Home
News

ஏசி, டிவி, பிரிஜ், மொபைல் போன்களின் விலை இம்மாத இறுதியில் உயர்கிறது.. காரணம் என்ன?

இந்தியாவில் ஏசி (AC), பிரிஜ், வாஷிங் மெஷின், டிவி, மொபைல் போன் ஆகியவற்றின் விலையை இந்த மாதம் இறுதியில் உயர்த்த பல்வேறு நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

அதாவது மெமரி சிப், கச்சா எண்ணெய்யில் இருந்து பெறப்படும் பிளஸ்டிக் முதலிய மூலப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து ஏசி, மொபைல் போன், பிரிட்ஜ், வாஷிங்மெஷின், டிவி போன்றவற்றின் விலை உயர்த்தப்பட உள்ளது. இது கடந்த நான்கு மாதங்களில் ஏற்படும் மூன்றாவது கட்ட விலை உயர்வாகும்.

ஏசி, டிவி, பிரிஜ், மொபைல் போன்களின் விலை இம்மாத இறுதியில் உயர்கிறது..

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பல்வேறு நுகர்வு பொருட்களுக்கு ஜிஎஸ்டி குறைக்கப்பட்டது. இதையடுத்து வீட்டு உபயோக பொருட்களுக்கான தேவை அதிகரித்தது. இந்நிலையில் தான் மூலப்பொருட்கள் விலை உயர்வு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, ஏ.சி.க்கான மின் சேமிப்பு விதிகளில் மாற்றம் ஆகியவற்றால் ஜனவரி முதல் பிப்ரவரி வரையிலான காலக்கட்டத்தில் இவற்றின் விலை அதிகரித்தது.

அதைத்தொடர்ந்து மார்ச் இறுதி முதல் ஏப்ரல் முதல் வாரம் வரையிலான காலக்கட்டத்தில் சரக்கு போக்குவரத்து கட்டண உயர்வு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, கச்சா எண்ணெய் தொடர்புடைய மூலப்பொருட்களின் விலையேற்றம் ஆகியவற்றின் எதிரொலியாக மீண்டும் விலை உயர்வு நடைமுறைக்கு வந்தது. அந்த வகையில் இந்த மாதம் இறுதியிலும் மீண்டும் விலை உயர்வு அதிகரிக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் சமீபத்தில் மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன் 5ஜி (Motorola Edge 60 FUSION 5G) போனின் விலை கூட அதிகரித்துள்ளது. அதன்படி 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன் 5ஜி போனின் விலை முன்பு ரூ.20,999-ஆக இருந்தது. ஆனால் தற்போது இந்த போன் ரூ.22,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன் 5ஜி போனின் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை உயர்த்தப்பட்டு ரூ.24,999 விலையிலும், இதன் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை உயர்த்தப்பட்டு ரூ.26,999 விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இப்போது இந்த போனின் அம்சங்களையும் பார்க்கலாம்.

மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன் 5ஜி அம்சங்கள் (Motorola Edge 60 FUSION 5G Specifications): 6.7 இன்ச் குவாட் கர்வ்ட் பிஓஎல்இடி (Quad Cueved pOLED) டிஸ்பிளே டிஸ்பிளே வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. மேலும் 2712 x 1220 பிக்சல்கள், 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 360 ஹெர்ட்ஸ் டச் சாம்பிளிங் ரேட், 446 பிபிஐ பிக்சல் டென்சிட்டி உள்ளிட்ட பல அம்சங்கள் இதன் டிஸ்பிளேவில் உள்ளன. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும்.

ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 4என்எம்(Octa Core MediaTek Dimensity 7400 4nm) சிப்செட் வசதியுடன் இந்த மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன் 5ஜி வெளிவந்தது. மேலும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

50 எம்பி மெயின் கேமரா + 13 எம்பி அல்ட்ரா வைடு கேமரா ஆகிய ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன் 5ஜி. செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா உள்ளது. இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்களை எடுக்க முடியும்.

5500mAh பேட்டரி வசதியுடன் இந்த மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் கொடுக்கும். இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 68W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. ஆகவே இந்த போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.

ஏசி, டிவி, பிரிஜ், மொபைல் போன்களின் விலை இம்மாத இறுதியில் உயர்கிறது..

IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் இந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது. பின்பு MIL-STD-810H இராணுவ தர சான்றிதழ் பெற்றுள்ளது மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன் 5ஜி ஸ்மார்ட்போன்.

டால்பி அட்மாஸ் ஆடியோவுடன் கூடிய ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளன. மேலும் யூ.எஸ்.பி-சி ஆடியோ, ஹைப்ரிட் டூயல் சிம், 5 ஜி, வைஃபை 6, புளூடூத் 5.4 , என்.எஃப்.சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Electronics Getting Costlier: Why Prices of ACs, TVs, and Mobiles Are Rising
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X