உலகத்தில அதிக பேர் டவுன்லோட் செஞ்ச டாப் 10 ஆப்லைன் கேம்ஸ் இதுவே.! முத்து போல பத்து கேம்.!

|

சிறியவர் முதல் பெரியவர் வரை மொபைல் கேம் (mobile games) என்றாலே அனைவருக்கும் பிடித்தமான ஒரு விஷயமாகும். சிலர் ஆன்லைனில் கேம் (online games) விளையாட அதிகம் விருப்பப்படுவர் - குறிப்பாக, இளசுகள் பப்ஜி (PUBG), cod, பிரீ பையர் (Free Fire) போன்ற ஆன்லைன் கேம்களை விளையாடவே அதிகமாக ஆர்வம் காட்டுகின்றனர். என்ன தான் ஆன்லைனில் கேம் விளையாடினாலும், டேட்டா இருக்கும் வரை தான் ஆன்லைன் கேம்கள் கெத்து. டேட்டா இருப்பு காலியாகிவிட்டால் உங்களால் கேம் விளையாட முடியாது.

ஆஃப்லைன் கேம் தான் உண்மையிலேயே கெத்து தெரியுமா?

ஆஃப்லைன் கேம் தான் உண்மையிலேயே கெத்து தெரியுமா?

ஆனால் உண்மையில் கெத்து யார் தெரியுமா? ஆப்லைன் கேம்கள் தான். காரணம், இதற்கு டேட்டாவை தேவையில்லை.!

நீங்கள் எப்போது வேண்டுமானாலும்; என்ன நேரத்தில் வேண்டுமானாலும், உங்கள் ஸ்மார்ட் ஃபோனை ஓப்பன் செய்து சட்டென்று கிளிக் செய்து தாராளமாக இந்த கேம்களை விளையாடலாம்.

அப்படி உலகம் முழுக்க அதிக மக்களால் டவுன்லோட் செய்யப்பட்ட டாப் 10 ஆஃப்லைன் கேம்ஸ் பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

முத்து போல பத்து சூப்பர் ஆப்லைன் கேம்ஸ்கள் இதோ.!

முத்து போல பத்து சூப்பர் ஆப்லைன் கேம்ஸ்கள் இதோ.!

முத்து போல பத்து சூப்பர் ஆப்லைன் கேம்ஸ்களின் விபரங்களை பார்க்கலாம் வாருங்கள்.

இந்தப் பட்டியலில் உள்ள அனைத்து கேம்ஸ்களும் அடிப்படை ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போனில் கூட இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்களிடம் என்ன ஒரு ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் இருந்தாலும் சரி, இந்த கேம்கள் சிறப்பாகச் செயல்படும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

தயக்கம் இல்லாமல் ஒரு முறை இவற்றை ட்ரை செய்து விளையாடிப் பாருங்கள்.

1. கவர் ஃபயர் (Cover Fire)

பப்ஜி, பிரீ பையர் போன்ற அனுபவத்தை வழங்கும் ஆஃப்லைன் கேம் தான் இந்த கவர் பையர் கேம். இது ஆண்ட்ராய்டு வெர்ஷன் 8.0 மற்றும் அதற்கு மேல் உள்ள சாதனங்களில் சிறப்பாக செயல்படும். இதில் ஸ்னைப்பர், கார்கள், ஹெலிகாப்டர் என்று பலவிதமான ஸ்டேஜ்களில் நீங்கள் எதிரிகளைச் சூறையாடலாம்.

2. ஷேடோ ஆஃப் டெத் (Shadow Of Death)

ஆக்சன் நிறைந்த ஒரு கேம் உங்களுக்கு வேண்டும் என்றால், நீங்கள் இன்ஸ்டால் செய்ய வேண்டிய முதல் கேம் இதுதான். மான்ஸ்டர்களையும், அரக்கர்களையும் சூறையாடும் ஹீரோக்களை கொண்ட ஆஃப்லைன் கேம் தான் இந்த ஷேடோ ஆஃப் டெத். இந்த கேம் ஆண்ட்ராய்டு வெர்ஷன் 5.0 மற்றும் அதற்கு மேல் கொண்ட சாதனங்களில் விளையாடக் கிடைக்கிறது.

3. மார்ஸ்: மார்ஸ் (Mars: Mars)

உண்மையில் உங்கள் நேரத்தைச் சரியாகக் கவர் செய்யச் சிறந்த கேம் இந்த மார்ஸ்: மார்ஸ் ஆகும். இதன் பெயர் குறிப்பிடுவது போல இந்த கேமின் தளம் செவ்வாய் கிரகத்தில் இருப்பது போல் அமைக்கப்பட்டுள்ளது.

நீங்கள் தான் அங்குச் செல்ல போகும் அஸ்ரோநாட்.! நூற்றுக்கும் மேற்பட்ட ஸ்டேஜ்களுடன் இந்த கேம் ஆண்ட்ராய்டு வெர்ஷன் 5.0 மற்றும் அதற்கு மேல் கொண்ட சாதனங்களில் சிறப்பாக எடுக்கும்.

4. டிராபிக் ரைடர் (Traffic Rider)

ஹாலிவுட் திரைப்படங்களில் டாம் குரூஸ் எப்படி வளைந்து நெளிந்து டிராபிக்கல் பைக் ஓட்டுவாரோ, அதைப் போல் இந்த கேம் நெரிசலான டிராபிக் சாலைக்குள் பைக் ஓட்டுவதற்கு அனுமதிக்கிறது.

உண்மையில் இந்த கேம் சரியான த்ரில்லர் கேமாக அமைந்துள்ளது. நம்மூரில் இப்படி வண்டி ஓட்ட முடியாது, ஆனாலும் உங்கள் ஃபோனில் இப்படி பைக் ஓட்டி உங்கள் ஆசையைத் தீர்த்துக் கொள்ளலாம்.

5. பே பேக் 2 (Payback 2)

GTA கேம் பெரியவர்களுக்கு இந்த கேம் கட்டாயமாக பிடிக்கும். கார், பைக், ராக்கெட், பீரங்கி, ஹெலிகாப்டர், துப்பாக்கி சண்டை என்ற பல விதங்களில் இந்த கேம உங்களை மிரள வைக்கிறது.

ஆஃப்லைனில் இப்படி ஒரு கேமா? என்று நீங்களே ஆச்சரியப்படும் விதத்தில் இந்த கேம் அமைந்துள்ளது. இந்த கேம் ஆண்ட்ராய்டு வெர்ஷன் 5.0 மற்றும் அதற்கு மேல் உள்ள மாடல்களில் செயல்படும்.

6. ஆஸ்பிளாட் நைட்ரோ (Asphalt Nitro)

இந்த கேமை பற்றி அறியாதவர்களே இருக்க முடியாது. கூகுள் பிளே ஸ்டோரில் நீங்கள் திறந்தவுடன் காண்பிக்கப்படும் முதல் கார் ரேஸ் கேம் இதுவாகத் தான் இருக்கும்.

ஆஃப்லைனில் விளையாடுவதற்கு மிகவும் சிறந்த கேம் என்றால் அது இதுதான். வேர்ல்ட் ஃபேமஸ் கேமும் இதுதான். ஆண்ட்ராய்டு 4.1 மற்றும் அதற்கு மேல் உள்ள மாடல்களில் சிறப்பாகச் செயல்படும்.

7. ஸ்டிக் கிரிக்கெட் பிரீமியர் லீக் (Stick Cricket Premier League)

7. ஸ்டிக் கிரிக்கெட் பிரீமியர் லீக் (Stick Cricket Premier League)

ஆஃப்லைனை விளையாட கிடைக்கும் சிறந்த கிரிக்கெட் கேம் இது தான். இந்த கேம் ஆண்ட்ராய்டு வெர்ஷன் 5.1 மற்றும் அதற்கு மேல் உள்ள மாடல்களில் விளையாடக் கிடைக்கிறது.

கிரவுண்ட் சென்று விளையாட முடியாத நேரத்தில் உங்கள் ஸ்மார்ட் ஃபோனில் இருந்த கிரிக்கெட் கேம் விளையாடி சிக்ஸர்களையும் பௌண்டரிகளையும் குவிக்கலாம்.

8. ஷேடோ பைட் 3 (Shadow Fight 3)

தரமான ஸ்டண்ட் உடன், மிரளவைக்கும் குங்ஃபூ ஸ்டைல் ஹஸ்டல் கேம் என்றால் அது இந்த shadow fight 3 கேம் தான்.

உண்மையில் நீங்கள் ஒரு நிஞ்சாவாகவும், சாமூராய்யாகவும் இந்த கேமில் களம் இறங்கி எதிரிகளை தொம்சம் செய்யலாம்.

இது ஆண்ட்ராய்டு வெர்ஷன் 5.1 மற்றும் அதற்கு மேல் கொண்ட மாடல்களில் இயங்கும்.

9. சர்வைவர் (Survivor.io)

படையெடுத்து வரும் ஜாம்பி கூட்டங்களை ஸ்போர்ட்ஸ் நோக்கத்துடன் வேட்டையாடும் கேம் தான் இந்த சர்வைவர்.

ஆஃப்லைனில் உங்கள் நேரத்தைச் சிறிது குஷி உடன் பொழுதுபோக்க இந்த கேம் பெஸ்ட் கேம் ஆகும்.

இது ஆண்ட்ராய்டு வெர்ஷன் 5.0 மற்றும் அதற்கு மேல் கொண்ட மாடல்களில் இன்ஸ்டால் செய்யக் கிடைக்கிறது.

10. டூ டாட்ஸ் (Two Dots)

மனதிற்கு அமைதியும் உங்களை அதிகமாக ரிலாக்ஸ் செய்யவும் இந்த கேம் உதவுகிறது.

உங்கள் டிஸ்ப்ளேயில் காண்பிக்கப்படும் புள்ளிகளை சேர்த்துக் கொண்டே இருந்தால் போதும் பேக்ரவுண்டில் கேட்கும் இதமான மியூசிக் உங்களை சாஃப்டாக்கி விடும்.

இந்த கேமும் ஆண்ட்ராய்டு வெர்ஷன் 5.1 மற்றும் அதற்கு மேல் கொண்ட மாடல்களில் விளையாட கிடைக்கிறது.

இந்த டாப் 10 ஆஃப்லைன் கேம்களை உங்கள் ஃபோனில் இன்ஸ்டால் செய்து விளையாடிப் பாருங்கள் உங்கள் நேரம் போவதே தெரியாது.

Best Mobiles in India

English summary
These are the top 10 most downloaded offline android games in the world.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X