iPhone கேமரா உடைந்தால் என்ன செய்வது? இது தெரியாம சர்வீஸ் கொடுத்தா பணம் போய்விடும்.!

|

உங்களுடைய ஐபோன் கேமரா (iPhone camera) லென்ஸ் உடைந்து விட்டதா? அல்லது கைநழுவி உங்களுடைய iPhone கீழே விழுந்து, கேமராவில் ஏதேனும் கோளாறு காண்பிக்கிறதா? அப்படியானால், இந்த பதிவு உங்களுக்கானது தான். இது போன்ற சிக்கலை நீங்கள் மட்டுமல்ல, உலக அளவில் உள்ள ஐபோன் பயனர்கள் பலரும் சந்தித்து வருகின்றனர் என்பதே உண்மையாகும். இப்படிப்பட்ட, சிக்கலை நீங்கள் சந்தித்தால், என்ன செய்ய வேண்டும்? என்பதை தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.

ஐபோன் கேமராவில் கோளாறா? அப்படியானால் என்ன செய்ய வேண்டும்?

ஐபோன் கேமராவில் கோளாறா? அப்படியானால் என்ன செய்ய வேண்டும்?

உங்களுடைய ஐபோன் கேமராவில் ஏற்பட்ட கோளாறுகளை (iPhone camera issues) எளிதில் சரி செய்ய நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது இங்கே.

உங்கள் ஐபோன் கேமராவில் கோளாறு ஏற்பட்டால், நீங்கள் செய்ய வேண்டிய முதல் விஷயம் அது சாப்ட்வேர் பிரச்சனையா? (iPhone software issue) அல்லது ஹார்ட்வேர் பிரச்சனையா? (iPhone hardware issue) என்பதை ஆராய வேண்டும்.

இதை தெரிந்து கொண்டால், அடுத்து நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது மிகவும் தெளிவாக தெரிந்துவிடும்.

ஐபோன் கேமரா செயல்படாமல் இருக்க என்ன காரணம்?

ஐபோன் கேமரா செயல்படாமல் இருக்க என்ன காரணம்?

நீங்கள் ஒரு லக்கி பெர்ஸன் (lucky person) என்றால், உங்கள் ஐபோன் சாப்ட்வேர் கோளாறுடன் மட்டும் தப்பித்திருக்க வாய்ப்புள்ளது. இப்படிப்பட்ட சாப்ட்வேர் கோளாறுகளை சில சாப்ட்வேர் அப்டேட் (iPhone software update) மூலம் நாமே சரி செய்து கொள்ளலாம்.

ஆனால், உங்களுடைய ஐபோனிற்கு நேரம் சரியாக இல்லை என்றால், அது சில ஹார்டுவேர் சிக்கலை சந்தித்திருக்க வாய்ப்புள்ளது. இதன் காரணமாக உங்கள் ஐபோன் கேமரா செயல்படாமல் போயிருக்கலாம்.

இப்படி செஞ்சா உங்கள் Mobile Apps யார் கண்ணுக்கும் தெரியாது.! சீக்ரெட் மெயின்டைன் செய்ய டிப்ஸ்.!இப்படி செஞ்சா உங்கள் Mobile Apps யார் கண்ணுக்கும் தெரியாது.! சீக்ரெட் மெயின்டைன் செய்ய டிப்ஸ்.!

இந்த கோளாறுகளில் ஏதேனும் ஒன்று உங்கள் ஐபோன் கேமராவில் தோன்றுகிறதா?

இந்த கோளாறுகளில் ஏதேனும் ஒன்று உங்கள் ஐபோன் கேமராவில் தோன்றுகிறதா?

இந்த இரண்டு வெவ்வேறு காரணங்களால் மட்டுமே, உங்களுடைய ஐபோன் கேமரா செயல்படாமல் இருக்க அதிக வாய்ப்புள்ளது.

உங்களுடைய ஐபோன் கேமரா ப்ளர் லென்ஸ் (blur lens), ப்ரோக்கன் ஃப்ளாஷ் (broken flash), ப்ளாக் ஸ்கிரீன் (black screen) அல்லது கேமரா ஆப் ப்ரீஸ் (camera app freeze) போன்ற சிக்கல்களை காண்பிக்கிறது என்றால், இது கட்டாயம் சாப்ட்வேர் கோளாறு ஆகும்.

இதை நீங்கள் மிகவும் எளிதாக உங்கள் கைப் பக்குவத்திலேயே சரி செய்து கொள்ளலாம்.

ஐபோன் கேமராவில் மங்கலான உருவம் தெரிந்தால் என்ன செய்வது?

ஐபோன் கேமராவில் மங்கலான உருவம் தெரிந்தால் என்ன செய்வது?

ஒருவேளை நீங்கள் எடுக்கும் முயற்சியின் மூலம், உங்கள் ஐபோன் கேமரா சரி செய்யப்படவில்லை என்றால், நீங்கள் அருகில் இருக்கும் சர்வீஸ் சென்டருக்கு தான் செல்ல வேண்டும்.

இது ஏதேனும் ஹார்டுவேர் சிக்கலாக இருக்க வாய்ப்புள்ளது. சரி, உங்கள் போனில் சாப்ட்வேர் கோளாறு இருந்தால் அதை எப்படி சரி செய்வது என்று பார்க்கலாம்.

ஒருவேளை உங்களை ஐபோன் கேமராவில் மங்கலான உருவம் தெரிந்தால், நீங்கள் செய்ய வேண்டியது என்ன என்பது இங்கே.

வாத்தி கம்மிங்.. என்னது இது பார்முலா இல்லையா? போன் நம்பரா? முடுஞ்சா கண்டுபிடிங்க பார்க்கலாம்.!வாத்தி கம்மிங்.. என்னது இது பார்முலா இல்லையா? போன் நம்பரா? முடுஞ்சா கண்டுபிடிங்க பார்க்கலாம்.!

இப்படி செய்தால் மங்கலான ஐபோன் கேமரா கோளாறு சரி செய்யப்படுமா?

இப்படி செய்தால் மங்கலான ஐபோன் கேமரா கோளாறு சரி செய்யப்படுமா?

- ஒரு மைக்ரோ பைபர் துணியை வைத்து கேமரா லென்ஸை துடைக்கவும்.
- பெரும்பாலும் இந்த கோளாறு போக்கஸ் செய்யும் லூப்பில் ஏற்பட்ட சாப்ட்வேர் கோளாறாக இருக்க வாய்ப்புள்ளது.
- இதை சரி செய்ய ஒரு முறை உங்கள் ஐபோனை ரீ-ஸ்டார்ட் செய்தாலே போதுமானது.
- உங்களை ஐபோன் இன் பிளாஷ் உடைக்கப்பட்டிருந்தால், அதை சரி செய்ய, உங்கள் ஐபோனின் கண்ட்ரோல் சென்டர் சென்று, பிளாஷ் லைட் மோட் ஆன் செய்யவும்.

கேமரா ஆன் செய்ததும் பிளாக் ஸ்கிரீன் தெரிகிறதா?

கேமரா ஆன் செய்ததும் பிளாக் ஸ்கிரீன் தெரிகிறதா?

- இரண்டு அல்லது மூன்று முறை ஆப் செய்து ஆன் செய்தால் இந்த கோளாறு சரி செய்யப்படும்.
- அப்படி சரியாகவில்லை என்றால், அது ஹார்ட்வேர் கோளாறாக இருக்கும்.
- உங்கள் போன் கேமரா ஆப்ஸை திறந்ததும், கேமரா ஃப்ரீசாகிறது (Freeze) என்றால், உங்கள் iOS சாப்ட்வேரை அப்டேட் செய்வதன் மூலம் இதை சரி செய்ய முடியும்.
- ஒருவேளை உங்கள் போன் டிஸ்ப்ளேயில் கேமரா ஆன் செய்ததும் பிளாக் ஸ்கிரீன் தெரிகிறது என்றால் உங்கள் போனை ரீஸ்டார்ட் (Restart) செய்யவும்.

WhatsApp மெசேஜ்ஜை அடுத்தவருக்கு தெரியாமல் படிப்பது எப்படி? இந்த சீக்ரெட் மோட்-ஐ ON செய்யுங்க.!WhatsApp மெசேஜ்ஜை அடுத்தவருக்கு தெரியாமல் படிப்பது எப்படி? இந்த சீக்ரெட் மோட்-ஐ ON செய்யுங்க.!

இந்த விஷயங்கள் தெரிந்தால் கட்டாயம் ஹார்ட்வேர் சிக்கல் தான்.!

இந்த விஷயங்கள் தெரிந்தால் கட்டாயம் ஹார்ட்வேர் சிக்கல் தான்.!

- இரண்டு அல்லது மூன்று முறை பிரண்ட் கேமரா மற்றும் பேக் கேம் மோட் மாற்றத்தை மாற்றம் செய்யவும்.

- அல்லது iOS அப்டேட்டை அப்டேட் செய்யவும்.


- ஒருவேளை இந்த அனைத்து விஷயங்களையும் பின்பற்றிய பிறகும் உங்கள் ஐபோன் கேமரா வேலை செய்யவில்லை என்றால்..

உங்கள் ஐபோன் ஏதோ ஒரு ஹார்ட்வேர் கோளாறால் தான் திணறிக் கொண்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

பணம் வீணாகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

பணம் வீணாகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

இதை சரி செய்ய நீங்கள் கட்டாயம் ஒரு ஆப்பிள் சர்வீஸ் சென்டரை நாட வேண்டியது அவசியம். எப்போதும் ஆப்பிள் நிறுவனத்தால் சர்டிஃபைட் செய்யப்பட்ட ஆப்பிள் ஸ்டோர்களில் போன்களை சர்வீஸ் செய்வது மிகவும் சிறப்பானது.

வானில் தோன்றிய விசித்திரமான உருவம்.! மொத்த ஊரும் ஆன்னு அண்ணாந்து பார்த்த அதிசயம்.!வானில் தோன்றிய விசித்திரமான உருவம்.! மொத்த ஊரும் ஆன்னு அண்ணாந்து பார்த்த அதிசயம்.!

ஏனெனில் இங்குதான் உங்கள் போன்னுக்கான சரியான ஒரிஜினல் பாகங்கள் கிடைக்கும் என்பதை மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்.

எப்போதும், ஐபோனை சர்வீஸ் கொடுப்பதற்கு முன்பு இதுபோன்ற சில சாப்ட்வேர் கோளாறுகளை நீங்களே சரி செய்துகொண்டால், பணம் வீணாகாது.

Best Mobiles in India

English summary
What to do if your iPhone camera is broken

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X