தெருநாய்களும் ஒரு செல்லப்பிராணிதானே: பழைய டிவி பெட்டிகளில் தெருநாய்களுக்கு வீடு அமைத்த இளைஞர்!

|

பல்வேறு நிறுவனங்களும் போட்டிப்போட்டுக் கொண்டு ஸ்மார்ட்டிவிகளை அறிமுகம் செய்து வருகின்றன. வெளியாகும் ஸ்மார்ட்டிவிகள் அனைத்திலும் ஏணைய புது அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. ஸ்மார்ட்டிவிகள் எவ்வளவு அளவிற்கு மெலிதாக இருக்கிறதோ அந்த அளவிற்கு விலை உயர்வாக இருக்கிறது.

பழைய சாலிடர் டிவிகள்

பழைய சாலிடர் டிவிகள்

மரத்தாலான பழைய வால்வு ரேடியோ, கதவு பொருத்தப்பட்டிருக்கும் பழைய சாலிடர் டிவிகள், அடுத்தடுத்து வெளியான கலர் டிவிகள் என அந்த காலம் அது அது வசந்த காலம் என்பது போல் இருந்தது. அதேபோல் அடுத்தக்கட்டமாக பிளாட் கலர் டிவிகள் வெளியானது. இதுவும் பின்புறத்தில் நீண்ட கூடாரம் போல் இருந்தது.

பழைய டிவிகளுக்கு மவுசு குறைந்து வருகிறது

பழைய டிவிகளுக்கு மவுசு குறைந்து வருகிறது

அதேபோல் தற்போதைய காலத்தில் பழைய டிவிகளுக்கு மவுசு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது என்றே கூறலாம். இப்போதெல்லாம் எக்ஸ்சேஞ்ச் சலுகை கூட பழைய டிவிகளுக்கு கிடைப்பதில்லை. காரணம் பழைய வகை டிவிகளில் கேபிள் கனெக்ஷன், DVD இணைப்பு உள்ளிட்ட அனுகல் மட்டுமே இருக்கும்.

எலெக்ட்ரானிக் கழிவுகளாக மாறும் டிவிகள்

எலெக்ட்ரானிக் கழிவுகளாக மாறும் டிவிகள்

இந்த நிலையில் பழைய டிவிகள் பழுதடைந்தது என்றால் அதை சரி செய்வதற்கு கூட முறையான ஆட்கள் கிடைக்காத நிலையில் பழைய டிவிகள் அனைத்தும் எலெக்ட்ரானிக் கழிவுகளாகவே மாறுகிறது. இதை அசாம் மாநில இளைஞர் ஒருவர் பயனுள்ளதாக மாற்றி வருகிறார்.

நாய்களுக்கு வசிப்பிடத்தை உருவாக்கும் முயற்சி

நாய்களுக்கு வசிப்பிடத்தை உருவாக்கும் முயற்சி

அசாம் மாநிலம் சிவசாகர் பகுதியை சேர்ந்தவர் அபிஜித். 32 வயதான இவர் தெருவில் சுற்றித்திரியும் நாய்களுக்கு வசிப்பிடத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தெரு நாய்களுக்கு பழைய டிவிகள் மூலம் வீடுகளை உருவாக்கியுள்ளார்.

ஐபோன் தயாரிப்பு நிறுவனம் சூறையாடல்: மொத்தம் ரூ.437 கோடி நஷ்டம்-நிறுவனத்தின் அதிர்ச்சி தகவல்!ஐபோன் தயாரிப்பு நிறுவனம் சூறையாடல்: மொத்தம் ரூ.437 கோடி நஷ்டம்-நிறுவனத்தின் அதிர்ச்சி தகவல்!

வீடாக மாறிய பழைய டிவி பெட்டிகள்

வீடாக மாறிய பழைய டிவி பெட்டிகள்

பழைய டிவிகளின் பெட்டிகளை வீடு போல் அமைத்து அதை தெருநாய்களுக்கு வீடுகளாக மாற்றியுள்ளார். இதில் தெருநாய்கள் குளிருக்கு இதமாக தங்கிக் கொள்கிறது. இதுகுறித்து அபிஜித் தெரிவித்த கருத்துகளை பார்க்கலாம்.

சொகுசை விரும்பும் செல்லப்பிராணிகள்

சொகுசை விரும்பும் செல்லப்பிராணிகள்

பொதுவாக செல்லப்பிராணிகள் சொகுசை விரும்பும். அதன்படி வீட்டில் வளர்க்கப்படும் நாய்களுக்கு அனைத்து சௌகரியங்களும் தாராளமாக கிடைக்கும். ஆனால் தெருநாய்களை யாரும் பெரிதாக கண்டுகொள்வதில்லை. இதற்கு தீர்வு காண முடிவு செய்துள்ளதாக அவர் கூறினார்.

தெருநாய்களுக்கு வீடுகள்

தெருநாய்களுக்கு வீடுகள்

அதன்படி குளிருக்கு இதமாக தெருநாய்களுக்கு வீடுகள் அமைக்க முடிவு செய்தேன். 5 வருடங்களுக்கு மேலாக குப்பையில் வீசப்படும் தேவையான பொருட்களை எடுத்து 50-க்கும் மேற்பட்ட பயன்பாடுகளை தயாரித்துள்ளதாக அபிஜித் கூறினார்.

டார்ச்லைட், ஆட்டோமேட்டிக் சானிடைசர்

டார்ச்லைட், ஆட்டோமேட்டிக் சானிடைசர்

அபிஜித் இந்த செயல் பலரால் பாராட்டுப்பட்டு வருகிறது. பலர் தங்களிடம் இருக்கும் தேவைப்படாத பொருட்களை முன்வந்து அபிஜித்திடம் வழங்கி வருகின்றனர். இதன்மூலம் அபிஜித் நாய்களுக்கு வீடு, பெண்கள் இரவில் பாதுகாப்பாக பயணிக்க டார்ச்லைட், ஆட்டோமேட்டிக் சானிடைசர் என பல பயன்பாடுகளை உருவாக்கியுள்ளார்.

Best Mobiles in India

English summary
Young Make Homes For Street Dogs by Using Old Model Tvs

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X