இந்த Xiaomi போனுக்காக இன்னும் எவ்வளவு நாள் வெயிட் செய்யணும்? டைமிங் இது தானா?

|

புகழ்பெற்ற ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான சியோமி (Xiaomi) தனது புதிய அறிமுகங்களான சியோமி 13 சீரிஸை (Xiaomi 13 Series) சீனாவில் ஆரம்பிக்க உள்ளது. அடுத்த மாதம் உலக அளவில் இந்த ஸ்மார்ட் போன்கள் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சியோமி 13 (Xiaomi 13) மற்றும் சியோமி 13 ப்ரோ (Xiaomi 13 Pro) என்று இரண்டு வேரியண்டுகள் மட்டுமே இந்த சியோமி 13 ஸ்மார்ட் போன் சீரிஸில் அறிமுகமாகும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், சியோமி 13 அல்ட்ரா (Xiaomi 13 Ultra) என்ற இன்னொரு மாடலும் அறிமுகமாக இருப்பதாக வதந்திகள் பரவி வருகின்றன.

இந்த Xiaomi போனுக்காக இன்னும் எவ்வளவு நாள் வெயிட் செய்யணும்?

இதனை உறுதி செய்யும் வகையில், சியோமி நிறுவனத்தின் CEO சமீபத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில், சியோமி 13 அல்ட்ரா என்ற ஸ்மார்ட் போனை நிறுவனம் இந்த சியோமி 13 சீரிஸில் அறிமுகம் செய்யப் போவதாகவும், சீன மற்றும் உலக சந்தையில் இந்த ஸ்மார்ட் போன் முக்கிய இடத்தை பிடிக்கவுள்ளது என்றும் சியோமி CEO லீ ஜுன் (Lie Jun) தெரிவித்துள்ளார்.

இதை அடுத்து, இந்த சியோமி 13 அல்ட்ரா ஸ்மார்ட்போன் MWC நிகழ்ச்சியில் அறிமுகமாக இருப்பதாகப் பல வதந்திகள் கிளம்பி வந்தன. அதேசமயம், பிரபலமான டிப்ஸ்டர் (Tipster) டிஜிட்டல் சேட் ஸ்டேஷன் (Digital Chat Station) அதற்கு எதிர்மறையான தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் கூறும்போது, சீனாவின் புத்தாண்டு வரும் ஜனவரி 22 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

அந்த புத்தாண்டை முன்னிட்டு ஸ்மார்ட்போன் சந்தையில் ஓப்போ ஃபைன்ட் X6 (Oppo Find X6) மற்றும் ஹானர் மேஜிக் 5 சீரிஸ் (Honor Magic 5 Series) அறிமுகமாக இருக்கிறது என்று தெரிவித்தார். ஆனால் சீனாவின் புத்தாண்டு கொண்டாட்டம் வெகுநாட்கள் நடைபெறும் என்பதால் பிப்ரவரி மாதத்தின் இறுதியில் இவ்விரண்டு ஸ்மார்ட் போன்களும் சந்தையில் அறிமுகமாகலாம் என்று அவர் கூறினார்.

இந்த Xiaomi போனுக்காக இன்னும் எவ்வளவு நாள் வெயிட் செய்யணும்?

மேலும் அவர் வெளியிட்ட பதிவில் சியோமி 13 அல்ட்ரா ஸ்மார்ட் போனின் அறிமுகம் இப்போது இல்லை என்பது போல கூறியுள்ளார். மொபைல் வேர்ல்ட் கான்ஃபரன்ஸ் (Mobile World Conference) என்ற ஸ்மார்ட்போன் தொடர்பான கூட்டம் பிப்ரவரி இறுதியில் நடக்கவிருக்கிறது. அந்த MWC-யில் சியோமி 13 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

சியோமி 13 மற்றும் சியோமி 13 ப்ரோவின் அறிமுகம் உறுதியான நிலையில், இந்த சியோமி 13 அல்ட்ராவின் அறிமுகம் மட்டும் இப்போது வரை கேள்விக்குறியாகவே உள்ளது. சீனாவின் இணையதளங்களில் குறிப்பிட்டுள்ள செய்தி உண்மையாகும் நிலையில், சியோமி 13 அல்ட்ராவின் அறிமுகத்தை இப்போது எதிர்பார்க்க முடியாது.

மார்ச் மாதத்தின் இறுதியில் அல்லது ஏப்ரல் மாதத்தின் ஆரம்பத்தில் இந்த சியோமி 13 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகமாகலாம். ஆனால், இந்த ஸ்மார்ட் போன் அறிமுகம் ஆகும்பொழுது உலகம் முழுவதும் ஒரே சமயத்தில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இது இந்தியாவிற்கும் பொருத்தும்.

சியோமியின் இணையதளத்தில் கொடுத்துள்ள தகவலின்படி, சியோமி 13 அல்ட்ரா ஸ்மார்ட்போன் 1 இன்ச் சோனி IMX 989 கொண்ட 50 மெகா பிக்சல் முதன்மை கேமராவுடன் (Sony IMX989 50 MP Primary Camera) சேர்த்து நான்கு பின் பக்க கேமராக்களுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 ப்ராசஸர் (Snapdragon 8 Gen 2 Processor), 16 GB எல்பிடிடிஆர் 5எக்ஸ் ரேம் (LPDDR5X RAM), 500 GB அல்லது 1 TB UFS 4.0 ஸ்டோரேஜ் (Storage) ஆகிய அம்சங்களுடன் வரும் என்று கூறப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Xiaomi 13 Ultra Smartphone Will Launch Later Than Expected On Global Mobile Market

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X