கலக்குற சந்துரு.. இந்தியாவில் இன்னொரு புது OnePlus 5ஜி போன்.. ரூ.22000 பட்ஜெட்டில் 9000mAh பேட்டரி!
ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனமானது அதன் ஒன்பிளஸ் நோர்ட் 6 (OnePlus Nord 6) ஸ்மார்ட்போனை இம்மாத தொடக்கத்தில் இந்தியாவிலும், தேர்ந்தெடுக்கப்பட்ட உலகளாவிய சந்தைகளிலும் அறிமுகப்படுத்தி இருந்தது. இந்த ஸ்மார்ட்போனுடன், அதாவது ஒன்பிளஸ் நோர்ட் 6 சீரிஸின் கீழ் மேலும் இரண்டு மாடல்கள், கூடிய விரைவில் இணையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவைகள் - ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 6 5ஜி (OnePlus Nord CE 6 5G) மற்றும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 6 லைட் 5ஜி (OnePlus Nord CE 6 Lite 5G) மாடல்கள் ஆகும். இதற்கிடையில் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 6 மாடலின் சில முக்கிய அம்சங்கள் லீக் ஆகியுள்ளது.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 6 ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறலாம்? டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் பகிர்ந்துள்ள விவரங்களின்படி, CPH2805 என்கிற மாடல் நம் பரை கொண்ட ஒரு ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது கீக்பெஞ்சில் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த மாடல் நம்பர், விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று வஎதிர்பார்க்கப்படும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 6 மாடலை உறுதிப்படுத்துவதாக நம்பப்படுகிறது.
மேலும் கீக்பெஞ்சில் காணப்பட்ட இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனின் பெர்பார்மென்ஸ் ஸ்கோர்கள் ஆனது, இது ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 4 சிப்செட் உடன் அறிமுகம் செய்யப்படலாம் என்பதை குறிக்கின்றன. குறிப்பிடத்தக்க வகையில், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மோட்டோரோலா எட்ஜ் 70 ஃபியூஷன் மற்றும் விவோ டி5 ப்ரோ போன்ற மாடல்களில் இதே சிப்செட் தான் உள்ளது
மேலும் கீக்பெஞ்ச் லிஸ்டிங் ஆனது ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 6 ஸ்மார்ட்போன் ஆனது தோராயமாக 7.21ஜிபி ரேம் உடன் இணைக்கப்படலாம் என்று கூறுகிறது, அதாவது இது 8ஜிபி ரேம் என சந்தைப்படுத்தப்படலாம். மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் கொண்டு இயங்குவதாகப் பட்டியலிடப்பட்டுள்ளது. ஆக இது ஆக்சிஜன்ஓஎஸ் 16 உடன் வெளியிடப்படலாம்.
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 6 ஸ்மார்ட்போனில் வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- 1.5K ரெசல்யூஷன் மற்றும் 144Hz ரெஃப்ரெஷ் ரேட்டை வழங்கும் 6.8-இன்ச் பிளாட் OLED டிஸ்பிளேவை பேக் செய்யலாம்.
- 8GB ரேம் உடனான 256GB இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வரலாம்
- ஒன்பிளஸ் நோர்ட் 6 மாடலை போலவே இதுவும் பெரிய 9,000mAh பேட்டரியை கொண்டிருக்கலாம் மற்றும் 80W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கலாம்
- 32-மெகாபிக்சல் செல்பீ கேமரா இடம்பெறலாம்
- ரியர் கேமரா செட்டப்பில் 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா மற்றும் 8-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ் இடம்பெறலாம்.
- விலை ரூ.23,000 க்கும் குறைவாக இருக்கலாம் (ரூ.22,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது)
சமீபத்தில் அறிமுகமான ஒன்பிளஸ் நோர்ட் 6 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6.78-இன்ச் 165ஹெர்ட்ஸ் அமோஎல்இடி டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 8s ஜென் 4 சிப்செட்
- ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS), எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (EIS), எப்/1.8 அபெர்ச்சர் மற்றும் PDAF உடனான 50-மெகாபிக்சல் சோனி LYT-600 CMOS ப்ரைமரி கேமரா
- 112-டிகிரி பீல்ட் ஆப் வியூ உடனான 8-மெகாபிக்சல் ஆம்னிவிஷன் OV08F அல்ட்ரா-வைட் கேமரா
- 32-மெகாபிக்சல் செல்பீ கேமரா
- MIL-STD-810H மிலிட்டரி கிரேட் ட்யூரபிலிட்டி
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்காக IP66 + IP68 + IP69 + IP69K ரேட்டிங்
- 80W சூப்பர்VOOC சார்ஜிங், 27W வயர்டு ரிவர்ஸ் மற்றும் பைபாஸ் சார்ஜிங் ஆதரவு
- 9000mAh சிலிக்கான் கார்பன் பேட்டரி
இந்தியாவில் வாங்க கிடைக்கும் ஒன்பிளஸ் நோர்ட் 6 ஸ்மார்ட்போனின் விலை: 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.38,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.41,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது ஃப்ரெஷ் மின்ட், பிட்ச் பிளாக் மற்றும் க்விக் சில்வர் ஆகிய 3 கலர்களில் வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications