திருட்டு பயம் இனி இல்ல..உங்க வீட்டில் 360° டிகிரியும் பாதுகாப்பு! புது Xiaomi ஹோம் செக்யூரிட்டி கேமரா 2i

|

Xiaomi நிறுவனம் இந்தியச் சந்தையில் புதிதாக ஒரு ஹோம் செக்யூரிட்டி கேமரா டிவைஸை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய செக்யூரிட்டி கேமரா, சியோமி 360° ஹோம் செக்யூரிட்டி கேமரா 1080p 2i (Xiaomi 360° Home Security Camera 1080p 2i) என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உண்மையைச் சொல்லப் போனால், இந்த பெயர் உங்களுக்கு மிகவும் நீளமாக இருப்பதாகத் தோன்றலாம், ஆனால் கேமராவின் முழுப்பெயர் அதுதான். இந்த டிவைஸ் பற்றிய சிறப்பம்ச விபரங்களை இப்போது பார்க்கலாம்.

சியோமியின் புதிய ஹோம் செக்யூரிட்டி டிவைஸ்

சியோமியின் புதிய ஹோம் செக்யூரிட்டி டிவைஸ்

இந்தியப் பயனர்களைக் கருத்தில் கொண்டு சியோமி நிறுவனம் இந்த ஹோம் செக்யூரிட்டி (Home Security) டிவைஸை மலிவு விலையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த டிவைஸ் சியோமி இன் பழைய ஹோம் செக்யூரிட்டி கேமராவின் மேம்படுத்தப்பட்ட மாடலாக புதிய புதுப்பிப்புடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சியோமி இப்போது அறிமுகம் செய்துள்ள, இந்த புதிய டிவைஸ் பார்ப்பதற்கும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானதாக தெரிகிறது. ஆனால், அம்சங்களில் தெளிவான மாற்றம் தெரிகிறது.

Xiaomi 360° Home Security Camera 1080p 2i விலை என்ன?

Xiaomi 360° Home Security Camera 1080p 2i விலை என்ன?

Xiaomi 360° Home Security Camera 1080p 2i சாதனம் இந்தியாவில் இப்போது ரூ. 2,999 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த டிவைஸை சியோமி நிறுவனம் அறிமுகம் செய்த போது, உற்பத்தியின் அசல் விலையை வெளியிடவில்லை என்பது கவனிக்கத்தக்கது. உண்மையான விலையை மறைத்து, வெளியீட்டு நேரத்தில் அனைத்து நல்ல மதிப்புரைகளையும் பெறுவதற்கு நிறுவனங்களின் வழக்கமான தந்திரம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

அடேங்கப்பா! Gmail இல் இப்படி 5 அம்சங்கள் இருக்கா? Send செய்த மெயிலை Undo செய்வது எப்படி?அடேங்கப்பா! Gmail இல் இப்படி 5 அம்சங்கள் இருக்கா? Send செய்த மெயிலை Undo செய்வது எப்படி?

புதிய ஹோம் செக்யூரிட்டி டிவைஸை நாம் எங்கு வாங்கலாம்?

புதிய ஹோம் செக்யூரிட்டி டிவைஸை நாம் எங்கு வாங்கலாம்?

இந்த புதிய ஹாம் செக்யூரிட்டி டிவைஸை நாம் எங்கு வாங்கலாம்? சியோமி வெளியிட்ட தகவலின் படி, இந்த கம்மி விலை செக்யூரிட்டி கேமராவை நீங்கள் Amazon, Flipkart, Mi.com, Mi Homes மற்றும் சில்லறை விற்பனைக் கடைகள் வழியாக வாங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஹோம் செக்யூரிட்டி டிவைஸ் 2MP கேமராவுடன் வருகிறது. இது 1080p தரத்தில் வீடியோவை ரெக்கார்ட் செய்கிறது.

360° வியூவில் முழு பாதுகாப்பு

360° வியூவில் முழு பாதுகாப்பு

இரவு நேரத் துல்லிய கண்காணிப்பிற்காக இதில் இரண்டு IR LED உடன் கூடிய நைட் மோட் வீடியோ ரெக்கார்டிங் அம்சத்தையும் இந்த டிவைஸ் ஆதரிக்கிறது. இது முழு 360° வியூவில் நேராகவும் 108° செங்குத்தாகவும் திரும்பக் கூடியது. இந்த புதிய ஹோம் செக்யூரிட்டி கேமரா AI ஹியூமன் ரெகக்னிஷன் அம்சத்துடன் வருகிறது. இது உங்கள் வீட்டில் உள்ள நபர்களை எளிதாக அடையாளம் காண்கிறது, இதன் மூலம் தெரியாத நபர்கள் மட்டும் வீட்டிற்குள் வரும் போது எச்சரிக்கை நோட்டிபிகேஷனை உரிமையாளருக்கு அனுப்புகிறது.

Snapdragon 8+ Gen 1 சிறந்ததா? அல்ல Snapdragon 8 Gen 1 சிறப்பானதா? எந்த சிப்செட் போன் வாங்கினா பெஸ்ட்?Snapdragon 8+ Gen 1 சிறந்ததா? அல்ல Snapdragon 8 Gen 1 சிறப்பானதா? எந்த சிப்செட் போன் வாங்கினா பெஸ்ட்?

மொபைல் மூலம் கேமராவை கட்டுப்படுத்த முடியுமா?

மொபைல் மூலம் கேமராவை கட்டுப்படுத்த முடியுமா?

இந்த அம்சத்தின் முக்கிய நோக்கம் ஃபால்ஸ் அலாரங்களை குறைக்க உதவுகிறது. இது 2-way கால்லிங் அம்சத்தையும் கொண்டுள்ளது. சியோமியின் இந்த ஹோம் செக்யூரிட்டி 2i கேமரா Xiaomi camera viewer app இணக்கத்துடன் வருகிறது. இந்த ஆப்ஸ் உங்களுக்கான கூடுதல் கட்டுப்பாடை வழங்குகிறது. Xiaomi 360° Home Security Camera 1080p 2i கேமராவிற்கான சியோமி கேமரா வியூவர் ஆப்ஸ் ஒரு ரிமோட் போலச் செயல்படுகிறது. இது கேமராவை மொபைல் மூலம் கட்டுப்படுத்த உதவுகிறது.

சியோமி மொபைல் ஆப்ஸ் மூலம் இவ்வளவு விஷயங்களை செய்யலாமா?

சியோமி மொபைல் ஆப்ஸ் மூலம் இவ்வளவு விஷயங்களை செய்யலாமா?

இந்த மொபைல் ஆப்ஸ் மூலமாக ஹோம் செக்யூரிட்டி கேமரா உரிமையாளர்கள் வீடியோ, ஸ்னாப்ஷாட் போன்ற பல அம்சங்களை ரெக்கார்ட் செய்ய அனுமதிக்கிறது. உங்கள் கேமரா ரெக்கார்டிங்கின் ஹிஸ்டரி பதிவுகளைச் சரிபார்த்து, பதிவான வீடியோக்களை பிளே செய்து பார்ப்பது போன்ற செயல்களையும் இது அனுமதிக்கிறது. இந்த புதிய ஹோம் செக்யூரிட்டி கேமரா உங்களுக்கு இரண்டு ஸ்டோரேஜ் விருப்பங்களைக் கிடைக்கிறது.

1 பிளான்.. 4 சிம் கார்டு..மொத்த பேமிலிக்கும் ஏகபோக நன்மை.. Jio-வின் 'இந்த' திட்டம் பற்றி தெரியுமா உங்களுக்கு?1 பிளான்.. 4 சிம் கார்டு..மொத்த பேமிலிக்கும் ஏகபோக நன்மை.. Jio-வின் 'இந்த' திட்டம் பற்றி தெரியுமா உங்களுக்கு?

மைக்ரோ SD மற்றும் NAS ஸ்டோரேஜ் உடன் 2 மாடல்

மைக்ரோ SD மற்றும் NAS ஸ்டோரேஜ் உடன் 2 மாடல்

அதன்படி, ஒரு மாடல் உங்களுக்கு மைக்ரோ SD கார்டு மூலம் இயங்கும் ஸ்டோரேஜை ஆதரிக்கிறது. மற்றொரு மாடல் NAS ஸ்டோரேஜ் விருப்பத்தை ஆதரிக்கிறது. NAS என்பது நெட்வொர்க் அட்டாச்டு ஸ்டோரேஜ் அம்சமாகும். இதில் மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் இயங்கும் மாடல் 64ஜிபி வரையிலான ஸ்டோரேஜை ஆதரிக்கிறது. NAS பதிவுகளைச் சேமிக்கும் நெட்வொர்க் இணைக்கப்பட்ட ஸ்டோரேஜ் சர்வர்கள் இந்தியாவிற்குள் இருப்பதாக Xiaomi தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Xiaomi 360 smart home camera 1080p 2i camera Launched in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X