Home
Gadgets

சுட்டெரிக்கும் வெயில்.. கவலை வேண்டாம்.. ஏர் கூலர்கள் மாடல்களுக்கு ஆஃபர் அறிவிப்பு.. இதோ பட்டியல்..

கடந்த பிப்ரவரி மாதம் முதலே வெயில் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. அதுவும் சில இடங்களில் மழை பெய்தாலும் கூட பெரும்பாலான இடங்களில் வெப்பம் உச்சத்தில் இருக்கிறது. அதேபோல் இப்போது பல இடங்களில் ஏசி, ஏர் கூலர், மினி ஏசி போன்ற சாதனங்களை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

இந்நிலையில் பல முன்னணி நிறுவனங்களின் ஏர் கூலர் (air coolers) மாடல்கள் தற்போது ஆன்லைனில் ஆஃபர் விலையில் வாங்க கிடைக்கின்றன. இப்போது சலுகை விலையில் கிடைக்கும் ஏர் கூலர் மாடல்களின் பட்டியலை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

சுட்டெரிக்கும் வெயில்.. ஏர் கூலர்கள் மாடல்களுக்கு ஆஃபர் அறிவிப்பு..

1.வோல்டாஸ் 36 எல் ரூம்/ பெர்சனல் ஏர் கூலர் (Voltas 36 L Room/Personal Air Cooler) மாடலுக்கு தற்போது பிளிப்கார்ட் தளத்தில் 52 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.5,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஏர் கூலர் மாடலை வாங்கினால் ரூ.550 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த சாதனத்தைக் குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

45 லிட்டர் வாட்டர் டேங்க், 4 திசைகளிலும் காற்றை வீசக்கூடியது, ஹனிகோம்ப் பேட் (honeycomb pads), ஐஸ் சேம்பர் (Ice Chamber), 3 ஸ்பீடு கண்ட்ரோல், 1400 cfm ஏர் டெலிவரி உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளுடன் இந்த வோல்டாஸ் 36 எல் ரூம்/பெர்சனல் ஏர் கூலர் மாடல் வெளிவந்துள்ளது.

2. பஜாஜ் 36 எல் ரூம்/பெர்சனல் ஏர் கூலர் (BAJAJ 36 L Room/Personal Air Cooler) மாடலுக்கு பிளிப்கார்ட் தளத்தில் 43 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.5,600 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக 3 ஸ்பீடு கண்ட்ரோல், 4 திசைகளிலும் காற்றை வீசக்கூடியது (4-Way Air Deflection), 36 லிட்டர் வாட்டர் டேங்க் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த சாதனத்தில் உள்ளன.

3. சிம்பொனி 37 எல் டெசர்ட் ஏர் கூலர் (Symphony 37 L Desert Air Cooler) மாடலுக்கு பிளிப்கார்ட் தளத்தில் 39 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.5991 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகைள பயன்படுத்தி இந்த சாதனத்தை வாங்கினால் ரூ.600 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த ஏர் கூலர் மாடலை கம்மி விலையில் வாங்கிவிட முடியும்.

37 லிட்டர் வாட்டர் டேங்க், ஹனிகோம்ப் கூல் பேட், 3 ஸ்பீடு கண்ட்ரோல், பவர்ஃபுல் பேன், ஸ்விங்க் மோட் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளுடன் இந்த சிம்பொனி 37 எல் டெசர்ட் ஏர் கூலர் மாடல் வெளிவந்துள்ளது. அதுவும் இந்த சாதனத்தை வீட்டில் அனைத்து இடங்களிலும் பயன்படுத்த முடியும்.

சுட்டெரிக்கும் வெயில்.. ஏர் கூலர்கள் மாடல்களுக்கு ஆஃபர் அறிவிப்பு..

4.கிராம்ப்டன் Zelus 28 L டெசர்ட் ஏர் கூலர்(Crompton Zelus 28 Litres Desert Air Cooler) மாடலுக்கு அமேசான் தளத்தில் 18 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.6,975 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 28 லிட்டர் வாட்டர் டேங்க், ஐஸ் சேம்பர் (Ice Chamber), 4 திசைகளிலும் காற்றை வீசக்கூடியது (4-Way Air Deflection), ஹனிகோம்ப் பேட், 2350 cfm ஏர் டெலிவரி உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த கிராம்ப்டன் ஏர் கூலர் மாடலில் உள்ளன.

5.ஹவேல்ஸ் கூல்ஃப்ரெஷ் 43 லிட்டர் பர்சனல் ஏர் கூலர் (Havells KoolFresh 43 L Personal Air Cooler) மாடலுக்கு அமேசான் தளத்தில் 56 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.5,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 43 லிட்டர் வாட்டர் டேங்க், ஹனிகோம்ப் கூல் பேட், 3 ஸ்பீடு கண்ட்ரோல் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Top air coolers available at discounted prices to beat the summer heat: Here is the list
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X