலைகள் உதிர்ந்தால், மீண்டும் அவை ரிஜெனரேஷன் மூலம் வளரும்.

பூமியின் மிக பழமையான தாவரம்.! 32,000 வருடத்திற்கு பிறகு பூ பூத்தது.!

இப்படி உயிரினங்களில் ரீஜெனரேஷன் மிகவும் பொதுவானது. இது உயிருள்ள ஒரு ஜீவனில் தோன்றுவது இயல்பானது. ஆனால், சுமார் 32,000 வருடங்களுக்கு முன்பு பனிக்கட்டிக்குள் புதைக்கப்பட்ட ஒரு விதையில் ரீஜெனெரேஷன் செய்ய வேண்டும் என்றால், அதை எவ்வளவு சிரமம் என்று யோசித்துப் பாருங்கள். மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட ஆர்டிபிசியல் ரீஜெனரேஷன் மூலம், இப்பொழுது 32 ஆயிரம் வருடங்கள் பழமையான விதையை விஞ்ஞானிகள் மீண்டும் தாவரமாக (32000 year old seeds regenerated) உருவாக்கியுள்ளனர்.

இந்த விதைகள் முற்றிலும் பணியில் உறைந்து இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் சாதாரணமான பனி இல்லை, பெர்மாஃபிரோஸ்ட் பனிக்கட்டி, பூமியின் மேல் தலத்தில் இருந்து சுமார் 124 அடி ஆழத்தில் இருந்து வெளியில் எடுக்கப்பட்ட விதைகள் இவை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2012 ஆம் ஆண்டு, இன்ஸ்டிட்யூட் ஆஃப் செல் பயோ பிசிக்ஸ் ரஷ்ய விஞ்ஞானிகள், செர்பியாவின் பூர்விக தாவரமான வெள்ளைப் பூக்கள் கொண்ட சைலின் ஸ்டெனோபில்லாவின் விதைகளை கண்டெடுத்தனர்.

124 அடி ஆழத்தில் பணிக்குள் புதைந்திருக்கும் விதைகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து வெளியில் எடுத்தனர். இந்த விதைகள் 32,000 வருடங்கள் பழமையானது என்பது கண்டறியப்பட்டது. ரீஜெனரேஷன் முறையை பின்பற்றி இந்த விதைகள் 32,000 வருடங்களுக்குப் பிறகு இப்பொழுது முளைவிட தொடங்கியுள்ளன என்பது ஆச்சரியம்.! இந்த புகைப்படத்தில் நீங்கள் பார்க்கும் தாவரம் அதுதான். வெள்ளை பூக்களுடன் இப்பொழுது நன்றாக வளர்ந்து விட்டன.

பூமியின் மிக பழமையான தாவரம்.! 32,000 வருடத்திற்கு பிறகு பூ பூத்தது.!

இது 32,000 வருடங்களுக்கு முன்பு பூமியில் வாழ்ந்த மிகவும் பழைய தாவர இனம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆராய்ச்சியாளர்கள் 32 ஆயிரம் ஆண்டுகள் பழமையான விதையிலிருந்து பல சைலின் ஸ்டெனோபில்லா தாவரங்களை உற்பத்தி செய்துள்ளனர். இவர்களுடைய சாதனையை தேசிய அறிவியல் அகாடமியின் செல் முறைகளில் வெளியிடப்பட்ட ஆய்வில் விவரிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் வெற்றிகரமான ரீஜெனரேஷனை பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு பழங்கால தாவரத்தின் மரபணுக்களில் புகுத்தி இந்த தாவரத்திற்கு மீண்டும் உயிர் கொடுத்துள்ளனர்.

நேஷனல் ஜியோகிராபிக் தகவல் படி, இந்த விதைகள் 124 அடி ஆழத்தில் பனிக்கிடையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பனியால் மூடப்பட்ட விதைகள், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் வாழ்ந்த மாமத் யானைகள், பைசன் மற்றும் கம்பளிப் போர்த்திய காண்டாமிருகங்கள் போன்ற உயிர்களின் திசுக்கள் மட்டும் எலும்புகளின் அடுக்குகளால் சூழப்பட்டு இருந்தது என்று கூறியுள்ளனர்.

பெர்மாஃபாஸ்டில் இருந்து மீட்டெடுக்கப்பட்ட விதைகளின் வயதை கண்டறிய விஞ்ஞானிகள் வழக்கம் போல் ரேடியோ கார்பன் டேட்டிங் முறையை பயன்படுத்தி உள்ளனர். இதன் மூலம் இந்த விதைகள் 32,000 வருடங்கள் பழமையானது என்பது கண்டறியப்பட்டது. பனிக்கட்டியின் மேற்பரப்பில் இருந்து 124 அடி ஆழத்தில் இந்த விதைகள் இருந்த போதிலும், இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும், இந்த விதைகள் மீண்டும் உயிர் பெற்றுள்ளது.

இயற்கையின் வியப்பை இந்த ஆராய்ச்சி நமக்கு தெளிவாக காண்பிக்கிறது. இதை வைத்து விஞ்ஞானிகள் இன்னும் பல ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவுள்ளதாக கூறியுள்ளனர்.

Best Mobiles in India

English summary
32000 year old seeds regenerated by scientists is the oldest plant to ever exist on earth

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X