மருத்துவமனைகளில் விதவிதமான கட்டணங்கள் குற்றஞ்சாட்டும் பெண்! காரணம் என்ன?

|

இரண்டு தனியார் மருத்துவமனைகளால் தனக்கு ஏற்பட்ட துன்பத்தை சமூக வலைதளத்தில் பகர்ந்த இந்திய பெண்ணின் பதிவு தற்போது வைரல் ஆகி, அதிக கட்டணம் வசூலித்த மருத்துவமனைகளை பற்றிய விவாதத்தை கிளிப்பியுள்ளது.

மருத்துவமனைகளை குற்றஞ்சாட்டும் பெண்! காரணம் என்ன?

அட்லாண்டாவில் வசிக்கும் இந்தியாவை பூர்விகமாக கொண்ட பருல் பாசின் வர்மா பேஸ்புக் பதிவில் கூறியதாவது, 100 நாட்களுக்கு மேலாக எனது தாயார் ஐ.சி.யூவில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, செகந்திராபாத்தில் உள்ள யசோதா மருத்துவமனை, புதுடெல்லியில் உள்ள பிஎல் கபூர் மருத்துவமனை என்ற இரு தனியார் மருத்துவமனைகளும், ஒரு நாளைக்கு சராசரியாக ரூ1லட்சம் என சுமார் ரூ1.2கோடி கட்டணமாக கேட்டன.

பொதுமக்கள்

பொதுமக்கள்

பொதுமக்களிடம் இந்த தகவலை தெரிவித்து,அந்த மருத்துவமனைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வைப்பதை தவிர எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை. இந்த சமூகத்தின் உறுப்பினர்களான எங்களுக்கு பொதுமக்கள் தான் உதவ வேண்டும் என தனது நான்கு மாத துன்பத்தை பதிவிடுகிறார். மேலும் அந்த மருத்துவமனைகளில் விதவிதமான கட்டணங்கள் என்ற பெயரில் வழங்கப்பட்ட பல்வேறு இரசீதுகளின் புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார்.

 பேஸ்புக்

பேஸ்புக்

பேஸ்புக்கில் வைரலாக சென்ற இந்த பதிவு 50,000 தடவைகளுக்கு மேலாக பகிரப்பட்டுள்ளது.மேலும் சிலர் பரூலுக்கு நன்கொடை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். ஆனால் பரூல் கூறுகையில், என்னுடைய நோக்கம் பணம் இல்லை மற்றும் இதிலிருந்து மீண்டு வருவதும் சாத்தியமில்லை. எனது இந்த பதிவால் சமூகத்தில் ஒரு மாற்றம் ஏற்படும் என நம்புகிறேன். மற்றொரு குடும்பம் நாங்கள் அனுபவித்த நான்கு மாத நரக வேதனையை அனுபவிக்த கூடாது என்கிறார்.

அம்மோனியா தாக்குதல்

அம்மோனியா தாக்குதல்

டெல்லியில் உள்ள மருத்துவமனையில் இவரின் தாயார் அம்மோனியா தாக்குதல் மற்றும் சிறுநீரக பிரச்சனைகாக ஜனவரி2ல் அனுமதிக்கப்பட்டார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்பதை காரணம் காட்டி மருத்துவர்கள் அழரை ஜனவரி9ல் டிஸ்சார்ஜ் செய்தனர். உடனே அவரின் குடும்பம்,இணையதளம் வாயிலாக ஜோஸ்னா வர்மா என்ற சிறுநீரக மாற்று சிறப்பு மருத்துவர் ரூ11000 ஆலோசனை கட்டணமாக செலுத்தினர். அவரும் குறைந்த காலத்தில் மாற்று சிறுநீரகம் கிடைக்க வழிவகை செயவதாக உறுதியளித்தார்.

ஜனவரி16

ஜனவரி16

ஜனவரி16ல், செகந்திராபாத் யசோதா மருத்துவமனையில் இறந்த நோயாளியின் சிறுநீரகம் இருப்பதாக அவரின் அலுவலகத்தில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலுக்கு ரூ1லட்சம் கட்டணம் வசூலிக்கப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு கட்டணமாக ரூ23லட்சம் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் மருத்துவமனைக்கு சென்றபோது ரூ27லட்சம் எனக்கூறினர். ஆனால் அதே அறுவை சிகிச்சைக்கு பிறரிடம் பலவிதமாக கட்டணம் வசூலிக்கின்றனர். அவர்கள் அதிகபட்சம் எவ்வளவு வசூலிப்பார்கள் என தெரியவில்லை. ஏற்கனவே தினமும் ரூ1லட்சம் கட்டணம் செலுத்தி வந்தோம். அது போக தங்குவதற்கு, உணவு ,மருந்துகள் என தனியாக செலுத்தி நொடிந்து போனோம். இதற்கு அரசாங்கம் தக்க நடவடிக்கைகள் எடுத்து, உரிய கொள்கைகள் வகுக்க வேண்டும்.

ரூ60லட்சம்

ரூ60லட்சம்

மருத்துவமனைக்கு ரூ60லட்சம் செலுத்திய பின்பு, எனது தந்தையின் அனைத்து சேமிப்புகளை கரைத்து மேலும் அதிக கடன்களையும் பெற்றுள்ளார். பணம் செலுத்திய அடுத்த நாளே அவர் சுயநினைவுக்கு வந்து மீண்டு வர ஆரம்பித்தார் என கூறியுள்ளார். அதற்கு அடுத்த நாளே அவர் மீண்டு வர ஆரம்பித்தது சந்தேகமாகவே இருந்தது.ஆனால் ஐசியூவில் இருந்து டிஸ்சார்ஜ் செய்ய மருத்துவர்கள் கூறிய போது நாங்கள் மறுத்தபோதும் அவர்கள் அனுமதிக்கவில்லை.

ஏப்ரல்23

ஏப்ரல்23

வீட்டிற்கு அழைத்து வந்த சில நாட்களிலேயே அவரின் உடல்நிலை மோசமடைந்தது.அதற்கு மருத்துவர்கள் தங்களின் மருந்தகத்தில் மட்டுமே மருந்துகளை வாங்க வேண்டும் என கூறினர். அப்படி செய்யாததால், அனைத்து பரிசோதனைகளையும் மீண்டும் செய்ய வேண்டும் என கூறியதையும் ஒப்புக்கொண்டோம். ஏப்ரல் 20ல் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட எனது தாயாரை, டெல்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிறுநீரக தண்டு வைத்தால் மட்டுமே அதன் பரவலை கட்டுப்படுத்த முடியும் என இம்மருந்துவர்கள் கூறினர். ஆனால் ஏப்ரல்23 வரை அது தாமதமானால் உடல் முழுவதும் பரவியது.அதனால் எங்கள் தாயாரை இழந்தோம்.

அரசு

அரசு

எனவே மருத்துவமனைகளை ஒழுங்குமுறை படுத்த அரசு தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறார். ஆனால் இவற்றை யசோதா மருத்துவமனை மறுத்து, அதிக கட்டணங்கள் எதுவும் வசூலிக்கப்படவில்லை என கூறியுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
women accuses 2 hospitals of medical kidnapping overcharging for liver transplant: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more
X