ஒரே நேரத்தில் ஸ்மார்ட்போன், டிவி உள்ளிட்ட பல சாதனங்களுக்கு தள்ளுபடி வழங்கி தெறிக்கவிட்ட சியோமி.!

|

சியோமி நிறுவனம் Republic Day Sale எனும் சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது. இந்த சிறப்பு விற்பனையில் சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவி, டேப்லெட் உள்ளிட்ட பல சாதனங்களுக்குத் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

ஜனவரி 20-ம் தேதி வரை..

ஜனவரி 20-ம் தேதி வரை..

குறிப்பாக Mi.com தளத்தில் நடைபெறும் இந்த சிறப்பு விற்பனை ஜனவரி 16-ம் தேதி முதல் ஜனவரி 20-ம் தேதி வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த சிறப்பு விற்பனையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த சிறப்பு விற்பனையில் எக்ஸ்சேஞ்ச் சலுகையும் உள்ளது. இப்போது விலை குறைக்கப்பட்ட சில சாதனங்களின் பட்டியலைப் பார்ப்போம்.

புஹாஹாஹா.. வலையில் விழுந்த சீன கம்பெனி: இந்தியாவில் தயாரிக்கப் போகும் OnePlus போன்கள்புஹாஹாஹா.. வலையில் விழுந்த சீன கம்பெனி: இந்தியாவில் தயாரிக்கப் போகும் OnePlus போன்கள்

ரெட்மி 10

ரெட்மி 10

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ரேம் கொண்ட ரெட்மி 10 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.10,999-ஆக இருந்தது. தற்போது ரூ.2900 விலை குறைக்கப்பட்டு ரூ.8,099-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக கம்மி விலையில் ஒரு நல்ல ஸ்மார்ட்போனை தேடும் பயனர்கள் இந்த போனை வாங்குவது நல்லது.

50% பேர் porn வீடியோ பார்க்க காரணம் இதுதான்! மீதம் 50% இருக்காங்களே! ஆய்வு முடிவை பாருங்க புரியும்!50% பேர் porn வீடியோ பார்க்க காரணம் இதுதான்! மீதம் 50% இருக்காங்களே! ஆய்வு முடிவை பாருங்க புரியும்!

 ரெட்மி கே50ஐ

ரெட்மி கே50ஐ

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரெட்மி கே50ஐ ஸ்மார்ட்போன் ஆனது முன்பு ரூ.25,999-விலையில் விற்பனை செய்யப்பட்டது. தற்போது இந்த போனுக்கு ரூ.5,000 விலை குறைக்கப்பட்டு ரூ.20,999-விலையில் வாங்கக் கிடைக்கிறது. குறிப்பாக இந்த போன் தரமான சிப்செட் மற்றும் அசத்தலான கேமரா வசதியுடன் வெளிவந்துள்ளது.

மிட்-ரேன்ஜ் விலையில் ஒரு முரட்டு போன்! 5ஜி மொபைல் மார்க்கெட்டை 'ரூல்' பண்ண போகும் Samsung Galaxy A23 5G!மிட்-ரேன்ஜ் விலையில் ஒரு முரட்டு போன்! 5ஜி மொபைல் மார்க்கெட்டை 'ரூல்' பண்ண போகும் Samsung Galaxy A23 5G!

சியோமி 12 ப்ரோ

சியோமி 12 ப்ரோ

8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட சியோமி 12 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது முன்பு ரூ.62,999-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது இந்த போனுக்கு ரூ.18000 விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை ரூ.44,999-விலையில் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தேதி குறிச்சாச்சு: பட்ஜெட் விலையில் புதிய 5G போனை இந்தியாவில் அறிமுகம் செய்து இறங்கியடிக்கும் iQOO.!தேதி குறிச்சாச்சு: பட்ஜெட் விலையில் புதிய 5G போனை இந்தியாவில் அறிமுகம் செய்து இறங்கியடிக்கும் iQOO.!

32-இன்ச் சியோமி ஸ்மார்ட் டிவி 5ஏ

32-இன்ச் சியோமி ஸ்மார்ட் டிவி 5ஏ

பிரபலமான 32-இன்ச் சியோமி ஸ்மார்ட் டிவி 5ஏ ஸ்மார்ட் டிவிக்கும் இந்த சிறப்பு விற்பனையில் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது இந்த 32-இன்ச் சியோமி ஸ்மார்ட் டிவி 5ஏ ஸ்மார்ட் டிவி ஆனது முன்பு ரூ.13,999-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது இந்த ஸ்மார்ட் டிவிக்கு ரூ.4100 விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை இப்போது ரூ.9,899-விலையில் வாங்க முடியும்.

சியோமி ஸ்மார்ட் டிவி எக்ஸ்43

சியோமி ஸ்மார்ட் டிவி எக்ஸ்43

சியோமி நிறுவனம் அறிவித்துள்ள இந்த சிறப்பு விற்பனையில் 43-இன்ச் சியோமி ஸ்மார்ட் டிவி எக்ஸ்43 மாடலுக்கும் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது இந்த சியோமி ஸ்மார்ட் டிவி எக்ஸ்43 மாடலின் விலை முன்பு ரூ.28,999-ஆக இருந்தது. தற்போது இந்த டிவிக்கு ரூ.4,000-விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை இப்போது ரூ.24,999-விலையில் வாங்க முடியும்.

வாங்குனா இந்த Phone-ஐ வாங்கணும்! எதிர்பார்க்காத விலையில் புது 5G மாடலை இறக்கிவிட்ட Samsung.. ஜன.18-ல் விற்பனை!வாங்குனா இந்த Phone-ஐ வாங்கணும்! எதிர்பார்க்காத விலையில் புது 5G மாடலை இறக்கிவிட்ட Samsung.. ஜன.18-ல் விற்பனை!

32-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் டிவி

32-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் டிவி

ரெட்மி ஸ்மார்ட் டிவி 32 எச்டி ரெடி மாடல் ஆனது முன்பு ரூ.13,999-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது இந்த டிவிக்கு ரூ.5000 தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை இப்போது ரூ.8,999-க்கு வாங்க முடியும்.

சியோமி பேட் 5

சியோமி பேட் 5

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட சியோமி பேட் 5 மாடல் ஆனது முன்பு ரூ.26,999-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது ரூ.2500 விலைகுறைக்கப்பட்டு ரூ24,499-க்கு வாங்க கிடைக்கிறது. அதேபோல் 3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரெட்மி பேட் மாடல் ஆனது முன்பு ரூ.21,999-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது இந்த மாடலுக்கு ரூ.8,500 விலைகுறைக்கப்பட்டு ரூ.13,499-க்கு வாங்க கிடைக்கிறது.

மேலும் சியோமி ஸ்மார்ட் பேண்ட் ப்ரோ,Xiaomi Smart Air Fryer, Xiaomi Notebook Pro 120G உள்ளிட்ட பல சாதனங்களுக்கு தள்ளுபடிவழங்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Xiaomi announces Republic Day Sale: Discounts were given on many devices including smartphones, smart TVs: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X