முரட்டு OnePlus இதுதான்.. 7500mAh பேட்டரி.. 100W சார்ஜிங்.. 50MP கேமரா.. IP69K ரேட்டிங்.. எந்த மாடல்?
ஒன்பிளஸ் நிறுவனத்தின் முரட்டு மாடலாக ஒன்பிளஸ் 15டி (OnePlus 15T) ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. 7500mAh பேட்டரி, 100W ஃபாஸ்ட் சார்ஜிங், 50 எம்பி கேமரா, IP69கே ரேட்டிங் மட்டுமல்லாமல், இப்போது பிரீமியம் லுக் கொடுக்கும் மூன்று கலர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
சீன மார்கெட்டில் ஒன்பிளஸ் 15டி மாடலாக அறிமுகம் செய்யப்பட உள்ளது. குளோபல் மற்றும் இந்திய மார்கெட்டில் ஒன்பிளஸ் 15எஸ் மாடலாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால், முன்னதாக சீனாவில் வெளியான ஒன்பிளஸ் 13டி (OnePlus 13T) ஸ்மார்ட்போனானது, இந்தியாவில் ஒன்பிளஸ் 13எஸ் (OnePlus 13s) மாடலாக வெளியாகியது.

ஆகவே, இந்தியாவில் வெளியாக இருப்பதும் கிட்டத்தட்ட உறுதிதான். இருப்பினும், சீனாவில் வெளியாகும்போது, முன்கூட்டியே பீச்சர்கள் மற்றும் விலையை தெரிந்து கொள்ளலாம். இதனாலேயே சீன மார்கெட்டில் அடிக்கடி வெளியாகும் இந்த ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போனின் பீச்சர்கள் இந்தியாவிலும் கவனம் பெற்று வருகின்றன. இப்போது, கலர்கள் உறுதியாகி இருக்கின்றன.
ப்யூர் கோகோ (Pure Cocoa), ரிலாக்ஸிங் மேச்சா (Relaxing Matcha) மற்றும் ஹீலிங் ஒயிட் சாக்லேட் (Healing White Chocolate) ஆகிய கலர்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. 6.32 இன்ச் பிளாட் டிஸ்பிளே டிசைனில் மினி ஸ்மார்ட்போன் மாடலாக இருக்கிறது. ஒன்-ஹேண்ட் யூஸ் மாடல்களை விரும்பும் ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு பக்காவாக இருக்கிறது. 1.1 எம்எம் பெசல்களுடன் இருக்கிறது.
மெட்டல் கியூப் (Metal Cube) கேமரா டெக்கோ கிடைத்து உள்ளது. ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போனை போலவே டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) கொடுத்து உள்ளது. ப்யூர் கோகோ வேரியண்ட்டானது, சாலிட் பிரவுண் கலரில் கிடைக்க இருக்கிறது. ரிலாக்ஸிங் மேச்சா வேரியண்டடில் கிரீன் ஷேடை பார்க்க முடிகிறது. மேலும், மோனோகுரோமேட்டிக் (Monochromatic) ஒயிட் உள்ளது.

ஹீலிங் ஒயிட் சாக்லேட் வேரியண்ட்டில் இந்த ஒயிட் கிடைக்கிறது. இந்த ஒயிட் எடிஷன் புதிய வேரியண்ட்டாக இருப்பதால், ஒன்பிளஸ் பிரியர்களிடையே எதிர்பார்ப்பை கிளப்பிவிட்டு உள்ளது. இந்த டிசைன் மற்றும் கலர் விவரங்களே லேட்டஸ்ட் பீச்சர்களாக இருக்கிறது. முன்னதாக வெளியாக பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஒன்பிளஸ் 15டி முக்கிய அம்சங்கள்
1. முரட்டு டியூரபிலிட்டி மாடலாக இருக்கும்படி IP66 ரேட்டிங், IP68 ரேட்டிங் மற்றும் IP69 ரேட்டிங் மட்டுமல்லாமல், IP69K ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் கொண்டுள்ளது.
2. 6.32 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவை கொடுத்து உள்ளது. 1.5K ரெசொலூஷன் மற்றும் 165 Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைத்து உள்ளது. பிளாட் டிஸ்பிளே டிசைனில் கிடைக்க உள்ளது.
3. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொடுத்து உள்ளது. ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 (Snapdragon 8 Elite Gen 5) சிப்செட் கிடைக்கிறது. 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொடுக்கிறது.
4. 100W வயர்டு சார்ஜிங் கொண்ட 7500mAh பேட்டரி கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், 50W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட மாடலாகவும் இந்த ஒன்பிளஸ் 15டி இருக்கிறது.
5. பெரிய பேட்டரி இருப்பதால் 8.4 எம்எம் தடிமன் கொடுத்து உள்ளது. இருப்பினும், 194 கிராம் எடை மட்டுமே வருகிறது. காம்பாக்ட் மாடலாக இந்த 15டி மாடலை எதிர்பார்க்கலாம்.
6. 50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி லூமோ டெலிபோட்டோ கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் உள்ளது. மேலும், சோனி எல்ஒய்டி700 (Sony LYT700) சென்சார் உள்ளது.
7. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) மற்றும் 3.5X இன்-சென்சார் ஜூமிங் கிடைக்கிறது. 32 எம்பி செல்பீ ஷூட்டரை பெற்று கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








