முழு நேரமும் Pubg தான்: வியர்த்து மாரடைப்பில் உயிரிழப்பு., எப்படி தெரியுமா?

|

Pubg விளையாட்டில் தொடர்ந்து தனது நேரத்தை செலவிட்டு வந்த ஒருவர் வியர்த்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இறப்புக்கான காரணமும் இறந்தவரின் வயது குறித்தும் பார்க்கலாம்.

கொரோனாவைக் கட்டுப்படுத்த ஊரடங்கு

கொரோனாவைக் கட்டுப்படுத்த ஊரடங்கு

சீனாவில் தோன்றி உலகம் முழுவதையும் உலுக்கிவரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் தாக்கியுள்ளது. கொரோனாவைக் கட்டுப்படுத்த அரசாங்கம் தொடர்ந்து ஊரடங்கை அறிவித்து வருகிறது.

தங்களது நேரத்தை வீட்டிலேயே செலவிட்டு வருகின்றனர்

தங்களது நேரத்தை வீட்டிலேயே செலவிட்டு வருகின்றனர்

இதையடுத்து பெரும்பாலானோர் தங்களது நேரத்தை வீட்டிலேயே செலவிட்டு வருகின்றனர். தங்களது பொழுதை எவ்வாறு செலவிடுவது என்று அறியாமல் பெரும்பாலானோர் தவித்து வருகின்றனர். ​​இதில் பெரும்பாலான மக்கள் தங்களது நேரத்தை கேமில் செலவிட்டு வருகின்றனர்.

ஆன்லைன் கேமில் நேரத்தை செலவிடும் நபர்கள்

ஆன்லைன் கேமில் நேரத்தை செலவிடும் நபர்கள்

அதேபோல் நண்பர்கள் ஒன்றுகூடி பேசி குழுவாக தங்களது நேரத்தை ஆன்லைனில் செலவிட்டு மகிழ்ந்து வருகின்றனர். பப்ஜி, கால் ஆஃப் டூட்டி போன்ற விளையாட்டுகள் தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளது. இதில் நேரத்தை செலவிடும் நபர்கள் அதிகம் என்று கூறினால் அது மிகையல்ல.

மொபைல் போனில் நேரத்தை செலவிடும் நபர்கள்

மொபைல் போனில் நேரத்தை செலவிடும் நபர்கள்

இந்த கொரோனா தாக்குதல் ஊரடங்கு நேரத்தில் பலரும் தங்களது நேரத்தை எவ்வாறு செலவிடுவது என்று தவித்து வரும் நிலையில் அதில் ஒரு சிலர் மட்டும் தங்களது நேரத்தை மிகவும் எளிதாக மொபைல் போனில் செலவிட்டு வருவார்கள். அதிலும் ஒரு சிலர் பப்ஜி விளையாட்டில் உரையாடுவது நண்பர்களோடு கூடி விளையாடுவது என தங்களது நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.

சும்மா புகுந்து விளையாடலாம்: இனி whatsapp status-க்கு அந்த பிரச்சனை இல்லை!சும்மா புகுந்து விளையாடலாம்: இனி whatsapp status-க்கு அந்த பிரச்சனை இல்லை!

தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்

தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்

இந்த நிலையில் ஈரோடு கருங்கல்பாளையம் கமலா நகர் பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஈரோட்டிலுள்ள பிரபல முட்டை நிறுவனத்தில் ஆபரேட்டராக பணிபுரிந்து வரும் இவரது மகன் சதீஷ்குமார், ஈரோட்டிலுள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்திருக்கிறார்.

முழு நேரத்தையும் பப்ஜி விளையாட்டில் செலவிட்டுள்ளார்

முழு நேரத்தையும் பப்ஜி விளையாட்டில் செலவிட்டுள்ளார்

மாணவன் சதீஷ்குமார் தனது முழு நேரத்தையும் பப்ஜி விளையாட்டில் செலவிட்டுள்ளார். சதீஷ்குமாரின் இந்த செயலை பார்த்து பல முறை வீட்டார்கள் கண்டித்துள்ளனர். அதுமட்டுமின்றி செல்போனை பிடுங்கி வைத்து கண்டித்துள்ளனர். ஆனால் இதற்கு எதிலும் அடிப்பணியாத சதீஷ்குமார் தொடர்ந்து விளையாட்டில் அடிமையாகி உள்ளார்.

விளையாட்டில் முழு ஆர்வம் காட்டிய மாணவர்

விளையாட்டில் முழு ஆர்வம் காட்டிய மாணவர்

மொபைல் விளையாட்டில் தொடர்ந்து வெற்றியை பெற்று வந்துள்ளார் சதீஷ்குமார், இந்த நிலையில் நேற்று அதாவது மே 19-ஆம் தேதி மதியமும் வழக்கம் போல் வீட்டுக்கு வெளியே செல்போன் விளையாட்டியுள்ளார். விளையாட்டில் ஆர்வமாக ஈடுபட்டு வந்த சதீஷ்குமார் திடீரென மிகவும் வியர்த்துப் போன நிலையில் மயங்கி விழுந்துள்ளார்.

மன அழுத்தம் காரணமாக உயிரிழப்பு

மன அழுத்தம் காரணமாக உயிரிழப்பு

இதை பார்த்த சதீஷ்குமார் குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். அதேபோல் அவர் அதிக மன அழுத்தம் காரணமாக திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என தெரிவித்திருக்கின்றனர். இந்த சம்பவம் பெரும்பாலானோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Best Mobiles in India

English summary
young died cardiac arrest who plays continously playing pubg

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X