சியோமி, ரெட்மி, போக்கோ போன் எது இருந்தாலும் சரி., Airtel சிம் இருந்தா உடனே இதை பண்ணுங்க!

|

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் வாடிக்கையாளர்களை பெரிதளவு கவர்ந்த ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் Xiaomi, Redmi மற்றும் Poco ஆகியவைகளுக்கு பிரதான இடம் உண்டு. இந்த மூன்று நிறுவனங்களும் பல்வேறு ஸ்மார்ட்போன்களைக் தங்களது 5ஜி போன் போர்ட்போலியோவில் கொண்டிருக்கிறது. இந்த நிறுவனங்களின் 5ஜி போன் கையில் வைத்திருக்கும் பயனர்களிடம் Airtel சிம் இருந்தால் உடனே 5ஜி சேவையை பயன்படுத்தத் தொடங்கலாம்.

Xiaomi, Redmi மற்றும் Poco

Xiaomi, Redmi மற்றும் Poco

Xiaomi, Redmi மற்றும் Poco நிறுவனங்களின் 5ஜி போன் வைத்திருக்கும் ஏர்டெல் பயனர்கள் இப்போதே 5ஜி சேவையை பயன்படுத்தத் தொடங்கலாம். இந்த ஸ்மார்ட்போன் நிறுவனங்கள், 5G ஆதரவை இயக்கும் வகையிலான OTA (ஓவர்-தி-ஏர்) அப்டேட்களை தங்களது போன்களுக்கு வெளியிடத் தொடங்கி இருக்கிறது. எனவே உங்களது ஸ்மார்ட்போனை அப்டேட் செய்யவில்லை என்றால் 5ஜி சேவையை இயக்க முடியாது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

5G சேவைக்கான அப்டேட்

5G சேவைக்கான அப்டேட்

இந்தியாவின் இரண்டாவது பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமாக இருக்கும் பாரதி ஏர்டெல், இதுவரை 25 நகரங்களில் தனது 5ஜி ப்ளஸ் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏர்டெல்லின் 5ஜி ப்ளஸ் சேவைகள் மார்ச் 2024க்குள் இந்தியா முழுவதையும் சென்றடையும் என நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஏர்டெல் நிறுவனம் அதன் 5ஜி சேவையை 5ஜி ப்ளஸ் என்ற பெயரில் வழங்குகிறது. பல ஸ்மார்ட்போன் பிராண்டுகள் ஏர்டெல் NSA நெட்வொர்க்குகளுடன் இணைந்து 5ஜி நெட்வொர்க்கை ஆதரிக்கும் வகையிலான அப்டேட்டை வெளியிட்டு வருகிறது. அதன்படி Redmi, Xiaomi மற்றும் Poco ஆகிய ஸ்மார்ட்போன்கள் தற்போது 5ஜி அணுகலுக்கான அப்டேட்டை வெளியிடத் தொடங்கி இருக்கிறது.

பாரதி ஏர்டெல் 5ஜி

பாரதி ஏர்டெல் 5ஜி

Xiaomi, Redmi மற்றும் Poco நிறுவனங்களின் பல ஸ்மார்ட்போன்கள் 5ஜி ஆதரவு கிடைக்கத் தொடங்கி இருக்கிறது. பாரதி ஏர்டெல் சிம் உங்களது போனில் இருந்தால் உடனே 5ஜி சேவையை அனுபவிக்கத் தொடங்கலாம். தற்போதுள்ள அனைத்து டேட்டா திட்டங்களிலும் Airtel 5G Plus சேவையை அனுபவிக்கலாம்.

ஏர்டெல் 5ஜி சேவை இருந்தால் போதும்

ஏர்டெல் 5ஜி சேவை இருந்தால் போதும்

ஏர்டெல் 5ஜி ப்ளஸ் சேவை கிடைக்கும் பகுதிகள் கொஞ்சம் கொஞ்சமாக விரிவுப்படுத்தப்பட்டு வருகிறது. உங்கள் பகுதிகளில் ஏர்டெல் 5ஜி சேவை கிடைத்து உங்கள் கையில் சியோமி, ரெட்மி மற்றும் போக்கோ ஸ்மார்ட்போன்கள் இருந்தால் தற்போதே 5ஜி சேவை பயன்படுத்த தொடங்கலாம்.

சியோமி போன் லிஸ்ட்

சியோமி போன் லிஸ்ட்

Xiaomi Mi 10
Xiaomi Mi 10i
Xiaomi Mi 10T
Xiaomi Mi 10T Pro
Xiaomi Mi 11 Ultra
Xiaomi Mi 11X Pro
Xiaomi Mi 11X
Xiaomi Mi 11 Lite NE
Xiaomi 11T Pro
Xiaomi 11i HyperCharge
Xiaomi 12 Pro
Xiaomi 11i

போக்கோ மற்றும் ரெட்மி

போக்கோ மற்றும் ரெட்மி

Poco M3 Pro 5G
Poco F3 GT
Poco M4 Pro 5G
Poco M4 5G
Poco F4 5G
Poco X4 pro

Xiaomi Redmi Note 11T 5G
Xiaomi Redmi 11 prime + 5G
Xiaomi Redmi K50i
Xiaomi Redmi Note 10T
Xiaomi Redmi Note 11 Pro Plus
Redmi Note 12 5G
Redmi Note 12 Pro 5G
Redmi Note 12 Pro+ 5G

ஜியோ மற்றும் ஏர்டெல்

ஜியோ மற்றும் ஏர்டெல்

தொலைத்தொடர்பு துறையில் முன்னணியில் இருக்கும் ஜியோ மற்றும் ஏர்டெல் 5ஜி சேவையை இலவசமாக தங்களது பயனர்களுக்கு வழங்கி வருகின்றன. பிஎஸ்என்எல் மற்றும் வோடபோன் ஐடியா (விஐ) இந்தியாவில் இன்னும் 5ஜி சேவையை அறிமுகப்படுத்தவில்லை. ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய இரண்டு நிறுவனங்களும் 2 மாதங்களுக்குள் 50 இந்திய நகரங்களில் 5ஜி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளன.

தயாராக இருப்பது நல்லது

தயாராக இருப்பது நல்லது

ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் தங்களின் 5ஜி இணைப்பை இந்தியா முழுவதும் வேகமாக பரப்பி வருகிறது. அக்டோபர் 1 ஆம் தேதி 5ஜி சேவைகள் தொடங்கப்பட்டதில் இருந்து இரண்டு நிறுவனங்களும் முணைப்போடு செயல்பட்டு வேகமாக 5ஜி சேவையை விரிவுப்படுத்தி வருகிறது. ஒவ்வொரு நாளும் 5ஜி சேவை கிடைக்கும் பகுதிகளை நிறுவனங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. எனவே 5ஜி சேவைக்கு அனைவரும் தயாராக இருப்பது நல்லது.

Best Mobiles in India

English summary
Xiaomi, Redmi, Poco Smartphone Users Now Can Use Airtel 5G Plus Service: How to Use it?

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X